கிறிஸ்தவச் சேவை

218/289

தனிப்பட்ட அனுபவத்தின் சாட்சி

கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் ஆதரித்து, ஊக்கப்படுத்துகிற விதத்தில் நம் வார்த்தைகள் இருக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும். நம் அனுபவத்தின் வளமான அத்தியாயங்களை இப்போதைவிட அதிகமாகப் பேசவேண்டும். 3 TamChS 278.2

தேவனோடு பெயருக்கு ஐக்கியம் வைத்திருக்கிற அங்கத்தினர்கள் புதிதானதும் உயிரோட்டமானதுமான அனுபவத்தைப் பெறுவது திருச்சபையில் இருக்கவேண்டும். கிறிஸ்து வெளிப்படாமல் புளித்தும் வறண்டும் காணப்படுகிற சாட்சிகளும் ஜெபங்களும் மக்களுக்கு பிரயோஜனமாயிராது. தேவபிள்ளையென தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒவ்வொருவரும் விசுவாசத்தாலும் வெளிச்சத்தாலும் ஜீவனாலும் நிறைந்திருந்தால், சத்தியத்தைக் கேட்கவருகிறவர்களுக்கு மகிமையான சாட்சி கொடுக்கலாம்! எத்தனையோ ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தலாம்! 4 TamChS 278.3

கிறிஸ்து நம்பத்தகுந்தவர் என்று அறிக்கையிடுவதுதான், தேவனை உலகத்திற்கு வெளிப்படுத்த பரலோகம் தெரிந்துகொண்ட ஏதுகரமாகும். முற்காலப் பரிசுத்த மனிதர்கள் மூலமாக வெளிப் படுத்தப்பட்ட அவருடைய கிருபையை நாம் அறிக்கையிடவேண்டும்; நம் சொந்த அனுபவத்தின் சாட்சிதான் மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கும். தெய்வீக வல்லமை நமக்குள் செயல்படுவதை வெளிப்படுத்தும்போது, நாம் தேவனுக்குச் சாட்சிகளாக இருக்கிறோம். ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையும் வித்தியாசமாக இருக்கும்; மற்றவர்களிடமிருந்து அனுபவமும் மாறுபடும். இத்தகைய நம்முடைய தனித்தன்மையோடு ஸ்தோத்திரம் தம்மை எட்டுவதை தேவன் விரும்புகிறார். தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அவருடைய கிருபையின் மகிமையை அறிவிக்கிற ஒப்புதல் அறிக்கைகளால் அவருக்குப் புகழ்ச்சி உண்டாகும்; இவற்றோடு சேர்ந்து கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையும் காணப்பட்டால், ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக வெற்றிகரமாகக் கிரியை செய்கிற வல்லமையாக அது விளங்கும். 1 TamChS 278.4