எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

135/230

வேதோபதேசமும் படிப்பும்

இயேசு சிறு பிள்ளையாயும் வாளிபமாயும் புருஷனாயுமிருந்த பொது வேத வாக்கியங்களைப் படித்தார். அவர் ஓர் சிறு பாலகனாக தமது தாயின் மடியிலிருக்கையில் அவர் அதிகாலையிலும் மாலை மயங்கும் வேளையிலும் மழைப் பக்கத்தில் அல்லது காட்டிலுள்ள மரங்களுக்குள் அடிக்கை தனிமையாய்க் காணப்பட்டார். அமைதியான அவ்வேளையை ஜெபத்திலும் தேவ வசனத்தை வாசிப்பதிலும் செலவிட்டார். அவர் வேத வாக்கியங்களைக் கருத்தாய்ப் படித்திருந்தார் என்பதற்கு அவருடைய ஊழியத்திலே அவர் அவைகளை தாராளமாய் உபயோகித்ததே சாட்சி. நாம் அறிவடைவது போல அவர் அறிவடைந்ததில்லை. அவருடைய அதிசயமான மனோவல்லமையும் ஆத்மிக வல்லமையுமாகிய இரண்டும் கல்விக்கு வேதகாமம் மிகப் பிரயோஜனமான ஓர் வழி என்று காட்டுகின்றது. LST 154.1

வேதகாமத்தைப் படிப்பதற்கு ஓர் ஆசையை எழுப்பி அதை அதிகப் படுத்தக் கூடியது அதை அதிகமாய் ஜெப வேளையின் உபயோகத்தாலே. எப்பொழுதும் காலை மாலை ஜெப வேளைகளே மிக்க இன்பமானதும் அதிகப் ப்ரயோஜனமுள்ள வேளைகளாயிருக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளும் இயேசுவைச் சந்திக்கவும் பரிசுத்த தூதர்களை வீட்டில் வர வளைக்கவும் கூடும் சமயங்களில் பல தொந்தரவுகளும் தகாத யோசனைகளும் குறுக்கிடும் என்று அறிந்து கொள்வார்களாக. LST 154.2

ஆராதனைச் சுருக்கமாயும், உயிருள்ளதாயும், சமயத்துக் கேற்றதாயும், வெவ்வேறு விதமாயிருப்பதாக. வேத வாசிப்பில் சகலரும் பங்கு பெறுவதுடன் தேவனுடைய நியாயப் பிரமாணத்தைப் படித்து அடிக்கடி அதை மனப்பாடமாகச் சொல்லுவார்களாக. பிள்ளைகள் சில வேளைகளில் வாசிப்புப் பாகம் தெரிந்தெடுக்கும் படி இடங் கொடுக்கப்பட்டால் அது அவர்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கக் கூடும். நீங்கள் அதைப் பற்றி அவர்களிடம் கேள்வி கேளுங்கள், அவர்களும் கேள்விகள் கேட்கட்டும். அதின் பொருளைத் திருஷ்டாந்தப்படுத்தத் தக்கதான எதையும் சொல்லுங்கள். இவ்விதம் ஆராதனை மிகவும் நீண்டு போகாதிருந்தால், சிறுவர் ஜெபத்தில் பங்கு பெறட்டும். ஒரே கவி பாட்டாயிருந்தால் அதிலும் அவர்கள் சேர்ந்து கொள்ளட்டும். LST 154.3

ஓர் ஆராதனை அவ்விதம் நடத்த வேண்டுமானால் அதற்கென்று யோசித்து ஆயத்தப்படவேண்டும். அனுதினமும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வேதத்தை ஆராய்ச்சி செய்வதற்காக போதுமான நேரம் செலவிட வேண்டும். இதற்கு முயற்சியும், முன் யோசனையும், கொஞ்சம் தியாகமும் செய்யவேண்டும் என்பதற்குச் சந்தேகமில்லை; ஆனால் அம்முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும். LST 155.1

அவருடைய பிரமாணங்களை போதிப்பதற்கான ஓர் ஆயத்தமாக பெற்றோரின் இருதயங்களில் அவைகள் மறைக்கப் பட்டிருக்க வேண்டுமென தேவன் கட்டளை இடுகிறார். “இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.” “நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிப்பாயாக” என்று அவர் சொல்லுகிறார். வேதத்தில் நமது பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதற்கு நாம் நாமே அதில் உற்சாகப் பட்டிருக்க வேண்டும். அதைப் படிப்பதற்கு ஓர் ஆசையை அவர்களில் எழுப்ப வேண்டுமானால் நம்மில் அந்த ஆசை உண்டாயிருக்க வேண்டும். நாம் அவர்களுக்குக் கொடுக்கும் போதனை நமது சொந்த முன் மாதிரி, ஆவியின் அளவுக்குத் தக்கதாக மாத்திரம் கிரியை செய்யும். ---- Ed. 185-7. LST 155.2