எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

134/230

குடும்ப ஜெபம்

ஒவ்வொரு கிறிஸ்தவ வீட்டிலும் ஜெபம், த்துதிகளாகிய காலை மாலை பலியினால் தேவன் மகிமைப்படுத்தப்பட வேண்டும். ஜெப வேலையை பிள்ளைகள் மதிக்கவும் மேன்மைப்படுத்தவும் போதிக்கப் படவேண்டும். காலையிலும் மாலையிலும் ஊக்கமான ஜெபத்தினாலும் உறுதியான விசுவாசத்தினாலும் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சுற்றிலும் ஓர் வெளி போட வேண்டியது அவர்களுடைய கடமையாயிருக்கிறது. LST 153.3

சபையிலும் வீட்டிலும் பிள்ளைகள் ஜெபிக்கவும் தேவனை நம்பவும் படிக்க வேண்டும். தேவனுடைய நியாயப் பிரமாணத்தை சொல்லும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள். மனத் தாழ்மையோடும், உருக்கமுள்ள இருதயத்தோடும், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் முன்னிருக்கும் சோதனைகள், ஆபத்துகளைப் பற்றிய உணர்வோடும் வாருங்கள்; அவர்களைக் கர்த்தர் காப்பாற்ற வேண்டுமென்று மன்றாடி விசுவாசத்தினால் அவர்களைப் பலி பீடத்தோடு காட்டுங்கள். பிள்ளைகள் சுருக்கமாக ஜெபிக்கக் கற்பியுங்கள். அவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுவது அவருக்குப் பிரியமென்று அவர்களுக்குச் சொல்லுங்கள். LST 153.4

பரலோகத்தின் ஆண்டவர் அப்படிப்பட்ட வீடுகளை ஆசீர்வதிக்காமற் பொவார? நிச்சயமாகவே இல்லை. அவ்விதம் தேவனுக் குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளைகளைப் பணிவிடை செய்யும் தூதர்கள் பாதுகாப்பார்கள். விசுவாசத்தினால் செலுத்தப்படும் துதியையும் ஜெபத்தையும் அவர்கள் கேட்டு தமது ஜனங்களுக்காக பரிசுத்தஸ்தலத்தில் ஊழியஞ் செய்கிறவரும் அவர்கள் னிமித்தம் தமது புண்ணியங்களைச் செலுத்துகிற வருமாகிய அவரிடத்தில் அவ் விண்ணப்பங்களைக் கொண்டு போகிறார்கள். ---- C.T. 110 LST 153.5