கிறிஸ்தவச் சேவை

217/289

கூட்டங்களை ஆர்வமிகுந்தவையாக ஆக்குதல்

எவ்வாறு நற்செய்தி ஊழியம் செய்யவேண்டுமென மக்களுக்குப் போதிக்கிற வகையில் நற்செய்தி ஊழியக்கூட்டத்தை மாற்று வீர்களாக. 2 TamChS 277.1

நம் ஜெபமும் சமுதாயக்கூட்டங்களும் விசேஷித்த உதவியையும் ஊக்கத்தையும் தருகிற வேளைகளாக இருக்கவேண்டும். இந்தக் கூட்டங்களை ஆர்வமுள்ளவையாக, பிரயோஜனமிக்கவையாக மாற்றுவதில் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய ஒரு வேலை உள்ளது. தேவனுக்குரியவற்றில் தினமும் புதிய அனுபவத்தைப் பெறுவதாலும், அவருடைய மக்கள் கூடுகிற இடங்களில் அவருடைய அன்பைப் பேச தயங்காமல் இருப்பதாலும் இதை மிகச்சிறப்பாக நிறைவேற்றலாம். உங்களுடைய இருதயங்களில் எவ்வித இருளும் அவநம்பிக்கையும் புகுவதற்கு நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், உங்களுடைய கூட்டங்களில் அவை வெளிப்படாது. 3 TamChS 277.2

நம் கூட்டங்களை மிகுந்த ஆர்வமுள்ளவையாக மாற்ற வேண்டும். பரலோகத்தின் சூழலால் அவை நிறைந்திருக்க வேண்டும். வெறுமனே நேரத்தைக் கடத்தவேண்டும் என்பதற்காக நீண்ட, வறண்ட பிரசங்கங்களும், சடங்காச்சார ஜெபங்களும் காணப்படாதிருப்பதாக.அனைவரும் தங்கள் பங்கை துரிதமாகச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்; அவரவருடைய பங்குமுடிந்ததும், கூட்டத்தை முடிக்கவேண்டும். இவ்வாறு கடைசிவரைக்கும் கூட்டத்தை ஆர்வமிக்கதாக்கலாம். இதுதான் தேவனுக்குப் பிரியமான ஆராதனையைச் செய்வதாகும். அவருடைய ஆராதனையை ஆர்வமிக்கதாக, ஈர்க்கிறதாக மாற்றவேண்டும்; வெற்றுச் சடங்காக தரங்குறைவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்காக நாம் வாழவேண்டும்; அப்போது கிறிஸ்து நமக்குள் வாசஞ்செய்வார். நாம் கூடிவரும்போது, அவருடைய அன்பு நம் இருதயங்களில் காணப்படும். வனாந்தர நீரூற்றுபோலப் பொங்கி, அனைத்திற்கும் புத்துயிரூட்டி, அழிந்துபோகிற நிலையில் உள்ளவர்களில் ஜீவத் தண்ணீரைப் பருகவேண்டுமென்கிற ஆர்வத்தை உண்டாக்கும். 4 TamChS 277.3

நற்செய்தி ஊழியக்கூட்டத்திற்குச் சென்று, நீண்ட பிரசங்கம் செய்வதால், வாலிபர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடலாமென கற்பனை செய்யாதீர்கள். உயிரோட்டமான ஆர்வம் காணப்படுவதற்கான வழிகளைத் திட்டமிடுங்கள். இரட்சகருக்காக தாங்கள் செய்ய முயற்சித்ததையும், தங்களுக்குக் கிடைத்த வெற்றியையும் குறிப்பிட்டு, வாலிபர்கள் வாரந்தோறும் தங்கள் அறிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். அத்தகைய அறிக்கைகளைக் கொண்டுவருவதற்கான தருணமாக நற்செய்தி ஊழியக்கூட்டத்தை மாற்றினால், அது சலிப்புள்ளதாக, ஆர்வமற்றதாக, புளித்துப்போனதாகத் தெரியாது. அது முற்றிலும் ஆர்வம் நிறைந்ததாக இருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுடைய எண்ணிக்கையும் குறையாது. 1 TamChS 277.4

விசுவாசத்தால் கிறிஸ்துவை இறுகப்பற்றிக்கொள்ளும்போது, சத்தியம் ஆத்துமாவில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; ஆவிக்குரிய ஆராதனைகள் சலிப்பூட்டுபவையாக, ஆர்வமற்றவையாக இருக்காது. உங்களுடைய சமுதாயக்கூட்டங்கள் இப்போது ஆவியும் அனலும் இல்லாமல் இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரால் ஊட்டமடையும்; நீங்கள் அறிக்கையிடுகிற கிறிஸ்தவ மார்க்கத்தின் படி வாழும்போது வளமான அனுபவத்தைப் பெறுவீர்கள். 2 TamChS 278.1