எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
முன்னுரைகப்பட்டவைகள் நிறைவேறின
முன் சம்பவித்தவைகளையும் இனி சம்பவிக்கப்போகிறவைகளையும் குறித்து மனிதருக்குத் தெரிவிக்கும் வல்லமை சகல பொய்த் தேவர்களினின்றும் மெய்த் தேவனை வித்தியாசப்படுத்திக் காட்டுவ தற்கோர் அடையாளமாய் யிருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் யெகோவா அஞ்ஞானிகள் வழிபடும் தேவர்களை ஓர் கேள்வி கேட்கிறார்: “அவர்கள் சம்பவிக்கப் போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி நாம் நம்முடைய மனதை அவைகளின் மேல் வைக்கும் படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; பான் வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம். ” இப் பொய்த் தேவர்கள் இதைச் செய்யக்கூடாதிருப்பதினிமித்தம், “இதோ நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்து கொள்ளுகிறவன் அருவருப்பானவன்” என்று யெகோவா கூறுகிறார். ஏசா 41:22-24 LST 114.1
தேவனுடைய மெய்யான தீர்க்கதரிசிக்கான பரீட்சா சாதனங்களில் ஒன்று அவன் சொன்ன வார்த்தைகளின் படியே நிறைவேறுவது. ஓர் மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலமாய் தேவன் பூர்வ இஸ்ரவேலுக்குச் சொன்னதாவது: LST 114.2
“கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில் ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நட்வாமலும் நிறைவேராமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்பட வேண்டாம் .” உபா 18:21,22 LST 114.3
உவைட் அம்மாளுக்கு தீர்க்க தரிசன முன்னுணர்ச்சி அளிக்கப் பட்டிருந்த தென்பதற்குப் பல திருஷ்டான்ந்தங்கள் கூறப்படலாம். முன்னறிமுகமற்ற ஆட்களை அவர் அடிக்கடி காட்சியில் கண்டார். பின்னால் அவர் தமது பிரயாணங்களில் இவ்வாட்களைச் சந்தித்து அவர்கெளுக்கென்று காட்சியில் தமக்களிக்கப் பட்ட தூது மொழிகளை அவர்களுக்குக் கொடுத்தார். மானிடர் எவரும் அவைகளை அவரிடம் அறிவித்திருக்க முடியாது. ஏனனில் அச்செய்திகள் அவர்களுடைய நடத்தைகளையும் உள் நோக்கங்களையும் வெளிப்படுத்துகிற தாயிருந்தது. LST 114.4
அவருடைய வேலையின் ஆரம்பத்தில், அவரும் அவருடைய புருஷனும், ஜோசப் பேட்ஸ் போதகருமாகிய இவர்கள் மாத்திரம் ஓய்வுநாள் சத்தியத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், அவ்வியக்கம் அற்பமாய் ஆரம்பித்து அவர்கள் அதிலே ஆரம்ப ஊளியர்களா யிருந்தபோது அவருக்கு அவ்வியக்கதின் பிற்கால வளர்ச்சியின் காட்சி காண்பிக்கப்பட்டது. 1848, நவம்பர் 1ல் மாஸாச் சுசேட்ஸ் மாகாணத்திலுள்ள டோர் செஸ்டரில் கூடின ஓர் கூட்டத்தில் உவைட் அம்மாளுக்கு ஓர் காட்சி யளிக்கபட்டது. அதிலே அவர் தூதானது எழும்பிப் பிரகாசிக்கும் சூரியனைப் போல வர வர உலகமெங்கும் மகிமையாய்ப் பிரகாசிக்கிரதாகக் கண்டார். LST 115.1
இக்காட்சியிலிருந்து வெளியேறினதும் அவர் தமது புருசனைக் கர்த்தர் ஓர் சிறிய பத்திரிகை அச்சடிக்க விரும்பினாரென்றும், சத்தியத்தை பிரசுரிக்கும் வேலையானது வளர்ந்து பெருகி அப்பிரசுகள் பூமியெங்கும் பாய்ந்தோடும் ஒளி அருவிகள் போலிருக்குமென்றும் தாம் புருஷனிடம் சொன்னார். மனுஷ பார்வையில் இது நிச்சயமாகவே ஓர் துணிகர உரையாகத் தானிருந்தது. விசுவாசிகள் தொகையில் சொற்பமானவர்களும், இவ்வுலக ஆஸ்தியில் தரித்திரமாயிருந்ததுந் தவிர அவர்களுடைய கொள்கைகள் விரும்பப்படாதவைகளாயும் மிருந்தன. என்றாலும் எல்லாம் செய்ய வல்ல தேவன் இவ்வார்த்தையை ஆச்சர்யமான பிரகாரமாய் நிறைவேற்றி யிருக்கிறார், அக் காலத்திலிருந்து இச்சங்கத்தாரால் அச்சடிக்கப் பட்ட சத்தியம் நிறைந்த பிரசுரங்கள் நாளடைவில் விருத்தியடைந்து, இப்பொழுது உலகமெங்கும் அச்சடித்து விற்கப்படும் பிரசுரங்களின் விற்பனை வருஷத்திற்கு உத்தேசம் 5,000,000 டாலருக்கு அதிகமாயிருக்கிறது (சுமார் ரூ 15,000,000 ) LST 115.2
உவைட் அம்மாள் தாம் முன் கண்ட காட்சிகளைச் சொன்ன போது கர்த்தரின் வருகைக்கு முன் அட்வென்திஸ்தர் கடந்து செல்ல வேண்டிய அனுபோகங்களைத் திட்டவட்டமாய்க் காண்பித்தார். மரித்தோரின் ஆவியுடன் சம்பாசிக்கலாம் என்னும் கொள்கையின் பிரசனங்கள் நியூ யார்கிலுள்ள ரோச்செஸ்டரில் “இரகசியத் தட்டுகள் ” மட்டில் வெளிப்பட்டிருந்த போது இனி பின்னால் அவ்வேலை விரைவாயும் பிரமாண்டமாயும் வளரும் என்று அவருக்கு காட்டப்பட்டது . இவைகளும் இன்னும் பல தீர்க்க தரிசனங்களும் பிரசுரிக்கப்பட்டு விஸ்தாரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இத் தீர்க்கதரிசனகள் எழுதப்பட்ட காலத்திலிருந்து சம்பவித்திருக்கும் சம்பவங்கள் அவைகளில் அநேகம் உண்மையென்று ரூபிதிறுக்கின்றன. சொல்லப்பட்ட நேரம் நிறைவேறிவிட்டதினால் ஏழாம் நாள் அட்வெந்திஸ்தரின் காரியம் முடிவில் ஜெயமாய் முடியும் என்பதைக் குறித்து அவர் சொல்லியிருக்கும் தீர்க்க தரிசனங்களும் அப்படியே நிறைவேறும் என்னும் நம்பிக்கை அதிகரித்திருக்கின்றது. இவ் வியகத்தின் தலைவர்களும் ஊழியர்களும் அவருடைய வாய் மொழி, நிருபங்கள் மூலமாய் கிடைக்கப் பெற்ற ஆலோசனைகள், புத்தி போதனைகளினால் இவ்வியக்கம் விசேஷ முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. LST 115.3
* * * * *