கடைசிகாலச் சம்பவங்கள்

316/334

சிவந்த மேனியும் ஒளியின் வஸ்திரமும்

ஆதாம் தனது சிருஷ்டிகரின் கரத்திலிருந்து உருவானபோது, கெம்பீரமான உயரமுள்ளவனாகவும், ஒரே சீரான அமைப்புடன்கூடிய அழகான உருவமுள்ளவனாகவும் இருந்தான். அவன் இன்று உலகில் வாழுகின்ற மனிதர்களின் உயரத்தைப்போல, இருமடங்கு உயரமுள்ளவனாகவும், அதற்கேற்ற சரியான பருமனுடையவனாகவும் இருந்தான். அவனது அங்க அமைப்புகள் பூரணமாகவும் அழகாகவும் இருந்தன. அவனது நிறம் வெண்மையாகவோ வெளிரிய பழுப்பு நிறமாகவோ இராமல், சிறந்த ஆரோக்கியத்துடன் பிரகாசிக்கக்கூடிய சிவந்த நிறமுள்ளதாயிருந்தது. ஏவாள், ஆதாமுக்குச் சமமாக அவனைப் போன்ற உயரமுடையவனாக இருக்கவில்லை. அவளது தலை, அவனது தோள்களுக்கு மேலாக சற்று உயர்ந்திருந்தது. அவளும் கூட, கெம்பீரத் தோற்றமுள்ள பூரண சரீர அமைப்புடனும் மிகுந்த அழகுடனும் இருந்தாள். — 3SG 34 (1864). கச 214.1

இந்தப் பாவமற்ற ஜோடி செயற்கையான ஆடைகளை அணிந்திருக்கவில்லை. தேவதூதர்கள் அணிந்திருந்ததுபோன்ற ஒளியினாலும் மகிமையினாலும் மூடப்பட்டிருந்தனர், அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திருந்த காலம் வரையிலும், இந்த ஒளியின் வஸ்திரம் அவர்களைத் தொடர்ந்து மூடியிருந்தது. — PP 45 (1890). கச 214.2