கடைசிகாலச் சம்பவங்கள்
ஓய்வுநாளை ஆசரிக்கின்ற அனைவரையும் அழிப்பதே சாத்தானுடைய இலக்கு
“ஓய்வுநாளைக் கைக்கொள்ளும் இந்தத் தனிப்பட்ட சமயப்பிரிவினரை அமைதிப்படுத்துவதே நமது முதன்மையான அக்கறை என்றும், நம்முடைய அதிகாரத்திற்கு அடிபணியாத அனைவரையும் இறுதியாக ஒரு சட்டத்தின் மூலமாக அழித்து விடுவோம்” என்று மாபெரும் வஞ்சகன் கூறுகின்றான். TM472, 473 (1884). கச 187.2
இவ்வுலகில் தனது அதிகாரம் யாராலும் எதிர்க்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களை முற்றிலுமாக பூமியிலிருந்து அழித்துப்போட வேண்டும் என்பதே சாத்தானுடைய நோக்கமாக இருக்கின்றது. — TM 37 (1893). கச 187.3
மீதமான சபை, மாபெரும் சோதனைக்குள்ளாகவும் கடுந்துன்பத்திற்குள்ளாகவும் கொண்டுவரப்படும். தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவின் விசுவாசத்தைக் காத்துக்கொள்பவர்கள், வலுசர்ப்பத்தின் கோபத்தையும் அவனுடைய சேனைகளின் கோபத்தையும் உணருவார்கள். உலகத்தின் ஜனங்களை சாத்தான் தனது பிரஜைகளாக எண்ணுகிறான். அவன் மருளவிழுந்துபோன சபைகளையெல்லாம், தனது ஆளுகையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டான். ஆனால் இங்கே ஒரு சிறு கூட்டம் மட்டும் அவனது ஆளுகையை எதிர்க்கின்றது. எனவே அவர்களை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட்டால், அவனது வெற்றி முழுமையடைந்துவிடும். இஸ்ரவேலரை அழிப்பதற்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி புறஜாதி நாடுகளைத் தூண்டிவிட்டதுபோலவே, அருகிலுள்ள எதிர்காலத்தில் தேவனுடைய ஜனங்களை அழிப்பதற்கு, சாத்தான் பூமியின் துன்மார்க்க வல்லமைகளைத் தூண்டிவிடுவான். — 9T 231 (1909). கச 187.4