எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

94/230

இருபத்து நாலாம் அத்தியாயம்—பின்னான வேலைகளைப் பற்றிய சுருக்கம்

உவைட் அம்மாளின் ஜீவியதைப் பற்றி முன்னுரைக்கப்பட்ட தெல்லாம் அவருடைய பகிரங்க பிரயாசங்களே. 1855ல் மிச்சிகானி லுள்ள பாற்றில் கிரீக்குக்குஸ்தலம் மாற்றி போன முன்னால் மிகவும் அதைரியமாய்த்த தோன்றின காரியங்கள் அதிக அனுகூல மடைந்து காணப்பட்டன. போதகரோடும் அவருடைய மனைவி உவைட் அம்மலோடும் நின்று அவர்களுடைய பாரச்சுமைகளை இலகுவாக்குவதற்கு அவர்களுக்கு தரத்திறத்துடன் போராடி எழும்பின விசுவாசிகளான சில நண்பர்கள் கிடைத்தார்கள் . LST 116.1

ஆயினும் உவைட் அம்மாள் சுகமாய் வீட்டில் தரித்திருக்க ஒரு போதும் பிரியப்படவில்லை. அவருடைய ஆரம்ப வருசங்களைப் போலவே அவருடைய பிற்கால ஜீவிய வருஷங்களில் அதிகம் புதிய இடங்களில் ஆரம்ப வேலைகள் செய்வதில் செல விடப் பட்டது. 1872 ல் அவர் தமது புருசனோடு கலிபோர்னியாவுக்கு வந்தார். அங்கே அவர்கள் பூர்ண வசதியுள்ள இன்னொரு அச்ஆபீசை ஸ்திரப்படுத்தி “காலங்களின் அடையாளங்கள் ” என்னும் ஓர் வார்ப் பத்திரிகையை வெளியிட்டார்கள். 1881ல் அவருடைய புருசன் மறித்து போனார். அதற்கு பின் சில வருஷங்கள் சென்ற பிறகு அவர் அத்லாந்திக் சமுத்திரத்திற்கப்பால் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள விசுவாசங்களின் பிரதி நிதிகளானவர்களைத் தைரியப் படுத்தவும் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கவும் புறப்பட்டார். அங்கே அவர் இரண்டு வருஷங்களாக ஜனங்களுக்குள் கடும் பிரயாசப் பட்டு உழைத்து 1887-ல் அமெரிக்கா திரும்பினார், சொந்த நாட்டில் நாலு வருஷங்கள் மாத்திரம் இருந்து விட்டு பிறகு 1891ல் பசிபிக் சமுத்திரத்தைக் தாண்டி ஆஸ்திரேலியா சென்றார்; அங்கே அவர் உத்தேசம் பத்து வருஷம் ஊக்கமாய் உழைத்தார். இக்காலத்தில் அவர் எவ்வேலையின் பொருட்டு தமது ஜீவனைத் தத்தம் செய்தாரோ அவ்வேலை அதிசயமான விதமாய் வளர்த்திருப்பதை கண்டார். அங்கே அவர் காட்டைச் சுத்தப் படுத்தி, தோட்டத்தையும் பழத் தோட்டத்தையும் நாட்டி, ட்ரைனிங் ஸ்கூல் ஸ்தாபிப்பதர்கென்று காட்டிலே வாங்கப் பட்ட ஓர் வீட்டையும் கட்டி அவ்விதம் திரும்பவும் ஆரம்ப வேலை செய்தார். LST 116.2

உவைட் அம்மாள் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்ததும் கலிபோர்னியாவிலுள்ள செயின்ட் ஹெலினாவுக்கு கருகில அமைதியாயுள்ள ஓர் நாட்டுப் புறத்தில் அவர் தமக்கு ஓர் வீட்டைக் கட்டினார். இங்கே அவர் தமது உண்மையுள்ள காரியதரிசனங்களைக் கொண்டு எவ்வளவு காலம் எழுதவும் புஸ்தகங்கள் தயாரிக்கவும் கூடிய திருந்ததோ அவ்வளவு காலத்தையும் அவ்விதம் செலவிட்டார். ஆயினும் இவ்வேலை அவர் பாளயக் கூட்டங்களுக்கும் அவருடைய பகிரங்க சாட்சி மொழிகள் அதிக அருமையாய் எண்ணப்படும் மற்றும் பெரிய கூட்டங்களுக்கும் அடிக்கடி போனதினிமித்தம் அதிகமாய் தடைப்பட்டது LST 117.1

