கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்
பிற தாலந்துகள்
உவமையில் சொல்லப்படும் தாலந்துகள் ஆவியானவரின் விசேஷித்தவரங்களை மட்டுமே சுட்டிக்காட்டவில்லை. அனைத்து வரங்களையும் திறமைகளையும் அவை சுட்டிக் காட்டுகின்றன; பிறப்பில் பெற்றதாகவோ முயற்சியால் கிடைத்ததாகவோ, இயற்கையானதாகவோ ஆவிக்குரியானதாகவோ அவை இருக் கலாம். கிறிஸ்துவின் சேவையில் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அவருடைய சீடர்களாக நாம் மாறும் போது, நம்மையும் நம்மிடமுள்ள அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்கிறோம். அந்த வரங்களை நம் சகமனிதர்களின் ஆசீர்வாதத்திற்காக அவருடைய மகிமைக் கென்று பயன்படுத்தும் படி அவர் சுத்திகரித்து, உயர்தரமானவையாக மாற்றித் திரும்பத் தருகிறார். COLTam 328.2
‘அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக ” தேவன் அவனவ னுக்கு தாலந்துகளைக் கொடுக்கிறார். கண்டகண்டபடி அவற்றை அவர் பகிர்ந்தளிப்பதில்லை. ஐந்து தாலந்துகளை உபயோகிக்க திறமையுள்ளவன் ஐந்தைப் பெறுகிறான். இரண்டு தாலந்துகளை வைத்து விருத்தி செய்யக்கூடியவன் இரண்டைப் பெறுகிறான். ஒரு தாலந்தை ஞானமாகப் பயன்படுத்தக்கூடியவன் ஒன்றைப் பெறுகிறான். தங்களுக்கு அதிகமான தாலந்துகள் அருளப்பட வில்லையென யாரும் புலம்பத் தேவையில்லை. நம்பி கொடுக் கப்படுவதை விருத்தி செய்யும் போது, அதிகம் பெற்றவனைப் போலவே, குறைவாகப் பெற்றவனும், அவனவனுக்குப் பகிர்ந்தளிக்கிறவருக்கு உரிய கனத்தைச் செலுத்துகிறான். ஐந்து தாலந்துகள் கொடுக்கப்பட்டவன், அந்த ஐந்தை விருத்தி செய்ய கடமைப் பட்டுள்ளான். ஒரு தாலந்தைப் பெற்றவன் அந்த ஒன்றை விருத்தி செய்ய வேண்டும். ‘இல்லாததின்படியல்லாமல் அவனவனிடம் உள்ளதின்படியே” தேவன் அவனவனிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கிறார். 2 கொரிந்தியர் 8:12. COLTam 329.1
“ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித் தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்” என்று உவமையில் சொல்லப் பட்டுள்ளது. COLTam 329.2
குறைவானதாலந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தவேண்டும். நாம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி, நான் எவ்வளவு பெற்ற்றிருக்கிறேன்? என்பதல்ல, என்னிடம் உள்ளதை வைத்து நான் என்ன செய்கிறேன்? ‘ என்பதே . நம்முடைய அனைத்து திறன்களையும் மேம்படுத்துவதே, தேவனுக்கும் நம் ச கமனிதர்களுக்கும் நாம் செய்யவேண்டிய முதல் கடமையாகும். திறனிலும் பயனிலும் அனுதினமும் வளராத ஒருவன், வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றாதவனாக இருக்கிறான். கிறிஸ்துவை விசுவாசிப்பதாகச் சொல் வோமானால், எஜமானின் ஊழியர்களாக மாறுவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உறுதி யளிக்கிறோம்; மேலும், நம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான நன்மையைச் செய்யும் படிக்கு, ஒவ்வொரு மனத்திறனையும் முடிந்த அளவுக்கு பூரணமாகப் பேணி வளர்க்கவேண்டும். COLTam 329.3
கர்த்தர் ஒரு மாபெரும் பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இம்மையில் அதிக விசுவாசத்தோடும் விருப்பத்தோடும் ஊழியஞ்செய்பவர்களுக்கு மறுமையில் அவர் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கக் காத்திருக்கிறார். ஆண்டவர் தம்முடைய பிரதிநிதிகளைத் தெரிந்து கொள்கிறார்; ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலை யில் தம்முடைய செயல் முறைத் திட்டத்தில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார். அவரது திட்டத்தை செயல்படுத்த உண்மை யான இதயத்தோடு பெரிதும் முயல்கிற ஒவ்வொருவரையும் தம்முடைய பிரதிநிதிகளாகத் தெரிந்துகொள்கிறார்; அவர்கள் பூரணமான வர்களாக இருப்பார்கள் என்பதற்காக அல்ல, மாறாகதம்மோடான தொடர்பால் அவர்கள் பூரணமானவர்களாக மாற முடியும் என்ப தால். COLTam 330.1
