கிறிஸ்தவச் சேவை

242/289

விசுவாசம்

தேவ ஊழியர்களுக்குதேவனில் விசுவாசம் அவசியம். அவர்களுடைய பிரயாசங்களை அவர் கவனிக்காமல் இல்லை. அவர்களுடைய ஊழியத்தை பெரிதாக மதிக்கிறார். தேவனுடைய உடன் வேலையாட்களுடன் சேர்ந்து வேலைசெய்ய தெய்வீக ஏதுகரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேவன் தாம் சொன்னபடி செய்யமாட்டார் என்றும், தம் ஊழியர்களைக்கவனிக்க அவருக்கு நேரமில்லை என்றும் நாம் நினைத்தால், நம் சிருஷ்டிகரைக் கனவீனப்படுத்துகிறோம். 2 TamChS 305.1

தேவ ஊழியருக்கு உறுதியான விசுவாசம் தேவை. தோற்றங்கள் நம்பிக்கை தராதவையாக இருக்கலாம்; ஆனால் அதிக இருட்டான சமயத்தில் அப்பால் வெளிச்சம் இருக்கிறது. விசுவாசத்தோடு தேவனில் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கிறவர்கள் அனுதினமும் புதுப்பெலன் அடைவார்கள். 3 TamChS 305.2

காலத்தாலோ கடின உழைப்பாலோ பெலவீனப்படுத்த முடியாத உறுதியான நோக்கமும், நிலைதடுமாறாத நியதியும் மீள் தன்மையும் மெய்யான விசுவாசத்தில் காணப்படும். 4 TamChS 305.3

கிறிஸ்தவ வாழ்க்கை பெரும்பாலும் ஆபத்துகளால் சூழப்படுகிறது; கடமைகளைச் செய்வது கடினமாகத் தோன்றுகிறது. அழிவு முன்னால் நெருங்கியிருப்பது போலவும், அடிமைத்தனம் அல்லது மரணம் பின்னால் இருப்பதுபோலவும் கற்பனையில் தோன்றுகிறது. ஆனாலும், தொடர்ந்து செல்’ என்று தேவனுடைய சத்தம் தெளிவாகத் தொனிக்கிறது. இருளையும் தாண்டி நாம் பார்க்க முடியாவிட்டாலும், கொடிய அலைகள் பாதையில் சூழ்ந்தாலும் இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். நாம் முன் னேறிச்செல்ல இடையூறாகவுள்ள தடைகள் தயங்குகிற, சந்தேகப்படுகிற ஆவிக்கு முன்பாக ஒருபோதும் மறைந்துபோகாது. நிச்சயமின்மையின் நிழலெல்லாம் மறையட்டும்.தோல்வி ஆபத்தெல்லாம் நீங்கட்டும் என்று கீழ்ப்படியாமலே இருக்கிறவர்கள் ஒருபோதும் கீழ்ப்படியமாட்டார்கள். ‘ இடையூறுகள் நீக்கப்படும் வரையிலும் காத்திருப்போம். அப்போதுதான் நம் பாதை தெளிவாகத் தெரியும்’ என்று அவநம்பிக்கை கிசுகிசுக்கிறது. ஆனால், விசுவாசமானது எல்லாவற்றையும் நம்பி, சகல எதிர்பார்ப்போடும் தொடர்ந்து செல்கிறது. 1 TamChS 305.4