கிறிஸ்தவச் சேவை

140/289

13—அச்சு ஊழியம்

முதல் முக்கியத்துவம் தரவேண்டிய வேலை

மற்றதைவிட அதிக முக்கியமான ஓர் ஊழியம் இருக்குமென்றால், அது நம் வெளியீடுகளை மக்களிடம் கொண்டுசென்று, அதன் மூலம் அவர்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்க வழி நடத்துவதாகும். நம் வெளியீடுகளை அந்தக்குடும்பத்தினர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களோடு சேர்ந்தும், அவர்களுக்காகவும் ஜெபிக்கிற ஊழியப்பணி மிகச்சிறந்த ஓர் ஊழியமாகும். 1 TamChS 191.1

“மூன்றாம் தூதனுடைய தூதை அறிவிக்க நான் என்ன செய்யலாம்?” என்று ஒவ்வொரு செவந்த்-டே அட்வென்டிஸ்டும் தன்னையே கேட்பானாக. இந்தச் செய்தியை திருச்சபைகளுக்குக் கொடுக்கும்படி தம் ஊழியருக்கு இதை அறிவிக்க கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். சகல தேசத்தாருக்கும் இனத்தாருக்கும் பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் இதை அறிவிக்கவேண்டும். எவ்வாறு இதை அறிவிக்கவேண்டும்? இந்தச் செய்தியை அறிவிப்பதற்கான ஒருவழி, எழுதப்பட்ட நம் வெளியீடுகளை விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நம் விசுவாசிகள் இந்தக் காலத்திற்கான தூதுகளுள்ள கைப்பிரதிகளையும், சிறியவையும் பெரியவையுமான புத்தகங்களையும் கொடுப்பார்களாக. எல்லா இடங்களுக்கும் சென்று, நம் வெளியீடுகளை விநியோகிப்பதற்கு புத்தக ஊழியர்கள் தேவை. 1 TamChS 191.2

இக்காலத்திற்கான செய்தியை எப்போதும் மக்களுக்கு முன்பாக வைப்பதற்கான தேவனுடைய வழிவகைகளாக புத்தகங்களும் பிற வெளியீடுகளும் இருக்கின்றன. ஆத்துமாக்களுக்குச் சத்தியத்தைச் சொல்லி உறுதிப்படுத்துவதற்கு வேதவசனத்தை வெறுமனே போதிக்கிற ஊழியத்தைவிட வெளியீடுகள் மிக அதிகமான ஊழியத்தைச் செய்யமுடியும். புத்தக ஊழியர்களுடைய ஊழியத்தால் வீடுகளில் இடம்பெறுகிற அமைதியான இந்தத் தூதுவர்கள் எல்லா விதங்களிலும் சுவிசேஷ ஊழியத்தைப்பெலப்படுத்த முடியும். பிரசங்கிக்கப்படுகிற வேதவசனத்தைக் கேட்கிறவர்களுடைய உள்ளங்களில் பரிசுத்த ஆவியானவர் தாக்கத்தை ஏற்படுத்துவது போலவே, புத்தகங்களை வாசிக்கிறவர்களுடைய உள்ளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஊழியக்காரருக்கு உதவி செய்வது போலவே, புத்தகங்கள்மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவும் பணிவிடை தூதர்கள் உதவி செய்வார்கள். 2 TamChS 192.1

புத்தக ஊழியம் முடங்கிப்போக அனுமதியாதிருங்கள். தற்காலச் சத்தியத்தின் வெளிச்சம் அடங்கிய புத்தகங்களை முடிந்த வரை பலருக்குக் கொடுங்கள். இதைச் செய்யவேண்டிய கடமை நம் கான்ஃபரன்ஸ்களின் தலைவர்களுக்கும் பொறுப்பான பதவிகளில் உள்ள மற்றவர்களுக்கும் உள்ளது. 3 TamChS 192.2

நம்முடைய புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள்ள வேதவசன சுவிசேஷ ஊழியத்தின்மூலம் சத்தியத்தின் ஒளியை உலகம் பெறவேண்டும். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபித்துவிட்டதை நம்முடைய வெளியீடுகள் காட்டவேண்டும். 4 TamChS 192.3

