கிறிஸ்தவச் சேவை

33/289

தாமதம் அழிவுக்கு ஏதுவானது

ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும் என்றும், வலுக்கட்டாயமாக அது தங்களை ஆட்கொள்ளவும் என்றும் தேவ மக்கள் காத்திருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு தவறானது. அவர்கள் ஏமாற்றமடைவார்கள். அவர்கள் செயல்பட வேண்டும்; தாங்கள் செய்யவேண்டிய வேலையை தாங்களாகவே செய்ய வேண்டும், தங்களை உள்ளபடி அறிகிற அறிவைத் தரும்படி தேவனிடம் ஆர்வத்தோடு கேட்கவேண்டும். நம்மை உசுப்பிவிடவும், கேட்கிற அனைவருடைய இருதயங்களிலும் சத்தியம் ஆழமாகப் பதியவும் நம் கண்முன்னால் நாம் காண்கிற காட்சிகளே போது மானவை. பூமியின் அறுவடை கிட்டத்தட்ட அறுப்புக்குத் தயாராக உள்ளது. 1 TamChS 61.4

ஆனால் சிலர், தற்போதைய தங்களுடைய வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குப்பதிலாக, மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிற தங்களுடைய திறனை மிகவும் அதிகரிக்கிற ஆவிக்குரிய எழுச்சியுண்டாகும் விசேஷித்த தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். தங்களுடைய தற்போதைய கடமைகளையும் சிலாக்கியங்களையும் புறக்கணித்து, தங்கள் விளக்கு மங்கி எரிய அனுமதிக்கிறார்கள். அதேசமயம், தங்கள் பங்கிற்கு எதுவுமே செய்யாமல் விசேஷித்த ஆசீர்வாதத்தின் பாத்திரங்களாக உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாற்றமடைந்து, சேவைக்குத்தகுதியாகப்போகிற ஒரு காலத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். 2 TamChS 62.1