கடைசிகாலச் சம்பவங்கள்
பரலோகத்தில் நம் குடும்பத்தைக் காண்பதில் சந்தோஷம்
வாயிற்கதவின் இருபக்கமும் தூதர்களின் ஒரு பரிவாரம் நின்றிருப்பதை நாம் காண்போம். உள்ளே நாம் கடந்துசெல்லும்போது, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுவார். தமது சந்தோஷத்தில் பங்குடையவர்களாய் இருக்கும்படி அவர் இங்கே உங்களிடம் கூறுகிறார். அதன் அர்த்தம்தான் என்ன? தகப்பன்மார்களே, அது உங்களது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு மகிழ்வதாகும். தாய்மார்களே, அது உங்கள் முயற்சிகளானது பலனளிக்கப்பட்டதைக் கண்டு மகிழ்வதாகும். இங்கு உங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றனர்; ஜீவகிரீடம் அவர்கள் தலைகளின்மீது வைக்கப்பட்டிருக்கின்றது. — GC 567, 568 (1895). கச 214.3
கிறிஸ்து, தேவனுடைய மாபெரும் ஈவாக இருக்கின்றார். அவருடைய ஜீவன் நம்முடையது, நமக்காகக் கொடுக்கப்பட்டது. நம்முடைய கல்லறைகளிலிருந்து நாம் வெளியே வந்து, பரலோகத் தூதர்களுடன் மகிமையான ஒரு தோழமை கொள்ளுவதற்கும், நமக்குப் பிரியமானவர்களை சந்தித்து, அவர்களது முகங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், அவர் நமக்காக மரித்து உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏனெனில், கிறிஸ்துவைப்போலொத்த சாயல் அவர்களது உருவத்தை அழித்துப்போடுவதில்லை; மாறாக, அதனை அவரது மகிமையான சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துகின்றது. இங்கே குடும்ப உறவில் இணைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு பரிசுத்தவானும், அங்கே ஒருவரையொருவர் அறிந்துகொள்வர். — 3 SM 316 (1898). கச 214.4