எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

133/230

பிள்ளைகள் வர இடங்கொடு

ஒவ்வொரு தாய்மாருடைய இருதய பாரத்தை இயேசு அறிவார்.வறுமையடைந்து சங்கடப்பட்ட ஓர் தாயை யுடையவராய் இருந்தவர். ஒவ்வொரு தாயும் படும் பிரயாசங்களைப் பற்றி அனுதாபப் படுகின்றார். ஓர் கானானிய ஸ்திரீயின் இருதயக் கவலையைத் தீர்ப்பதற்கென்று நீண்ட பிரயாணம் செய்தவர். இக் காலத்த்திலுள்ள தாய்மாருக்கும் அவ்வளவு சிதார். நாயீன் ஊர் விதவைக்கு அவருடைய ஒரே மகனைத் திரும்பக் கொடுத்தவரும் சிலுவையில் வேதனையடைந்திருக்கையில் தனது சொந்தத் தாயை நினைத்தவருமாகிய அவர் இக்காலத்தில் தாய்மார் படும் வருத்தத்தால் தொடப் படுகிறார். சகல துக்கங்களிலும் சகல அவசியங்களிலும் அவர் ஆறுதலும் சகாயமும் அளிப்பார். LST 152.2

தாய்மார் தங்கள் கவலைகளுடன் இயேசுவண்டை வருவார்களாக. அவர்க தங்கள் பிள்ளைகளை நடத்துவதற்கு வேண்டிய போதுமான கிருபையைக் கண்டடைவார்கள். இரட்சகரின் பாதத்தண்டை தங்கள் சுமைகளைக் கொண்டுவந்து வைக்கும் தாய்மார் ஒவ்வொருவருக்கும் வாசல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்” என்று சொன்னவர் இன்னும் தாய்மார் தங்கள் சிறுவர்களைத் தம்மிடம் ஆசீர்வதிக்கக் கொண்டுவரும்படி அழைக்கிறார். ஜெபிக்கும் தாயின் விசுவாசத்தின் மூலமாய் அவர் புயங்களில் ஏந்தும் சிசுவும் கூட சர்வ வல்லவரின் நிழலில் தங்குவது போலிருக்கலாம். யோவான் ஸ்நானகன் தன பிறப்பிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். நாமும் தேவனோடு ஐக்கியமாய் ஜீவித்தல் நமது சிசுக்களையும் அவர்கள் பிறப்பிலிருந்தே தேவ ஆவியானவர் செம்மைப் படுத்துவாரென நாம் எதிர்பார்க்கலாம். LST 152.3

தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளை கர்த்தரின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களென்றும் பரத்திர்கேன்று வளர்க்கும்படி அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களென்றும் என்ன வேண்டும். பரம சத்தியங்களின் அழகை நாம் அவர்களுக்குக் கொஞ்சங் கொஞ்சமாய் வெளிப்படுத்தி, கிறிஸ்துவினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களை நமது பிள்ளைகள் கிரகித்துக் கொள்ளக் கூடியவாறு நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இவ்விதம் கிறிஸ்தவ வீடானது ஓர் பள்ளிக்கூடமாகிறது, அங்கே கிறிஸ்து தாமே பிரதான் உபாத்தியாராகவும் பெற்றோர் அவருக்கு உட்பட்ட உபாத்திமாராகவும் ஊழியஞ் செய்கிறார்கள். LST 152.4

கிறிஸ்துவின் பின்னடியார்களாக உங்களை அவர்கள் நம்பிக் கொள்ளக் கூடுமாயின் அவர் நம்மில் அன்பு கூர்ந்திருக்கும் அப் பெரிய அன்பை அவர்களுக்கு இலகுவாய்ப் போதிக்கலாம். இரட்சிப்பின் சாத்தியங்களைத் தெளிவாக்கவும் கிறிஸ்துவை அவர்கள் சொந்த இரட்சகரா அவர்களுக்குக் காண்பிக்கவும் நீங்கள் பிரயாசப்படும் பொது தேவ தூதர் உங்களுக்கு அருகிலிருப்பர்கள். மெய்யாய் உலகத்தின் நம்பிக்கையாய் இருக்கிற பெத்லகேமின் குழந்தையைப் பற்றிய அருமையான சரித்திரத்தில் தங்கள் சிறுவருக்கு ஆசையை எழுப்ப கர்த்தர் தாய் தந்தையருக்குக் கிருபையளிப்பர். LST 153.1

சிறு பிள்ளைகள் தம்மிடம் வருவதைத் தடைபண்ண கூடாதென்று இயேசு சீஷர்களுக்குச் சொன்னபோது அவர் சகல யுகங்களிலுமுள்ள தமது பின்னடியார்களாகிய சபையின் உத்தியோகஸ்தர்களுக்கும், ஊழியர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் சகல கிறிஸ்தவர்களுக்கும் அதைச் சொன்னார். இயேசு பிள்ளைகளை இழுக்கிறார், “அவர்கள் வருகிறதற்கு இடங் கொடுங்கள் ” என்று அவர் நமக்குக் கட்டளையிடுகிறார்; அதாவாது நீங்கள் தடைபண்ணா விட்டால் அவர்கள் வருவார்கள் என்று அவர் சொல்வது போலாகும். ---- D.A. 512-7. LST 153.2