கிறிஸ்தவச் சேவை

239/289

உறுதி மாறாத்தன்மை

மெய்யான கிறிஸ்தவர் உணர்ச்சித்தூண்டுதலினால் அல்ல, நியதியினால் தேவனுக்காக ஊழியம் செய்கிறார். ஒரு நாளோ ஒரு மாதமோ அல்ல, வாழ்நாள் முழுவதும் செய்கிறார். 4 TamChS 302.3

இரட்சகர் களைப்பின்றி பிரயாசப்பட்டார். எத்தனை மணி நேரம் வேலை செய்தேன் என்று அவர் கணக்குப் போடவில்லை. மனிதர்களுக்காக ஊழியம் செய்வதில் தம் நேரத்தையும் தம் இருதயத்தையும் தம் ஆற்றலையும் செலவிட்டார். பகல் முழுவதையும் பணி செய்ய அர்ப்பணித்திருந்தார்; புத்திசாலியான எதிரியைச் சந்திப்பதற்கு ஆயத்தமாகவும், மனிதர்களைப் புதுப்பிக்கிற தம் பணியில் பெலப்படவும் இரவு முழுவதையும் ஜெபத்தில் செலவிட்டிருக்கிறார். தேவனை நேசிக்கிறவர் எட்டு மணி நேர வேலைமுறையை வைத்து தன் ஊழியத்தை அளவிடமாட்டார். எல்லா நேரத்திலும் வேலைசெய்கிறார். கடமையிலிருந்து விலகாதிருக்கிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நன்மை செய்கிறார். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தேவனுக்காக ஊழியம் செய்கிற வாய்ப்பைக் காண்கிறார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் நறு மணத்தை வீசுகிறார். 1 TamChS 302.4

தறிகெட்ட செயலால் தேவ நோக்கத்திற்கு அவமானத்தைக் கொண்டுவருகிறவரும், தன் சக ஊழியர்களுடைய கைகளைத் திடனற்றுப்போகச் செய்கிறவரும் எளிதில் கழுவ முடியாத கறையை தங்கள் குணத்தில் படியச் செய்கிறார்கள்; மேலும், எதிர் காலத்தில் தான் பயன்பட முடியாதபடிக்கு பயங்கரத் தடையை தங்கள் வழிகளில் வைக்கிறார்கள். 2 TamChS 303.1

“என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு சொல்கிறார். நுகமானது சேவையின் ஒரு கருவி. கால்நடைகளுக்கு நுகம்பூட்டி வேலை வாங்குகிறார்கள். நுகம் பூட்டினால்தான் அவற்றின் செயல்திறன் நன்றாக இருக்கும். இந்த எடுத்துக்காட்டு மூலமாக, உயிருள்ளவரையிலும் சேவைசெய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளதாக இயேசு போதிக்கிறார். நாம் அவரோடு உடன் வேலையாட்களாகும்படிக்கு அவருடைய நுகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். 3 TamChS 303.2