கிறிஸ்தவச் சேவை

243/289

தைரியம்

ஒரு மாபெரும் பணி செய்யவேண்டியுள்ளது; விரிவான திட்டங்களைப் போடவேண்டியுள்ளது; தேசங்களை விழிக்கச் செய்வதற்கு குரல் எழுப்ப வேண்டியுள்ளது. முக்கியமான இந்த நெருக்கடி வேளையில் ஊழியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்கள் விசுவாசத்தில் பெலவீனரும் தடுமாற்றமுள்ளவர்களும் அல்ல. வல்லவர்களுக்கொத்த தைரியமும், இரத்தச்சாட்சிகளுக் கொத்த விசுவாசமும் தேவை. 2 TamChS 306.1

விசுவாசத்தோடு அவருடைய பெலத்தைப்பற்றிக் கொண்டால் மிகவும் நம்பிக்கையற்றதுபோல, அதைரியமூட்டுவது போலக் காணப்படுகிற நிலைமையைக்கூட அற்புதமாக மாற்றுவார். தம் நாமத்தின் மகிமைக்காக இதைச் செய்வார். நம்பிக்கையற்றும் சோர்ந்தும் இருப்போருக்கு தைரியத்தைக் கூறும்படிக்கு தம்மேல் நம்பிக்கையுள்ள உண்மையுள்ளோரை தேவன் அழைக்கிறார். TamChS 306.2

நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும், உயிருள்ள விசுவாசத்தால் அவரை உள்ளபடி வெளிப்படுத்தவும் ஆண்டவர்தாமே நமக்கு உதவி செய்வாராக. 3 TamChS 306.3

தேவனுக்குப் பூரணமான சேவைசெய்வதற்கு நம்பிக்கையும் தைரியமும் இன்றியமையாதவை. இவை விசுவாசத்தின் பலன். மனச்சோர்வு பாவம்; அதற்குக் காரணம் சொல்லமுடியாது. 4 TamChS 306.4

அவர்கள் தைரியத்தையும் ஆற்றலையும் விடாமுயற்சியையும் பெற்றிருக்கவேண்டும். சாத்தியமற்றவைபோல தோன்றுபவை வெளிப்படையாக அவர்களுடைய வழிகளைத் தடைசெய்யலாம்; அவருடைய கிருபையால் அவர்கள் தொடர்ந்து முன்னேறவேண் டும். பிரச்சனைகளைக்குறித்துப்புலம்புவதற்கு பதிலாக,அவற்றின் மேல் ஜெயங்கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள். எதைக் குறித்தும் கலங்காமல், எல்லாவற்றையுங்குறித்து அவர்கள் நம்பிக்கையோடே இருக்கவேண்டும். கிறிஸ்து தம்முடைய ஈடு இணையற்ற அன்பு என்கிற பொற்சங்கிலியால் தேவ சிங்காசனத்தோடு அவர்களைக் கட்டியிருக்கிறார். சகல வல்லமைக்கும் ஆதாரமானவரிட மிருந்து புறப்பட்டு வருகிற, பிரபஞ்சத்திலேயே மிகமேலான செல்வாக்கை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். தீமையை எதிர்ப்பதற்கான வல்லமையை அவர்கள் பெறவேண்டும்; பூமியோ மரணமோ நரகமோ அதிகாரங்கொள்ள முடியாத வல்லமையை அவர்கள் பெறவேண்டும்; கிறிஸ்து வெற்றிபெற்றதுபோல வெற்றிபெற அவர்களைத் திறனுள்ளவர்களாக்கும் வல்லமையை அவர்கள் பெறவேண்டும். 1 TamChS 306.5