கிறிஸ்தவச் சேவை
அர்ப்பணிப்பு
தேவசேவையில் முற்றிலும் ஈடுபடுவதுதான் மெய்யான பரிசுத்தம். மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நிபந்தனை இது. எதையும் தனக்கென ஒதுக்காத அர்ப்பணிப்பையும், அரைகுறை மனதோடு செய்யாத சேவையையும் கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிறார். மனதும் சிந்தையும் ஆத்துமாவும் பெலமும் அவர் தமக்கு வேண்டுமென்கிறார். சுயநலத்தைப்பேணி வளர்க்கக்கூடாது. தனக்காக வாழ்கிறவன் கிறிஸ்தவன் அல்ல. 2 TamChS 307.1
தேவனோடு உடன் வேலையாட்களாக மாற விரும்புகிற அனைவரும் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? நம்மை நாமே நம்பக்கூடாதென்கிற பாடம்தான்.அப்போது கிறிஸ்துவின் குணம் தங்களுக்குள் செலுத்தப்பட ஆயத்தமாகிறார்கள். அறிவியலுக்குப் பெயர்போன பள்ளிகளில் கல்விபயின்று, இதை அவர்கள் பெறமுடியாது. தெய்வீக ஆசிரியரிடமிருந்து மட்டுமே கிடைக்கிற ஞானத்தால் இதைப் பெறமுடியும். 3 TamChS 307.2
அசாதாரணமான சூழ் நிலைகளில் ஒருவன் ஆவிக்குரிய குதூகலத்தோடு காணப்படுவது அவன் கிறிஸ்தவன் என்பதற்கான உறுதியான ஆதாரம் அல்ல. பரிசுத்த தன்மை என்பது பரபரப்பான ஓர் உணர்வு அல்ல; அது சித்தத்தை முற்றிலுமாக தேவனிடம் அர்ப்பணிப்பதாகும்; அது தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்படியும் வாழ்வதாகும்; அது நம் பரம பிதா வின் சித்தத்தைச் செய்வதாகும்; அது வெளிச்சத்தின் காலத்தைப் போலவே, இருளின் காலத்திலும் தேவனை நம்புவதாகும்; அது தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பதாகும்; அது கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையுடன் தேவனைச் சார்ந்திருப்பதாகும். 1 TamChS 307.3