எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

69/230

நித்திய ஐஸ்வர்யத்தை நாடித் தேடுதல்

பூலோக கிரீடத்தை அவ்வளவு ஊக்கமாய்த் தேடின கூட்டத்ஹைப் பற்றி சிலருக்கு வெறுப்புண்டாயிற்று, அவார்களுடைய மோட்சத்தைக் குறித்து அவர்கள் கொஞ்சம் உணர்ந்ததாக தோன்றியது. ஆனது பற்றி அவர்கள் அதை விட்டு திரும்பி பரம கிரீடத்தை ஊக்கமாய் நாடினார்கள். இருளடைந்து துக்கமாயிருந்த அப்படிப்பட்டவர்களின் முகங்கள் சீக்கிரம் இருளில் இருந்து வெளிச்சமாயும் துக்கத்தில் இருந்து மகிழ்ச்சியாயும் பரிசுத்த சந்தோஷமாயும் மாறிற்று. LST 78.2

பிறகு நான் கும்பலுக்கு ஊடே பரம கிரீடத்தை கண்ணைப் பார்த்து நெருக்கிக் கொண்டு சென்ற ஓர் கூட்டத்தைக் கண்டேன். ஒழுங்கற்ற கும்பலுக்கு ஊடே அவர்கள் உற்சாகமாய் நெருக்கிச் சென்ற போது தேவ தூதர்கள் அவர்களுடான் சென்று முன்னேறிச் செல்ல அவர்களுக்கு இடம் உண்டாக்கினார்கள்.அவர்கள் அப்பறமா கிரீடத்திற்கு சமீபித்த போது அதிலிருந்து உண்டான வெளிச்சம் அவர்கள் மேலும் அவர்களைச் சுற்றஈளும் பிரகாசித்தது மன்றி அவர்களுடைய இருளை அகற்றி அவர்ர்கள் மறு ரூபமடைந்து தேவ தூதர்களைபோலாகுமட்டும் அது அதிகத் தெளிவாயும் பிரகாசமையும் இருந்தது. அவர்கள் பூலோக கிரீடத்தை ஒரு முறை ஆயினும் கடைக் கண் பார்வை பார்க்க வில்லை. பூலோக கிரீடத்தைப் பற்றி போனவர்கள் அவர்களை பரிகாசம் பண்ணி அவர்களுக்குப் பின்னாக கருப்பு பந்துகளை விட்டெறிந்தனர் அவர்கள் பரம கிரீடத்தின் மேல் கண்ணை இருந்ததினால் இவைகள் அவர்களுக்கு யாதொரு தீங்கும் விளைவிக்கவில்லை. அனால் கருப்பு பந்துகளை கவனித்த வர்களோ அவைகளினால் கறைப்பட்டார்கள். பின் வரும் வேத வசனங்கள் எனக்குக் காண்பிக்கப் பட்டன: LST 78.3

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம்;; இங்கே பூசியும் துருவஊம் அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டு திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூசியாவாது துருவாவது கெடுக்கிரதில்லை.அங்கே திருடர் கன்னமிட்டு திருடுவாதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். LST 79.1

“கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாய்இருந்ததால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.இப்படி உன்னில் உள்ள வெளிச்சம் இருள்ஆய் இருந்தால் அவ்விருள் எவ்வளவு அதிகமைருக்கும்! LST 79.2

“இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனை சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது” LST 79.3