கிறிஸ்தவச் சேவை
சந்தோஷமிக்க பணி
மற்றவர்களுக்கு வேதவாக்கியங்களை விளக்கிக்கூறுவது சந்தோஷமிக்க ஒரு பணியாகும். 1 TamChS 189.3
இருளிலிருக்கிற யாராவது ஒருவருக்கு வேதவாக்கியங்களை விளக்கிக்கூறுங்கள்; சத்தியத்தின் நோக்கத்தில் உங்களுக்கு ஆர்வம் குறைவதாகவும், களைப்பு உண்டாவதாகவும் சொல்லவே மாட்டீர்கள்.ஆத்துமாக்கள் குறித்து உங்கள் உள்ளத்தில் எழுப்புதல் உண்டாகும். விசுவாசத்திற்கான ஆதாரங்களைக் குறித்த மகிழ்ச்சியானது உங்கள் இருதயத்தில் நிறையும்; ‘எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்’ என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 2 TamChS 190.1