கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

40/55

மனத்திறன்கள்

மனதின் திறன்களைப் பயிற்றுவிக்க தேவன் விரும்புகிறார். உலகத்தாரைவிட தமது ஊழியர்கள் அறிவுத்திறனிலும் தெளிந்த பகுத்தறிவிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமென்பது அவருடைய திட்டம். திறமையையும் தகவலறிவையும் வளர்க்காமல் அதிக சோம்பலாகவும் அல்லது கவனக்குறைவாக வும் இருக்கிறவர்கள் மேல் அவர் பிரியப்படுவதில்லை . முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பெலத்தோடும், முழு மனதோடும் தம்மில் அன்புகூரும்படி ஆண்டவர் நமக்குக் கட்டளையிடுகிறார். நம்முடைய சிருஷ்டிகரை நாம் முழுமன தோடும் அறிந்து, அவரில் அன்பு கூரும்படியாக, நம்முடைய அறிவுத்திறனை நிறைவான அளவிற்கு மேம்படச் செய்ய வேண்டிய கடமையை இது நம்மேல் சுமத்துகிறது. COLTam 333.4

நம் அறிவுத்திறனை தேவ ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வைத்தால், அதை பரிபூரணமாகப் பண்படுத்தமுடியும்; அதை மிகத்திறமையாக தேவ சேவையில் பயன்படுத்த முடியும். தேவனுக்கென தன்னை அர்ப்பணித்து, பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கவேண்டுமென்கிற ஏங்குகிற படிப்பறிவற்ற ஒருவனை, தம்முடைய சேவைக்கு ஆண்டவர் பயன்படுத்தமுடியும். ஆனால் அதே அளவு அர்ப்பணிப்பின் மனநிலையோடு இருக்கிறவர், நன்கு படிப்பறிவு உள்ளவராக இருந்தால், கிறிஸ்துவிற்காக அதிக அளவில் ஊழியம் செய்யமுடியும். அவர்கள் அதிக அனுகூலமான நிலையைப் பெற்றிருப்பார்கள். COLTam 334.1

நாம் பெறுகிற அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன், முடிந்த அளவுக்கு சகலவித கல்விகளையும் நாம் பெற கர்த்தர் விரும்புகிறார். எங்கு, எப்போது தேவனுக்காகப் பணிசெய்ய அல்லது பேச தங்கள் அழைக்கப்படுவோம் என்பது யாருக்கும் தெரியாது. மனிதர்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது நம் பரலோகப் பிதாவுக்கு மட்டுமே தெரியும். நம் அற்ப விசுவாசத்தால் புரிந்துகொள்ள முடியாத வாய்ப்புகள் நமக்கு முன் உள்ளன. அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் விதத்தில், தேவைப்பட்டால் உலகில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்பாக அவருடைய வார்த்தையின் சாத்தியங்களைப் பேசும்படி நம் மனங்களைப் பயிற்றுவித்திருக்க வேண்டும். தேவனுக்கென்று அறிவுப்பூர்வமாக ஊழியஞ்செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிற ஒரு சந்தர்ப்பத்தை கூட நாம் நழுவவிடக்கூடாது. COLTam 334.2

கல்வியறிவைப் பெற அவசியமுள்ள வாலிபர்கள், அதைப் பெற வேண்டுமென்கிற தீர்மானத்தோடு செயல்படவேண்டும். ஏதாவது வழி பிறக்குமென காத்திருக்காமல், நீங்களே அதை உருவாக்கவேண்டும். சிறிய வாய்ப்பு கிடைத்தால் கூட அதை விட்டு விடக்கூடாது. சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் பொருளாதார வசதிகளை சிற்றின்பத்திற்காக அல்லது பொழுது போக்கு ஆசைகளை நிறைவேற்ற செலவழிக்கக்கூடாது. தேவன் உங்களை அழைத்த அழைப்புக்கு ஏற்றபடி பயனிலும் திறனிலும் சிறந்து விளங்க தீர்மானமாயிருங்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எதுவானாலும் அதை முழுமையாக, உண்மையாகச் செய்யுங்கள். அறிவுத்திறனை வலுவாக்கக் கிடைக்கும் அனைத்து வச திகளையும் பயன்படுத்துங்கள். புத்தகப் படிப்போடு பயன்மிக்க உடலுழைப்பும் காணப்படட்டும்; ஊக்கமான முயற்சியோடும், விழிப்போடும், ஜெபத்தோடும் பரலோக ஞானத்தைப் பெறுங்கள். இது முழுநிறைவான கல்வி யைப் பெற்றத்தரும். இவ்வாறு குணத்தில் மேம்பட்டவர்களாகலாம்; பிறர் உள்ளங்களில் தாக்கத்தை உண்டாக்கலாம்; அவர்களை நேர்மையும் பரிசு த்தமுமான பாதையில் வழிநடத்து கிறவர்களா மாறலாம். COLTam 334.3

நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும் பயன்படுத்த விழிப்போடு இருந்தால், கல்வியறிவைப் பெற நாம் எடுக்கிற முயற்சியில் எவ்வளவோ அதிகமாகச் சாதிக்கலாம். மெய்யான கல்வி என்பது கல்லூரிகளில் கிடைப்பதைவிட மேலானது. அறிவியல் சம்பந்தமான கல்வியைப் புறக்கணிக்க முடியாது; அதேசமயம், தேவனோடு உயிருள்ள ஓர் உறவைப் பேணுவதன் மூலம் பெறவேண்டிய உயர்வான கல்வி ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு மாணவனும் தன் வேதாகமத்தை எடுத்து, மகத்தான ஆசிரியருடன் தொடர்பை உண்டாக்கவேண்டும். தெய்வீக சாத்தியத்தை ஆராய்வதில் எழும் கடினமான சிக்கல்களைப் போராடிக் கண்டு படிக்க மனதைப் பயிற்றுவித்து, ஒழுங்குப்படுத்தவேண்டும். COLTam 335.1

தங்கள் சகமனிதர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும் படி அறிவைப் பெற ஏங்குகிறவர்கள், தேவனிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள். அவருடைய வார்த்தையை ஆராய் வதால், ஊக்கத்தோடு செயல்பட அவர்களுடைய மனத்திறன்கள் விழிப்படையும். மனத்திறன்கள் விருத்தியடைந்து, மேம்படும்; சிந்தையானது ஆற்றலோடும் ஆக்கத்திறனோடும் விளங்கும். COLTam 335.2

தேவனுக்காக வேலை செய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது பேச்சாற்ற லையும் மிகச்சிறந்த தாலுந்துகளையும் விட அதிகமானதைச் சாதிக்கும். அதிக கல்வியறிவும் மிகப்பெரிய தாலுந்துகளும் பெற்ற தன்னடக்கமற்ற ஒரு மனிதனைவிட, ஒழுக்கமிக்க ஒரு சாதாரண மனிதன் அதிகமான, மேலான பணியை வெற்றிகர மாகச் செய்யமுடியும். COLTam 335.3