எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
வேதவாக்கியங்கள் மகிமைப்படுத்தப்பட்டன
மிஸிஸ். உவைட் அம்மையாரின் நூல்கள் வேதாகமத்தையே ஆவிக்குரிய சாத்தியங்களுக்கெல்லாம் பெரிய ஆதாரமாக அடிக்கடி காட்டுகின்றன. அவைகளில் தக்க வாறு வேதவாக்கியங்கள் எடுத்துக் கூறப்பட்டிருப்பதுமன்றி, அவைகளுக்கு அவர் கொடுக்கும் பொருளும் சாமானியமானதல்ல. அவராகிலும் அல்லது அவருடைய கூட்டாளிகலாகிலும் அந்நூல்கள் வேதாகமத்தோடு கூட்டப்பட்டன வென்றும் வேதாகமத்தைப் பார்க்கிலும் அவைகளை அதிகமாய் ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றும் மதிக்கிரதில்ல. அவர் தாமே அதைக் குறித்து எழுதுகிறதாவது : LST 113.1
“அதிக இருளடைந்த மனதையும் பிரகாசிப்பிக்கிறதற்கு தேவ வசனம் போதுமானது, மேலும் அதை அறிந்துகொள்ள விரும்புவோர் அதை அறிந்துகொள்ளலாம்.ஆனால் தேவ வசனத்தை ஆராய்ச்சி செய்கிறதாகச் சொல்லுகிறவர்களாகிய சிலர் அதின் மிக்க தெளிவான போதனைகளுக்கும் விரோதமாய் ஜீவியஞ் செய்கிறதாய்க் காணப்படுகிறார்கள். பிறகு புருஷர்களும் ஸ்திரீகளும் போக்குச் சொல்ல இடமில்லாதிருக்கும்படிக்கு முன் அசட்சை செய்த தேவ வசனத்தை அவர்கள் திரும்பவும் கைக்கொண்டு நடப்பதற்கு தேவன் அவர்களுக்குத் தெளிவானதும் குறிப்பானதுமான சாட்சி மொழிகளைக் கொடுக்கிறார்.” சாட்சி மொழிகள் தேவ வசனத்தை அற்பமாக்கு வதற்கல்ல, திவ்வியமான சத்தியம் யாவருக்கும் தெளிவாய்ப் படத்தக்கதாக அதை மேன்மைப்படுத்தவும் கவனங்களை அதற்கு நேராக இழுக்கவுமே அவைகள் அருளப்பட்டிருக்கின்றன.” LST 113.2
“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற் காலத்து வெளிச்சமில்லை’ என்பதே நாம் வழங்கும் குறிப்புச் சொற்களாயிருக்கவேண்டும். மிகவும் அருமையான சத்தியம் நிறைந்த ஓர் வேதாகமம் நமக்குண்டு. அறிவின் ஆதியும் அந்தமும் அதில் அடங்கியிருக்கிறது. தேவ ஆவியினால் அருள்ளப்பட்ட தேவ வாக்கியங்களெல்லாம் ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் , எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதி யுள்ளவனாகவும், இருக்கும் படியாக அவைகள் உபதேசத்துக்கும் , கடிந்து கொள்ளுதலுக்கும், சீர் திருதலுக்கும் , நீதியைப் படிபிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளா யிருக்கிறது.’ வேதாகமத்தை உன் ஆராய்ச்சிப் புஸ்தகமாக எடுத்துக்கொள்.” LST 113.3
ஊழியத்திலுள்ள சகோதரரானவர்களுக்கு அவர் எழுதின தாவது; “கிறிஸ்து ஒருபோதும் சொல்லாததும் வேதாகாமத்தில் யாதொரு ஆதாரமுமில்லாததுமான கொள்கைகளையும் பரீட்சாசா தனங்களையும் போதிக்கக்கூடாது. ஜனங்களுக்குக் கொடுப்பதற்கு மகிமையும் பக்தி விநயமுமான சத்தியங்கள் நமக்குண்டு. ‘ எழுதியிருக்கிறதே’ என்னும் பரீட்சாசாதனமே ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் உணர்த்தப்படவேண்டும். வழி நடத்துதலுக்காக நாம் தேவ வசனத்தண்டை போவோமாக. ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்பதை நாம் தேடுவோமாக. தக்கப்படியான மானிட முறைகள் எல்லாம் நாம் பார்த்துவிட்டோம். லெளகீக சாஸ்திரத்தில் மாத்திரம் தேறினமனதையுடையவன் தேவ காரியங்களைக் கிரகித்துக்கொள்ளமாட்டான்; ஆனால் அதே மனதையுடையவன் மனந்திரும்பி பரிசுத்தமாக்கப் பட்டால், வசனத்தில் தேவ வல்லமை இருக்கிறதைக் காண்பான்.” LST 113.4