கிறிஸ்தவச் சேவை

32/289

எழுப்புதலும் சீர்திருத்தமும் தேவை

எதிர்பாராமல் உலகத்தாரை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தப் போகிற ஒரு நிகழ்வுக்காக கிறிஸ்தவர்கள் ஆயத்தப்படவேண்டும். வேத வசனத்தை கவனமாக ஆராய்தல், அதன் நியதிகளின்படி வாழ்வதற்காக கடுமையாகப் பிரயாசப்படுதல் ஆகியவை மூலம் இந்த ஆயத்தத்தைச் செய்ய வேண்டும். எழுப்புதலும் சீர்திருத்தமும் உண்டாகவேண்டுமென்று தேவன் வேண்டுகிறார். 2 TamChS 59.2

மெய்யான தேவபக்தியில் எழுப்புதல் நமக்குள் தேவைப்படுகிறது; அதுதான் அனைத்துத் தேவைகளிலும் மிகப்பெரிய, மிக அவசரமான தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்ய நாடுவதே நம் முதல் வேலையாக இருக்கவேண்டும். 1 TamChS 60.1

முழு அளவு சீர்திருத்தம் நடைபெறுவதற்கான நேரம் வந்திருக்கிறது. இந்தச் சீர்திருத்தம் துவங்கும்போது, ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் ஜெப ஆவி மூண்டு, பிரிவினையும் சச்சரவுமான ஆவியை சபையை விட்டு அகற்றிப்போடும். 2 TamChS 60.2

பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தால் எழுப்புதலும் சீர்திருத்தமும் நடைபெறவேண்டியுள்ளது. எழுப்புதலும் சீர்திருத்தமும் இரு வேறு விஷயங்கள். எழுப்புதல் என்பது ஆவிக்குரிய வாழ்க்கை புதுப்பிக்கப்படுவதையும், மனத்திறன்களும் இருதயத்தின் ஆற்றல்களும் உயிர்ப்பிக்கப்படுவதையும், ஆவிக்குரிய மரணத்திலிருந்து உயிர்த்தெழப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது. சீர்திருத்தம் என் பது ஒழுங்கில் மாற்றத்தையும், எண்ணங்களிலும் கருத்துகளிலும் பழக்கவழக்கங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. சீர்திருத்தமானது எழுப்புதலின் ஆவியோடு கூட காணப்படாவிட்டால் நீதியின் நற்கனியைக் கொடுக்காது. எழுப்புதலும் சீர்திருத்தமும் தங்களுக்குரிய வேலையைச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யும்போது அவை ஒன்றோடொன்று கலக்க வேண்டும். 3 TamChS 60.3

நாம் இதுவரை கண்டிருப்பதைவிட அதிகதூய்மையும் பரிசுத்தமுமான பணிக்கு வேதவாக்கியங்கள் அழைக்கவில்லையா? பரிசுத்த ஆவியானவருடைய கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் முழு அளவிலான சீர்திருத்தப் பணியை தலைமையேற்று நடத்தும்படி தேவன் அழைக்கிறார். நமக்குமுன் ஒரு பிரச்சனை இருப்பதைக் காண்கிறேன். அதைச் சரிசெய்ய தம் ஊழியர்கள் வரும்படி தேவன் அழைக்கிறார். கடந்துபோன வருடங்களைவிட இப்போது ஒவ்வோர் ஆத்துமாவும் மிக ஆழமான, மெய்யான அர்ப்பணிப்போடு தேவனுக்குமுன் நிற்கவேண்டும். இராப்பொழுதுகளில் எனக்கு முன் சமீபத்தில் காட்டப்பட்ட காட்சிகள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு மிகப்பெரிய இயக்கம், அதாவது எழுப்புதலின்பணி, பல இடங்களில் நடைபெறுவதைக் கண்டேன். தேவனுடைய அழைப்புக்கு இணங்கி, பணிசெய்ய நம் மக்கள் புறப்பட்டுச் சென்றார்கள். 4 TamChS 60.4

தேவமக்கள் மத்தியில் நடைபெறுகிறமிகப்பெரிய சீர்திருத்த இயக்கக்காட்சிகள் இராத்தரிசனங்களில் எனக்குக்காட்டப்பட்டன. அநேகர் தேவனைத் துதிக்கிறார்கள். வியாதியஸ்தர் குணமடைந்தார்கள். வேறு அற்புதங்களும் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கானவர்கள்,ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பங்களைச் சந்தித்து, வேத வசனத்தை அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை இருதயங்களில் குற்றத்தை உணர்த்திற்று; மெய்யான மனமாற்றத்தின் ஆவி வெளிப்பட்டது. சத்தியத்தை அறிவிக்கும்படி எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் திறக் கப்பட்டன. பரலோகச் செல்வாக்கால் உலகம் பிரகாசித்ததுபோலக் காணப்பட்டது. தாழ்மையும் உண்மையுமுள்ள தேவ பிள்ளைகள் மிகுந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள். 1 TamChS 61.1

தேவ மக்கள் மத்தியில் சீர்திருத்தம் காணப்படுவது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. நமக்காக தம் ஜீவனையே கொடுத்தவரை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறார்களா என்கிற கேள்விக்கு திருச்சபையின் தற்போதைய நிலை வழிவகுத்திருக்கிறது. 2 TamChS 61.2

சோம்பல்,செயலற்ற நிலை என்கிற நிந்தைகள் சபையிலிருந்து முற்றிலும் அகற்றப்படும்போது, தேவ ஆவியானவர் கிருபையாக வெளிப்படுவார். தெய்வீகவல்லமை வெளிப்படும். சேனைகளின் தேவனுடைய தெய்வீக கிரியைகளை திருச்சபை காணும். சத்தியத்தின் ஒளியானது, திடமாகவும் தெளிவாகவும் பிரகாசிக்கும். அப்போஸ்தலர்களுடைய நாட்களைப்போல அநேக ஆத்துமாக்கள் தவறுகளிலிருந்து சத்தியத்திற்குத் திரும்புவார்கள். கர்த்தருடைய மகிமையின் வெளிச்சத்தால் பூமி நிறைந்திருக்கும். 3 TamChS 61.3