கடைசிகாலச் சம்பவங்கள்
தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக உபயோகப்படுத்தப்படும் விவாதங்கள்
கிறிஸ்துவின் வேலை ஆசரிப்புக் கூடாரத்தில் முடிக்கப்படும்வரை நான்கு தூதர்களும் பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதையும், அதன் பின்னரே கடைசி ஏழு வாதைகளும் ஊற்றப்படுவதையும் நான் கண்டேன். இந்த வாதைகளோவெனில், துன்மார்க்கரை நீதிமான்களுக்கெதிராக மேலும் கோபமடையச் செய்தது. நாங்கள்தான் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை அவர்கள் மீது வரப்பண்ணினோம் எனவும், எங்களை இந்த பூமியிலிருந்து ஒழுத்துவிட்டால் வாதைகள் நின்றுபோய்விடும் எனவும் அவர்கள் எண்ணினார்கள். — EW 36 (1851). கச 187.5
இரக்கத்தின் தூதன் தனது செட்டைகளை மடித்து விலகிச்செல்லும் போது, நீண்டகாலமாய் தான் விரும்பியிருந்த தீமையான காரியங்களை சாத்தான் செய்யத்துவங்குவான். புயலும் கொந்தளிப்பும் யுத்தமும் இரத்தஞ்சிந்தலும் - ஆகிய இந்தக் காரியங்களில்தான் அவன் பெருமகிழ்ச்சியடைகின்றான். இப்படியாக அவன் தனது அறுவடையில் மக்களைச் சேகரிக்கின்றான். மனிதர்கள் சாத்தானால் முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டு, வாரத்தின் முதல் நாளை பரிசுத்தக் குலைச்சலாக்கியதின் விளைவினால்தான் இந்த அழிவுகள் வந்திருக்கின்றன என்று அறிவிப்பார்கள். புகழ்பெற்ற சபைகளின் மேடைகளிலிருந்து: “ஞாயிற்றுக்கிழமை ஆசரிக்கப்பட வேண்டியவிதத்தில் ஆசரிக்கப்படாததால்தான், உலகம் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது” என்ற கூற்று முழங்கப்படும். — RH Sep.17,1901. கச 187.6
ஒரு சபையின் அமைபிற்கும், ஒரு நாட்டின் சட்டத்திற்கும் எதிராக நிற்கிற சிலரை ஒருபோதும் பொருத்துக்கொள்ளமுடியாது என்ற காரியம் வற்புறுத்தப்படும். உலகம் முழுவதும் அக்கிரமத்திலும் குழப்பத்திலும் மூழ்குவதக்காட்டிலும், அது அழியாமல் காக்கப்படும்படியாக இந்தச் சிறு கூட்டத்தார் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் வலியுறுத்தப்படும். ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன்பாக, இதே போன்ற வாதம்தான் “ஜனங்களின் அதிகாரிகளினாலே” கிறிஸ்துவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது… அப்பொழுதுபோலவே இப்பொழுதும் இந்த வாதம் தீர்க்கமானதாக இருக்கும். — GC 615 (1911). கச 188.1