கடைசிகாலச் சம்பவங்கள்

286/334

பரிசுத்தவான்கள் தங்கள் வாழ்வை இழக்கமாட்டார்கள்

மிருகத்தின் சட்டத்திற்குத் தலைவணங்காதவர்களையும், அதன் முத்திரையைப் பெற்றுக்கொள்ளாதவர்களையும், மறுரூபமாக்கப்பட்ட காத்திருப்பவர்களையும், அழிக்கும்படியாக துன்மார்க்கரை தேவன் அனுமதிக்கமாட்டார். பரிசுத்தவான்களைக் கொலைசெய்யும்படி துன்மார்க்கர் அனுமதிக்கப்படுவார்களானால், சாத்தானும் கேடுசெய்யும். அவனது அனைத்து சேனையும், தேவனை வெறுப்பவர்கள் அனைவரும் மனநிறைவடைவார்கள் என்று நான் கண்டேன். தாங்கள் நேசித்த ஆண்டவரைக் காணவேண்டும் என்று இத்தனை காலமாய்க் கத்திருந்த அந்தப் பரிசுத்தவான்களோடு ஏற்படும் முடிவான இந்தக் கடைசிப் போரட்டத்திலே சாத்தான் தனது வல்லமையைப் பெற்றுக்கொள்வதாக இருக்குமானால், ஆ! அவனது சாத்தானிய கெம்பீரத்திற்கு, அது எத்தகைய ஒரு ஜெயமாக இருக்கும்! பரிசுத்தவான்கள் மேலே (பரலோகம்) செல்வதைப்பற்றின கருத்தைக் கேலிசெய்தோர், தேவன் தமது ஜனங்களுக்காகக் கொண்டுள்ள அவரது அக்கறையையும், அவர்களது மகிமையான விடுதலையையும் காண்பார்கள். — EW 284 (1858). கச 193.1

தேவனுடைய ஜனங்கள் துன்பமற்றவர்களாக இருக்கமாட்டார்கள். உபத்திரவப்படுத்தப்பட்டு மனவேதனையயும் மிகுந்த வறுமையையும் சகித்து ஆகாரமின்றித் தவிக்கும் அதே வேளையில், அழிந்துபோகும் படியாக அவர்கள் விட்டுவிடப்படமாட்டார்கள். — GC 629 (1911). கச 193.2

கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளின் இரத்தம் அவருக்குச் சாட்சியாக இந்தக் காலத்திலே சிந்தப்படுமானால், இரத்தசாட்சிகளின் இரத்தத்தைப்போன்று, தேவனுக்கு ஒரு பெரிய அறுவடையைத் தருவதற்காக விதைக்கப்பட்ட விதையாக அது இருக்காது. — GC 634 (1911). கச 193.3