கிறிஸ்தவச் சேவை
பரிவும் சிநேகிதத்தன்மையும்
தேவனுடைய நோக்கம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் மனிதர்களுடைய வேதனைகளைக் கண்டு பரிவுகாட்டுகிற ஆண்களும் பெண்களும் தேவைப்படுகிறார்கள்; ஆனால் அத்தகைய பரிவு அரிதாகவே காணப் படுகிறது. 4 TamChS 303.3
கிறிஸ்துவைப்போன்ற பரிவு நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது; தவறே செய்யாதவர்கள்போலக் காணப்படுபவர்கள்மேல் மட்டுமல்ல; ஏழைகள்மேலும், உபத்திரவப்படுவோர் மேலும், தவறுகளில் விழுந்து பாவம் செய்து மனந்திரும்பி சோதிக்கப்பட்டு, தைரியமிழந்து பாடனுபவிக்கிற ஆத்துமாக்கள் மேலும் பரிவு காட்டவேண்டும். அவர்களுடைய குற்றங்குறைகளை உணர்ந்து, இரக்கமுள்ள நம் பிரதான ஆசாரியன்போல மனதில் தொடப்பட்டவர்களாக நம் சகமனிதர்களை நாடிச்செல்லவேண்டும். 1 TamChS 303.4
ஒருவருக்கொருவர் பரிவும் அன்பும் காட்டாததால் நாம் அதிகம் இழக்கிறோம். விடுதலைபற்றிப் பேசுகிறவன், தனக்குள்தானே முடங்கிவிட்டால், அவன் நிறைவேற்றுவதற்காக தேவன் வைத்திருந்த திட்டத்தைச் செய்யத் தவறுகிறான். நாம் தேவனுடைய பிள்ளைகள்; பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் நம் சந்தோஷம் உள்ளது. தேவனுக்காகவும் மனிதருக்காகவும் நிறைவேற்ற கடமைகள் உள்ளன. இவ்வாழ்க்கையில் நாம் அனைவருமே அவரவரவர் பங்கை நிறைவேற்றவேண்டும். நமக்குள் உள்ள சமுகப்பண்புகளை சரியாகப் பேணிவளர்ப்பதுதான் நம் சகோதரர் மேல் நமக்கு பரிவைக்கொண்டுவருகிறது; பிறருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முயற்சிக்கும்போது, நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. 2 TamChS 304.1
ஒரு பரிசேயனுடைய வீட்டிற்கு இரட்சகர் விருந்திற்குச் சென்றிருந்தார். ஏழைகளானாலும் பணக்காரரானாலும்,அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வார்; அங்கு நிலவுகிற காட்சியை வைத்து ஏதாவது படிப்பினை சொல்லிக்கொடுப்பது அவருடைய வழக்கம். 3 TamChS 304.2