உயர்ந்த நோக்கத்தில் உறுதியாக இருப்பவர்களை மட்டுமே தேவன் ஏற்றுக்கொள்வார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்யவேண்டிய கடமையைக் கொடுக்கிறார். அனைவரிடமும் ஒழுக்கத்தில் பூரணத்தை எதிர் பார்க்கிறார். பாவம் செய்யும்படி பரம்பரையாலோ பழக்கத்தாலோ வந்த இயல்புகளுக்கு இடமளிக்கும்படி நீதியின் தரத்தை நாம் குறைக்கவே கூடாது. குணத்தில் குறை பாடுதான் பாவமென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீதியான சகல குணப்பண்புகளும் ஒட்டுமொத்தமாக, பூரண இசைவோடு தேவனில் வாசஞ்செய் கின்றன ; கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் அந்தப் பண்புகளைச் சொந்தமாக்குகிற சிலாக் கியத்தைப் பெற்றிருக்கின்றனர். COLTam 330.2
தேவனோடு சேர்ந்து பணிபுரிய விரும்புகிறவர்கள் தங்கள் ச ரீரத்தின் ஒவ்வோர் உறுப்பும் பூரண நிலையில் இருக்கவும், சிந்தை தெளிவுடன் இருக்கவும் கடும் முயற்சி செய்யவேண்டும். ஒவ்வொரு கடமையையும் செய்ய சரீர - மன - ஒழுக்கத்திறன்களை ஆயத்தப்படுத்துவதே உண்மையான கல்வியாகும்; அது தேவனுடைய சேவைக்காக சரீரத்தையும் மனதையும் ஆத்துமா வையும் பயிற்றுவிப்பதாகும். இந்தக் கல்வியே நித்தியஜீவனுக் கேதுவாக நிலைத்திருக்கும். COLTam 330.3
ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் திறமை யையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள தேவன் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவுக்கு நாம் மனமுவந்து சேவை செய்யும்படி தம்முடைய இரத்தத்தையும் பாடுகளையும் விலையாகக் கொடுத்து, நம் கிர யத்தைச் செலுத்தியிருக்கிறார். நாம் எவ்வாறு பணி செய்ய வேண்டும், எப்படிப்பட்ட மனநிலையோடு செய்ய வேண்டும் என்று ஒரு முன்மாதிரியைக் காட்டவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். “தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளின ” பிதாவின் மேல் மிகுந்த அன்போ டும் அர்ப்பணிப்போடும் அவருடைய பணியை எவ்வாறு சிறப்பா கச்செய்து, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தலாம், அவரை எவ்வாறு கனத்தால் முடிசூட்டலாம் என்று நாம் ஆராய்ந்து பார்க்க அவர் விரும்புகிறார். யோவான் 3:16. COLTam 331.1
குணத்தில் பூரணமடைவது லேசான காரியமென்று கிறிஸ்து எந்த நிச்சயத்தையும் நமக்குக் கொடுக்கவில்லை. மேன்மையான, முழுநிறைவான குணமானது மரபுவழியாகக் கிடைப்பதில்லை. தற்செயலாக நாம் அதைப் பெறவும் முடியாது . மேன்மையான குணத்தை கிறிஸ்துவின் கிருபையாலும் புண்ணியங்களாலும் தனிநபர் முயற்சியினால் பெறவேண்டும். தேவன் தாலந்துகளையும், மனத்திறன்களையும் கொடுக்கிறார்; குணத்தை நாம் அமைக்கிறோம். சுயத்தோடு கடுமையாக, தீவிரமாகப் போராடி அதை உருவாக்கவேண்டும். மரபுவழி இயல்புகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தை நிகழ்த்த வேண்டும். நம்மை நாமே உற்று ஆராய்ந்து, தகுதியற்ற ஒரு குணம்கூட சரிசெய்யப்படாமல் நம்மில் நிலைத்திருக்க அனுமதிக்கக்கூடாது. COLTam 331.2
என்னுடைய குணக்குறைபாடுகளை என்னால் சரிசெய்ய முடியாது என்று ஒருவனும் சொல்லாதிருப்பானாக . இந்தத் தீர்மானத்திற்கு நீங்கள் வந்தால், நித்தியஜீவனைப் பெறுவதில் நிச்சியமாகத் தோற்கிறீர்கள். அந்த இயலாமை உங்களுடைய விருப்பத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. நீங்கள் விரும்பாவிட் டால், நீங்கள் ஜெயங்கொள்ள முடியாது. பரிசுத்தமாக்கப்படாத இருதயம் சீர்கெட்டிருப்பதும், தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் ஒப்படைக்க விருப்பமில்லாத்திலும் தான் உண்மையான பிரச் சனையே இருக்கிறது. COLTam 331.3
