கடைசிகாலச் சம்பவங்கள்
அறிக்கை செய்யப்படவேண்டிய மறைவான பாவங்களே நீதிமான்களுக்கு இருக்காது
தேவனுடைய ஜனங்கள் இக்கட்டுக்காலத்திலே, பயத்தாலும் வேதனையாலும் அலைக்கழிக்கப்படும்போது, அறிக்கை செய்யப்படாத பாவம் அவர்கள் முன் தோன்றுமானால், மூழ்கடிக்கப்படுவார்கள். நம்பிக்கையின்மை அவர்களது விசுவாசத்தைத் துண்டித்துவிடும். பின்பு, விடுதலைக்காக தேவனிடத்திலே விண்ணப்பம் செய்யும்படியான நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமற்போய்விடும்; ஆயினும், தங்களது தகுதியற்ற நிலையைக்குறித்து ஒரு ஆழ்ந்த உணர்வு அவர்களுக்கு இருக்கும் அந்த நேரத்தில், வெளிப்படுத்தத்தக்கதான மறைக்கப்பட்ட தவறுகள் ஒன்றும் அவர்களிடத்தில் இருக்காது. அவர்களது பாவங்கள் நியாயத்தீர்ப்பிற்கு முன்னதாகச் சென்று, முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தன; அவைகளை அவர்கள் நினைவிற்குக்கூட கொண்டுவர முடியாது… - GC 620 (1911). கச 192.3
தேவனுடைய ஜனங்கள்… தங்களது தவறுகளைக்குறித்த ஒரு ஆழ்ந்த உணர்வைப் பெற்றிருப்பார்கள். தங்களது வாழ்க்கையைத் திருப்பிப்பார்க்கும்போது, அவர்களது நம்பிக்கைகள் மூழ்கிப்போய்விடும். ஆனால் தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தையும், தங்களது உண்மையான மனந்துரும்புதலையும் எண்ணிப்பார்க்கும்போது, மனந்திரும்பின உதவியற்ற பாவிக்கு கிறிஸ்துவின்மூலமாய் கொடுக்கப்பட்டிருக்கின்ற வாக்குத்தத்தங்களுக்காக அவர்கள் மன்றாடுவார்கள். அவர்களது ஜெபங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படாவிட்டாலும், அதினிமித்தம் அவர்கள் விசுவாசம் ஒழிந்துபோகாது. யாக்கோபு தேவதூதனைப் பலமாய்ப் பிடித்துக்கொண்டதுபோலவே, அவர்கள் தேவனுடைய பெலத்தை பற்றிப்பிடித்துக்கொள்வார்கள். நீர் என்னை ஆசீர்வாதித்தால் ஒழிய உம்மைப் போகவிடேன் என்பதே அவர்களது ஆத்துமாக்களின் மொழியாயிருக்கும். — PP202 (1890). கச 192.4