கடைசிகாலச் சம்பவங்கள்
மீட்கப்பட்டோரின் தனித்தன்மை காக்கப்பட்டிருக்கும்
இயேசுவின் உயிர்த்தெழுதல் அவருக்குள் மரித்து நித்திரை செய்துகொண்டிருக்கும் அனைவரது இறுதி உயிர்த்தெழுதலின் ஒரு மாதிரியாக இருக்கின்றது. உயிர்த்தெழுந்த இரட்சகரின் முகம், அவரது நடத்தை, அவரது பேச்சு ஆகியவை அனைத்தும் சீஷர்களுக்கு மிகவும் அறிமுகமானவைகளாக இருந்தன. மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்ததைப்போல, அவருக்குள் நித்திரை செய்பவர்களும் மறுபடியும் எழுந்திருக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். இயேசுவை அவரது சீஷர்கள் அறிந்திருந்ததைப்போல, நாமும் நமது நண்பர்களை அறிந்துகொள்வோம். சாவுக்கேதுவான இந்த வாழ்க்கையில், அவர்கள் சரீரம் உருக்குலைந்தவர்களாக, நோயுற்றவர்களாக, சீர்குலைந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் உயிரோடெழும்பும்போது, பூரண ஆரோக்கியத்துடனும், ஒரே சீரான அமைப்புடனும் எழும்புவார்கள். மகிமைப்படுத்தப்பட்ட அவர்களது சரீரத்தில் அவர்களது தனித்தன்மை முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும். — DA 804 (1898). கச 213.4
மரிக்குபோதிருந்த அதே சரீரம் எழும்பி வரும். ஆனால் அதில் வியாதியோ, ஊனமோ, இருக்காது. அது மீண்டும் உயிர் பெறுகிறது. நண்பர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்வதற்கேதுவாக, அதே உருவ அமைப்பை அவர்கள் சரீரம் பெற்றிருக்கும். — 6 BC 1093 (1900). கச 213.5
அங்கே நாம் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வோம். அங்கே நம் ஆத்துமாவில் தேவன் நாட்டியுள்ள அன்பு, இரக்கம் ஆகிய குணங்கள், உண்மையான மற்றும் இனிமையான செயல்திறனைப் பெறும். — Ed 306 (1903). கச 213.6