மிகச்சிறந்த பணிக்கு தேவன் தகுதிப்படுத்தியிருக்கும் அநேகர் மிக்க்குறைவைகவே சாதிக்கிறார்கள்; ஏனென்றால் அவர்கள் மிகக்குறைவாகவே முயல்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையில் திட்டமான நோக்கம் எதுவும் இல்லாதது போல, அடைய வேண்டிய தரநிலை எதுவும் இல்லாதது போல கடந்து போகிறார்கள். அவர்கள் தங்களுடைய கிரியைகளுக் கேற்ப பிரதிபலனைப் பெறுவார்கள். COLTam 332.1
நீங்கள் உங்களுக்கு எந்த தரநிலையை நிர்ணயிக்கிறீர்களோ அதைவிட மேலான தரநிலையை அடைய முடியாது என்பதை மறவாதீர்கள். எனவே உச்ச தரநிலையை நிர்ணயுங்கள். பிறகு சுயத்தை மறுத்தும், தியாகம் செய்தும் வேதனையோடு முயற்சி செய்யவேண்டியிருந்தாலும், அந்த ஏணியின் உச்சத்திற்கு படிப்படியாக முன்னேறிச் செல்லுங்கள். எதுவும் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். எந்த மனிதனும் உதவியற்றவனாக, நிச்சயமற்றவனாக விடப்படுமளவிற்கு நிர்ப்பந்தமான நிலை அவனைச் சுற்றிலும் இறுக வலைபிண்ணமுடியாது. சூழ்நிலைகள் எதிர்த்தால், வெற்றிபெறகிற வெறி அதிகரிக்க வேண்டும். ஒரு தடையை உடைக்கும் போது, தொடர்ந்து முன்னேறுவதற்கான அதிகப்பட்ச திறனையும் தைரியத்தையும் அது கொடுக்கும். சரியான திசையில் உறுதியோடு முன்னேறுங்கள்; சூழ்நிலைகள் உங்களைத் தடுக்காமலும் உதவி செய்வதைக் காண்பீர்கள். COLTam 332.2
எஜமானின் மகிமைக்காக இனிமையான ஒவ்வொரு குணத்தையும் பேணிவளர்க்க வேண்டுமென்கிற இலட்சியத் தோடிருங்கள். குணமேம்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும், தேவனைப் பிரியப்படுத்துங்கள். இதை நீங்கள் செய்யலாம்; ஏனென்றால், சீர்கெட்டு வந்த ஒரு காலக்கட்டத்தில் தான் ஏனோக்கு தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தான். நீங்களும் இதைச் செய்யமுடியும். நமது நாட்களிலும் அநேக ஏனோக்குகள் இருக்கிறார்கள். COLTam 332.3
உண்மைமிக்க அரசியல்வாதியாக, எந்தப் பாவச்சோதனை யாலும் சீர்கெடுக்க முடியாத தானியேலைப்போலத் திடமாக நில்லுங்கள். உங்களுடைய பாவங்களைப் போக்க தம்முடைய உயிரையே தருமளவிற்கு உங்களை மிகவும் நேசித்தவரை ஏமாற்றாதிருங்கள். ‘என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அவர் கூறுகிறார். யோவான் 15:5. இதை நினைவில் வையுங்கள். நீங்கள் தவறுகளைச் செய்திருந்தால், எச்சரிப்பின் விளக்குகளா அந்தத் தவறுகளைப் பாருங்கள்; அப்போது நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அவ்வாறு நீ ங்கள் தோல்வியை வெற்றியாக மாற்றலாம்; சத்துருவுக்கு ஏமாற்றமளித்து, உங்களுடைய மீட்பரைக் கனப்படுத்தலாம். COLTam 332.4
தேவனுடைய சாயலுக்கேற்ற குணவுருவாக்கம்தான், இவ்வுலகிலிருந்து மறுவுலகிற்கு நாம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரே பொக்கிஷமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்துவின் கட்டளையின் படி வாழ்கிறவர்கள், தேவனுக்காக தாங்கள் சாதித்தவைகளை பரலோக வாசஸ்தலங்களுக்கு தங்களோடு எடுத்துச் செல்வார்கள். பரலோகத்தில் பரலோகத்தில் நம்முடைய வளர்ச்சி தொடர்ந்து நிகழும். அப்படியானால், இந்த வாழ்க்கையில் குணத்தை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமானது! COLTam 333.1
செயலில் குறைபாடில்லாதவர்களாக நம்மை விளங்கச் செய்கிற குணப்பூரணத்தை அடைய உறுதியான விசுவாசத்துடன் முயல்கிற மனிதர்களோடு சேர்ந்து பரலோக அறிவு ஜீவிகள் பிரயாசப்படுவார்கள். இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரிடமும், “உனக்கு உதவ உன்னுடைய வலதுபாரி சத்தில் நான் இருக்கிறேன்” என்று கிறிஸ்து சொல்கிறார். COLTam 333.2
மனித சித்தம் தேவ சித்தத்துடன் ஒத்துழைக்கும் போது, அது சர்வ ஆற்றல் படைத்ததாக மாறுகிறது. அவர் கட்டளையிடுகிற எதையும் அவருடைய பெலத்தால் சாதிக்கச்செய்கிறது. அவர் கட்டளையிடுகிற யாவும் பெலவான்களாக்குகின்றன. COLTam 333.3