கிறிஸ்தவச் சேவை

241/289

எளிமை

விசுவாசிக்கிற அனைவரையும் திருச்சபையில் சேர்க்கும் படிக்கு என்னுடைய நாமத்தினால் புறப்பட்டுச் செல்லுங்கள் என்று சீடர்களிடம் கிறிஸ்து சொன்னபோது, எளிமையாக இருக்கவேண்டியதின் அவசியத்தை மிகத்தெளிவாக அவர்கள் முன் வைத்தார். எவ்வளவுக்கு குறைவாக ஆடம்பரமும் பகட்டும் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு அதிகமாக நன்மைக்கான செல்வாக்கு இருக்கும். கிறிஸ்து எப்படிப் பேசியிருந்தாரோ, அதே அடக்கத்தோடு சீடர்கள் பேசவேண்டியிருந்தது. 4 TamChS 304.3

மிகவும் எளிமையான விதத்தில் பல்லாயிரக்கணக்கானோரை ஆதாயப்படுத்தலாம். உலகத்தில் தாலந்துமிக்க ஆண்களாக, பெண்களாகக் கருதப்படுகிற அறிவுமேதைகளை பெரும்பாலும் சாதாரண வார்த்தைகளால் புத்துணர்வுகொள்ளச் செய்யலாம். ஆனால் அந்த வார்த்தைகளைப் பேசுகிறவர் தேவன்மேல் அன்புள்ளவராக இருக்கவேண்டும்; உலகப்பிரகாரமான ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு விஷயம் குறித்து மிக ஆழமாகப் பேசுவதுபோல, அந்த அன்பு குறித்து இவர் இயல்பாகப் பேசவேண்டும். அநேக சமயங்களில், ஆராய்ச்சி செய்து ஆயத்தத்துடன் வழங்கும் செய்தியானது எதிர்பார்க்கிற விளைவை ஏற்படுத்துவதில்லை. ஆனால் உண்மையும் நேர்மையும் கொண்ட தேவனுடைய மகனோ மகளோ சாதாரணமாகச் சொல்கிற செய்தி, கிறிஸ்துவுக்கும் அவருடைய அன்புக்கும் எதிராக வெகுநாட்களாக அடைக்கப்பட்டிருந்த இருதயக்கதவுகளைத் திறக்கிற வல்லமையைப் பெற்றிருக்கும். 1 TamChS 304.4