கடைசிகாலச் சம்பவங்கள்
யாக்கோபின் இக்கட்டுக்காலத்தைப் போல
நான்காம் பிரமாணத்தின் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிப்போருக்கு எதிராக ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். மிகக் கடுமையான தண்டனைக்குப் பாத்திரவான்கள் என்று அவர்கள்மீது குற்றஞ்சுமத்தி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவர்களைக் கொல்லுவதற்கு மக்களுக்குச் சுதந்திரத்தையும் அந்தச் சட்டம் அளிக்கும். அனைத்து தெய்வீகப் பிரமாணங்களையும் கனம்பண்ணுவோருக்கெதிராக, பழைய உலகத்தின் (ஐரோப்பா) கத்தோலிக்க மார்க்கமும், புதிய உலகத்தின் (ஆமெரிக்கா) விழுந்துபோன புராட்டஸ்டண்ட் மார்க்கமும் ஒன்றுசேர்ந்து செயல்படும். அதன் பிறகு, தேவனுடைய ஜனங்கள் யாக்கோபின் இக்கட்டுக்காலத்தைக் குறித்து, தீர்க்கதரிசியால் கூறப்பட்ட காலமாகிய துயரமும் வருத்தமும் நிறைந்த காலத்திற்குள்ளாகப் பிரவேசிப்பார்கள். — GC 615, 616 (1911). கச 191.5
இதற்கு முன்பாக இரத்தசாட்சியாக மரித்தவர்களைப்போல, தேவனுடைய ஜனங்கள் தங்களது சாட்சியை சீக்கிரத்தில் முத்திரை போடவேண்டும் என்பதைப்போன்று மனிதப் பார்வைக்குக் காணப்படலாம். தங்களது சத்துருக்களின் கைகளால் தாங்கள் விழும்படிக்கு, கர்த்தர் தங்களை கைவிட்டுவிட்டார் என்று அவர்களும் பயப்பட ஆரம்பிப்பார்கள். அது பயங்கரமான கடுந்துயர் நிறைந்த ஒரு நேரமாகும். இரவும் பகலும் அவர்கள் விடுதலைக்காக தேவனை நோக்கிக் கதறுவார்கள்… யாக்கோபைப் போல அவர்கள் அனைவரும் தேவனோடு போராடுவார்கள். அவர்களது முகத்தோற்றங்கள் உள்ளான போராட்டத்தை வெளிப்படுதும். அவர்களது ஒவ்வொரு முகமும் வெளிறிப்போயிருக்கும். என்றபோதும் அவர்கள், தங்களது ஊக்கமான விண்ணப்பங்களை நிறுத்தமாட்டார்கள். - GC 630 (1911). கச 192.1
போராட்டமும் வேதனையும் நிறைந்த அந்த இரவு நேரத்திலே யாக்கோபுக்கு ஏற்பட்ட அனுபவம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குச் சற்றுமுன் தேவனுடைய ஜனங்கள் கடக்கவேண்டிய உபத்திவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. தீர்க்கதரிசி எரேமியாவும் இந்தக் காலத்தைக்குறித்து பரிசுத்த தரிசனத்திலே தான் கண்டதை: “…..தத்தளிப்பின் சத்ததைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை… முகங்களெல்லாம் மாறி, வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப் போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்” (எரேமியா 30:5-7) என்று விவரிக்கின்றார். — PP201 (1890). கச 192.2