கிறிஸ்தவச் சேவை

35/289

கற்பனையைக் கைக்கொள்ளுதல் பாவத்திற்கான முக்காடா?

தேவனுடைய பிரமாணத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் மத்தியில் இதே ஆபத்து இன்று காணப்படுகிறது. கற்பனைகளை மிக உயர்வாக மதிப்பதால் தேவனுடைய தீர்ப்பிலிருந்து அதுதங்களைக் காப்பாற்றிவிடும் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களின் தீமையைக் கண்டித்தால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பாவத்தை பாளையத்தைவிட்டு வெளியேற்றுவதில் தேவ ஊழியர்கள் மட்டுமீறிய வைராக்கியம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாவத்தை வெறுக்கிற தேவன், தம் கற்பனைகளைக் கைக்கொள்வதாகச் சொல்கிறவர்கள் சகல அக்கிரமங்களிலிருந்தும் வெளியேறும்படி அழைக்கிறார். பாவம் எவ்வாறு பண்டைய இஸ்ரவேலர் மத்தியில் கொடிய விளைவுகளைக் கொண்டு வந்ததோ அப்படியே வேதவசனத் திற்குக் கீழ்ப்படியவும்,மனந்திரும்பவும் மறுக்கிற இன்றைய தேவ மக்கள்மேலும் கொண்டு வரும். ஓர் எல்லை இருக்கிறது; அதற்கு மேல் அவர் தம் நியாயத்தீர்ப்புகளைத் தாமதியார். 2 TamChS 63.1