கிறிஸ்தவச் சேவை
திறமையான முகமைகளான வெளியீட்டு நிறுவனங்கள்
செவந்த்-டே அட்வென்டிஸ்டுகளை தேவன் விசேஷித்த ஜனங்களாகத் தெரிந்துகொண்டு, உலகத்திலிருந்து அவர்களைப் பிரித்தெடுத்திருக்கிறார். சத்தியம் எனும் பிரமாண்ட வெட்டுக்கருவியால் உலகம் எனும் கற்சுரங்கத்திலிருந்து அவர்களை வெட்டியெடுத்து, தம்முடையவர்களாக மாற்றியிருக்கிறார். அவர்களை தம் பிரதிநிதிகளாக்கி, இரட்சிப்பின் மாபெரும் பணியில் தம்முடைய தூதுவர்களாக இருக்க அழைத்திருக்கிறார். மனிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டதிலேயே மிகப்பெரிய பொக்கிஷமான சத்தியமும், மனிதனுக்கு தேவன் கொடுத்ததிலேயே மிகவும் பரிசுத்தமும் பயங்கரமுமான எச்சரிப்புகளும் இந்த உலகத்திற்கு அறிவிக்கப்படும்படி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இந்த ஊழியத்தைச் செய்து முடிப்பதில் மிகவும் திறன்மிக்க முகமைகளில் நம் வெளியீட்டு நிறுவனங்களும் உண்டு. 2 TamChS 195.1
தேவனுடைய வழி நடத்துதலின்படியும், அவருடைய விசேஷித்த கண்காணிப்பின்கீழும் நம் வெளியீட்டுப்பணி நிறுவப்பட்டுள்ளது. 3 TamChS 195.2
மிகுந்த வல்லமையோடு பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, தன் மகிமையின் வெளிச்சத்தால் பூமியை நிறைத்த மற்றொரு தூதனுடைய வேலையை நம்முடைய வெளியீட்டு நிறுவனங்கள் பெருமளவில் நிறைவேற்றவேண்டும். 4 TamChS 195.3
நம் வெளியீட்டு நிறுவனங்களிடம், ‘கொடியை உயர்த்துங்கள்; அதை உயர்த்திப் பிடியுங்கள். மூன்றாம் தூது உலகம் முழுதும் கேட்கும்படி அதை அறிவியுங்கள். இவர்கள் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்கள்’ என்பது காணப்படட்டும். வெளி 14:12. உலகம் முழுவதிற்கும் சாட்சியின் செய்தியாக நம் புத்தகப்படைப்புகள் இருக்கட்டும்” என்று சொல்லுமாறு தேவன் சொன்னார். 5 TamChS 195.4