சோம்பேறித்தனத்ம், மந்தம், அக்கறையின்மை போன்றவை நம்மில் இருக்கக்கூடாது. உயிருள்ள மனிதர்களைப்போலச் செயல் படவேண்டும். இதற்கே தேவன் தம் மக்களை அழைக்கிறார். மக்களிடம் வெளியீடுகளை எடுத்துச் செல்லவேண்டும்; அவர்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வருந்தி கேட்டுக்கொள்ள வேண்டும். 5 TamChS 192.4

நம்முடைய வெளியீடுகள் இப்போது சுவிசேஷ விதையைத் தூவிவருகின்றன; பிரசங்கிக்கப்படும் வேதவசனத்தைப்போலவே முடிந்தவரை ஏராளமான ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருகிற கருவிகளாகத் திகழ்கின்றன. அந்த வெளியீடுகளை விநியோகிப்பதின் விளைவாகத்தான் எல்லாச் சபைகளும் வளர்ந்துள்ளன. இந்த ஊழியத்தில் கிறிஸ்துவின் ஒவ்வொரு சீடனும் பங்காற்றலாம். 1 TamChS 192.5

பரலோகத் தூதுவர் ஒருவர் நம்மத்தியில் நிண்றார். எச்சரிப்பான போதனை வார்த்தைகளை அவர் பேசினார். ராஜ்யத்தைக் குறித்த சுவிசேஷமான இந்தச் செய்தியை அறியாமல்தான் உலகம் அழிந்துகொண்டிருக்கிறது என்பதையும், ஏற்கனவே அச்சிடப்பட்டு, இன்னும் வெளியிடப்படவேண்டிய வெளியீடுகளில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியை தொலைவிலும் சமீபத்திலும் உள்ள நம் மக்கள் மத்தியில் விநியோகிக்கவேண்டும் என்பதையும் அவர் தெளிவாக விளங்கப்பண்ணினார். 2 TamChS 193.1

தற்காலச் சத்தியத்தின் பரிசுத்த வெளிச்சத்தை உலகத்திற்கு விரைவாகக் கொடுக்கக்கூடிய வழிவகைகளாக புத்தக ஊழியம் இருக்கவேண்டும். 3 TamChS 193.2

இந்த ஊழியப்பிரிவில் சாத்தானும் தீவிரரமாக இயங்கிவருகிறான்; வாலிபர்களின் ஒழுக்கங்களைச் சீர்குலைத்து, எண்ணங்களில் விஷம் விதைக்கும் புத்தகப்படைப்புகளை எங்கும் விநியோகிக்கிறான். நாத்திக வெளியீடுகள் தேசம் முழுவதிலும் விநியோகிக் கப்படுகின்றன. மக்களுடைய சிந்தனைகளை மேம்படுத்தி, நேரடியாக அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டுசெல்லும் வெளியீடுகளை அனுப்பிவைப்பதில் திருச்சபையின் ஒவ்வோர் அங்கத்தினரும் ஏன் ஆழமான ஆர்வங்கொள்ளக்கூடாது? இந்தப் புத்தகங்களும் பிரதிகளும் உலகத்தின் வெளிச்சம் கொடுக்க வெளியிடப்படுகின்றன; ஆத்துமாக்களை மனமாற்றுகிற கருவிகளாகவும் அவை விளங்குகின்றன. 4 TamChS 193.3

சிறந்த புத்தகப்படைப்புகளை விநியோகிப்பதால் நிறைவேறக் கூடிய ஊழியப்பணிகள் குறித்து அறியாமல் கடந்தகாலத்தைப்போலவே தூங்கிக்கொண்டிருக்கிறோம். பத்முதீவில் யோவானுக்கு கிறிஸ்து கொடுத்த செய்தியை உலகம் புரிந்துகொள்ளும்படியாக, பத்திரிக்கைகளையும் புத்தகங்களையும் நாம் ஞானமாகப் பயன் படுத்தி, உறுதியான ஆற்றலோடே வேத வசனத்தைப் பிரசங்கிக்க வேண்டும். 5 TamChS 193.4

