கிறிஸ்தவச் சேவை

245/289

முழுமனது

தேவனுடைய மக்கள் முழுமனதோடு தேவனை முற்றிலுமாகச் சேவிக்கவேண்டும்; தங்களுக்கு எந்தக்கனத்தையும் எடுத்துக்கொள்ளாதவர்களாக இருக்கவேண்டும்; ஆண்டவரை மட்டுமே சேவிப்பதாகச் செய்துகொண்ட பரிசுத்த உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டிருப்பதை நினைவுகூருகிறவர்களாக இருக்கவேண்டும். 2 TamChS 308.1

முற்றிலும் முழுமனதோடு தீர்மானம் செய்த ஆண்களும் பெண்களும் இப்போது தேவனுக்காக நிற்பார்கள். கிறிஸ்து தம் சீடர்களை மீண்டும் மீண்டும் புடைத்தெடுத்தார்; இறுதியாக கிறிஸ்தவச் சபைக்கு அஸ்திபாரமிடுவதற்கு பதினொருவரும் ஒரு சில பெண்களும்மட்டுமே மீதமிருந்தார்கள். பாரங்களைச் சுமக்க வேண்டியது வரும்போது பின்வாங்குபவர்கள் இருக்கிறார்கள்; ஆனால், திருச்சபையானது கொழுந்துவிட்டு எரியும்போது, அவர்களுக்குள் ஆர்வம் பற்றிக்கொள்ளும், பாடல்பாடி ஆராவாரித்து, களிப்படைவார்கள்; ஆனால் அவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். உற்சாகம் குறைந்ததுமே, உண்மையான காலேபுகள் ஒரு சிலர் தான் முன்னே வந்து, தாங்கள் நியதியில் தடுமாறாமலிருப்பதைக் காட்டுவார்கள். சாரமற்றுப்போகாத உப்பாக இவர்கள் இருக்கிறார்கள். பணி கடினமாகும்போதுதான் மெய்யான பணியாளர்களை திருச்சபை உருவாக்குகிறது. 3 TamChS 308.2

ஒருவன் தன் இருதயம் முழுவதையும் பணியில் ஈடுபடுத்தாமல், கிறிஸ்துவை அறிகிறஅறிவின் மேன்மைக்காக அனைத்தையும் நஷ்டமென்று எண்ணாத வரையிலும் அவன் வெற்றிபெற முடியாது. தனக்கென எதையும் வைத்திருக்கிற எவனும் கிறிஸ்துவின் சீடனாகவும் முடியாது. அவருடைய உடன் வேலையாளாகவும் ஆக முடியாது. 4 TamChS 308.3

அவர்கள் யூகத்திற்கு இடமளிக்கக்கூடாது; அவிசுவாசிகளுடன் தொழில் ஒப்பந்தங்களைச் செய்யக்கூடாது; ஏனென்றால், தேவன் கொடுத்திருக்கிற வேலையைச் செய்யாதபடிக்கு இது அவர்களைத் தடுக்கும். 5. TamChS 308.4

அரைகுறை மனதோடான சேவையை மீட்பர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தேவனுடைய பணியாளர் சுய அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அனுதினமும் கற்றுக்கொள்ள வேண்டும். 1 TamChS 309.1