நிருபங்கள் எழுதுவதிலும், பிரசங்கிப்பதிலும் பல தேசங்களில் எழுபதாண்டுகள் சரியாய் ஊக்கமாய் உழைத்த பிறகு உவைட் அம்மாள் செயின்ட் ஹெலினாவுக் கரிகிலுள்ள தமது வீட்டில் 1915ஜூலை 16ல் இயேசுவுக்குள் சமாதானத்துடன் நித்திரை அடைந்தார். ஜூலை 24 ம் தேதி மிச்சிகானைச் சேர்ந்த பற்றில் கிரீக்கிலுள்ள ஒக் கில் கல்லறையில் அவருடைய புருசன் பக்கத்தில் அடக்கம் பண்ணினார்கள் LST 117.2

அடக்க ஆராதனையில் செய்யப்பட்ட பிரசங்கத்தில் அவருடைய ஜீவிய வேலையைக் குறித்து ஏழாம் நாள் அட்வென்திஸ்தரின் ஜெனரல் கான்பிரன்ஸ் சங்கத் தலைவரான A.G. தானியேல்ஸ் போதகர் சொன்னதாவது: LST 117.3

“ஒருவேளை உவைட் அம்மாளின் ஜீவிய வேலையில் எந்தப் பாகம் உலகத்திற்கு மிகுந்த பிரயோஜனமாயிருந்திருக்கிரதென்று திட்டமாய்ச் சொல்லுவதற்குப் நமக்கு ஞானம் போதாதிருக்கலாம் .ஆனால் அவர் விட்டுப் போயிருக்கும் மேலான சன்மார்க்க நூல்கள் எல்லாம் மனுக்குலத்திற்கு ஏராளமான நன்மையுன்டாக்குமென்று காணப்படுகின்றது. இவைகளில் சில உலகின் பல பாகங்களில் பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன . இப்பொழுது லட்சத்திற் கதிகமான பிரதிகள் வெளியாகியும் இன்னும் ஜனங்களுக்கு ஆயிரக் கணக்காய் போய்க கொண்டுமிருக்கின்றன LST 117.4

“மனுசனுக்கும் தேவனுக்குமுள்ள சம்பந்தத்தையும் மனுசனுக்கும் மனுசனுக்குமுள்ள சம்பந்தத்தையும் பற்றிய முழு விசேஷ சத்தியத்தையும் பார்க்கும் போது உவைட் அம்மாளின் ஜீவிய வேலையானது இப்பெரிய சாத்தியங்களை நிச்சயமாய் உறுதி படுத்தி ஆதரிதிருகின்றதென்பது தெளிவாகும், அத்தியாவசிப்பட்ட விசயங்களிலெல்லாம் அவர் மனுசீகத்தைத் தொட்டிருக்கிறதுமன்றி அதிக மேலான ஓர் நிலைமைக்கு அவர் அதை உயர்த்தியிருக்கிறார். LST 117.5

“இப்பொழுது அவர் இளைப்பாருகிறார், அவருடைய சத்தம் கேட்கப் படவில்லை; அவருடைய பேனா தள்ளிப் போடப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த ஊக்கமும் பலமும், நிறைவான ஆவியுமுள்ள ஜீவியத்தின் மகத்தான வல்லமை எப்பொழுதும் நிலைத்திருக்கும். அந்த ஜீவியம் நித்தியமானவரோடு இணைக்கப்பட்டிருந்தது கூறப்பட்டுள்ளயாவும் செய்யப்பட்டுள்ள வேலையும் ஒரு போதும் சின்ன பின்னமாகாத அல்லது கெடாததோர் ஞாபகக் குறியை விட்டு வைத்திருக்கின்றன . மானிட ஜீவியத்தின் ஒவ்வொரு பாகதையுங் குறித்துச் சொல்லுகிறதும், குடும்பம், நகரம், மாகாணம் ஜனம் முதலான சமூக வாழ்வுக்கவசியமான ஒவ்வொரு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் மென்று ஏவி எழுப்புகிறதுமான அவருடை பல நுல்களெல்லாம் மக்களின் எண்ணத்தையும் தனித்தனிமையான அவர்கள் குணங்களையும் எப்பொழுதும் சீர் படுத்திக் கொண்டிருக்கும். அவைகளின் செய்திகள் முன் பரிபாலிக்கப் பட்டதைவிட அதிகமாய் பரிபாலிக்கப் படும் .எதற்காக அவருடைய ஜீவன் பிரதிஷ்டை செய்யப் பட்டதோ ,எதை அந்த ஜீவன் அவ்வளவுக்கதிகமாய் ஸ்திரப்படுத்தி முனேற்றம் செய்ததோ அவ்வேலையானது காலஞ் செல்லச் செல்ல அதிகப் பழமையும் துரிதமாயும் முன்னேறிச் செல்லும் ” LST 118.1