திருச்சபை அங்கத்தினர்களே, நம் புத்தகங்களை விநியோகிப்பதின் முக்கியத்துவம் குறித்து உணர்வடையுங்கள். இந்த ஊழியத்திற்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். சுவிசேஷம்பற்றி பல விஷயங்களைப் போதிக்கிற பத்திரிக்கைகளையும் கைப்பிரதிகளையும் புத்தகங்களையும் மற்ற மக்காளின் வீடுகளுக்குக் கொண்டுசேருங்கள். காலந்தாழ்த்த நேரமில்லை . பிரசார ஊழியத்திற்கென சுயநலமின்றியும் ஆர்வத்தோடும் அநேகர் தங்களை ஒப்புக்கொடுப்பார்களாக. அதன்மூலம், அதிக அவசியமான ஓர் எச்சரிப்பைக் கேட்கப் பண்ணுவார்களாக. தனக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய திருச்சபை புறப்படும்போது, ‘சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய்’ புறப்படவேண்டும். 1 TamChS 194.1

நற்செய்தி ஊழிய முயற்சியின்மூலம் சத்தியத்தின் ஒளி தன் பிரகாசமான ஒளிக்கதிர்களை உலகத்தின்மேல் வீசுகிறது. ஊழிய முயற்சி மூலம் அணுக சாத்தியமற்ற அநேகரை அணுகுவதற்கு அச்சகப்பணி ஒரு கருவியாக இருக்கிறது. 2 TamChS 194.2

சோதனையின் இரவு கிட்டத்தட்ட கடந்துசென்று விட்டது. கொஞ்சக் காலம் மட்டுமே தனக்கு உண்டென்று அறிந்து சாத்தான் தன் முழுவல்லமையோடும் செயல்படுகிறான். சத்தியத்தை அறிந்த அனைவரும் கன்மலையின் வெடிப்பில் ஒளிந்துகொள்ளவேண்டும்; தேவனுடைய மகிமையைக் காணவேண்டும்; அதற்காக, தேவன் இந்த உலகத்தைச் சிட்சிக்கிறார். சத்தியத்தை இப்போது பேசாமல் இருக்கக்கூடாது. தெளிவாக அதைச் சொல்லவேண்டும். சத்தியத்தைப் பூசிமெழுகாமல் கைப்பிரதிகளிலும் துண்டுப்பிரதிகளிலும் பேசவேண்டும். இலையுதிர் கால இலைகளைப்போல, அவற்றை எங்கும் பரப்பவேண்டும். 2 TamChS 194.3

சத்தமிடாத இந்தச் சத்திய தூதுவர்களை மக்களிடம் கொண்டு செல்கிற ஊழியத்தைச் செய்ய புத்தக ஊழியர்கள் தேவை. ஆத்துமாக்கள்மேல் அக்கறையுள்ளவர்களும் வெளிச்சத்தைத் தேடுகிறவர்களுக்குக் காலத்திற்கேற்ற வார்த்தைகளைப் பேசுகிறவர்களுமான புத்தக ஊழியர்களாக அவர்கள் இருக்கவேண்டும். சிலர், ‘நான் ஊழியக்காரன் இல்லை; மக்களுக்கு என்னால் பிரசங்கிக்க முடியாது’ என்று சொல்லலாம். உங்களால் பிரசங்கம் செய்யமுடியாமல் இருக்கலாம்; ஆனால் நீங்கள் ஒரு நற்செய்தியாளராகச் செயல் படலாம்; நீங்கள் தொடர்புகொள்கிற நபர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யலாம்; தேவனுடைய உதவிக்கரங்களாக சீடர்கள் ஊழியம் செய்ததுபோல ஊழியம் செய்யலாம்; நீங்கள் சந்திப்பவர்களிடம், அவர்கள் இயேசுவைநேசிக்கிறார்களா எனக்கேட்கலாம். 1 TamChS 194.4