கிறிஸ்தவச் சேவை

34/289

உற்பத்தியாளர்கள் அல்ல, நுகர்வோர்

கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள், பரலோகத்திற்கு முன் விசாரணையில் நிற்கிறார்கள். தேவசேவையில் உற்சாகமின்மையும், அதற்கான முயற்சியில் தளர்வும் காணப்படுவதால் உண்மையற்றவர்களாகத் தீர்க்கப்படுவார்கள். தாங்கள் செய்கிற ஊழியத்தை மிகச்சிறப்பாகச் செய்வார்களானால், ஆக்கினைக்கு ஆளாகமாட்டார்கள்; முழு ஈடுபாட்டுடன் ஊழியத்தைச் செய்வார்களானால், இதைவிட இன்னும் அதிகமாகச் சாதிக்கலாம். சுய மறுப்பின் ஆவியையும், சிலுவையைச் சுமக்கிற மனநிலையையும் பெருமளவில் தாங்கள் இழந்துபோனதை அவர்களும் அறிவார்கள்; மற்றவர்களும் அறிவார்கள். அநேகர் இருக்கிறார்கள்; பரலோகப்புத்தகங்களில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக, ‘உற்பத்தியாளர்கள் அல்ல,நுகர்வோர்’ என்று எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருக்கிறபலரால் அவருடைய நாமம் அவமதிக்கப்படுகிறது; அவருடைய அழகு மறைக்கப்படுகிறது; அவருடைய கனத்திற்கு இழுக்குண்டாகிறது. சபைப் பதிவேடுகளில் பெயர்கள் இருந்தும், கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்படாத அநேகர் இருக்கிறார்கள். அவருடைய போதனைக்கு அவர்கள் செவிகொடுப்பதில்லை; அவருடைய வேலையைச் செய்வதுமில்லை.அதனால் எதிரியின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்கள். நன்மையுண்டாக்குகிற எதையும் அவர்கள் செய்வதில்லை; எனவே கணக்கிடமுடியாத பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கானது ஜீவனுக்கேதுவான ஜீவவாசணையாக இராததால், மரணத்துக்கேதுவான மரணவாசனையாக இருக்கிறது. 1 TamChS 62.2