கடைசிகாலச் சம்பவங்கள்
ஞாயிற்றுக்கிழமையை கனம்பண்ணாத அனைவருக்கும் மரணம்
பரிசுத்தவான்களைக் கொலைசெய்யும்படியாக பிறப்பிக்கப்பட்ட ஒரு மரணச்சட்டம், விடுதலைக்காக இரவும் பகலும் அவர்களைக் கதறச் செய்தது. — EW 36, 37 (1851). கச 188.2
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தான் நிறுத்தின சிலையைத் தாழ்விழுந்து வணங்காத அனைவரும் கொலைச்செய்யப்படக் கூடியவர்கள் என்ற சட்டத்தைப் பிறப்பித்ததுபோலவே, ஞாயிறு நியமனத்தை பயபக்தியாய் ஆசரிக்காத ஜனங்கள் அனைவரும் சிறைவாசத்தாலும், மரண தண்டனையினாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு கொடுக்கப்படும்… பெரியவர், சிறியவர் என்று ஒவ்வொருவரும் அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றபடியால், வெளி. 13-ம் அதிகாரத்தை அனைவரும் மிகுந்த ஜாக்கிரதையுடன் வாசிக்க வேண்டும். — 14 MR 91 (1896). கச 188.3
இக்கட்டுக்காலம் தேவனுடைய ஜனங்கள்மீது விரைவில் வரவிருக்கின்றது. அப்பொழுது கர்த்தருடைய ஓய்வுநாளை கைக்கொள்ளுபவர்கள் வாங்கவோ விற்கவோ கூடாதபடிக்கு அவர்களைத் தடைசெய்கின்ற சட்டம் பிறப்பிக்கப்படும். பின்பு அவர்கள் வாரத்தின் முதல்நாளை ஓய்வுநாளாக ஆசரிக்காவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், மரணத்திற்குக்கூட ஒப்புவிக்கப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்படுவார்கள். — HP 344 (1908). கச 188.4
தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாக யுத்தம், செய்வதற்கு ஒன்றுசேர்கின்ற பூமியின் வல்லமைகள், “சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்” (வெளி. 13:16) யாவரும் பொய்யான ஓய்வுநாளை ஆசரிப்பதின்மூலம், சபையின் பழக்க வழக்கங்களுக்கு ஒத்திசைவாக நடக்கவேண்டும் என்ற சட்டத்தை இயற்றும், அதற்கு உடன்பட மறுக்கின்ற அனைவருக்கும் சட்டரீதியான நாட்டின் தண்டனைகள் வழங்கப்படும். இறுதியிலே அவர்கள் மரணதண்டனையைப் பெற வேண்டியவர்கள் என்று அறிவிக்கப்படும். — GC 604 (1911). கச 188.5
விசேஷமாக, நான்காம் கற்பனையின் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்கின்றவர்களுக்கு எதிராக, மனிதர் கடுங்கோபம் கொள்வார்கள்; கடைசியில் இவர்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள் என்று தீர்ப்பளிக்கின்ற ஒரு உலகளாவிய சட்டம் கொண்டுவரப்படும். — PK 512 (c. 1914). கச 188.6