எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

68/230

எளியோரை மதித்தல்

வறுமையும் நிர்பந்தமும் ஆன ரூபங்கள் அத்திரள் கூட்டத்தில் காணப்பட்டு அங்கிருந்த அப்போக்கிஷங்களை கருத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. பலமுள்ளவர்கள் பலவீனரை மேற்கொண்டு துரத்திப் போடவே அவர்கள் விசனத்துடன் திரும்பினார்கள். என்றாலும் அவர்கள் அப்படி அதை விட்டு விட மனம் இல்லாமல் உருக்குளைந்ததும் , நோய்பட்டதும், மூப்பும் உள்ளதுமணா ஓர் திரள் கூட்டத்துடன் அவர்கள் பூலோகக் கிரீடத்தைநோக்கி நெருக்கி செல்ல வகை தேடினார்கள். சிலர் அதை கிட்டிச் சேர பார்த்ததில் செத்தார்கள். மற்றவர்கள் அதை பற்றி பிடிக்க இயலாமல் விழுந்தார்கள். அனேகர் அதை தொட்டும் தொடாமலும் இருக்கும் போது விழுந்தார்கள்.சவங்கள் தரையில் சிதறிக் கிடந்தன., என்றாலும் அக்கூட்டத்தினர் தங்களில் விழுந்து போனவர்களையும் செத்துப் போனவர்களின் பிரேதங்களையும் மிதித்துக் கொண்டு முன்னே பாய்ந்தனர். அக்கிரீடத்தை அடைந்த ஒவ்வொருவருக்கும் அதில் ஓர் பங்கு கிடைத்ததனால் அதை சுற்றி வாஞ்சையுடன் பார்த்து கொண்டு நின்ற கூட்டம் பேரொலிமுழக்கமாய் புகழ்ந்தது. பெருங்க்கூட்டமான பொல்லாத தூதர்கள் அதிக வேலையாய் இருந்தார்கள். சாத்தான் அவார்கள் மத்தியில் இருந்தான். அக்கிரீடத் தற்காகப் போராடின கூட்டத்தை பற்றி சகலரும் மன ரம்மியமாய்க் காணப்பட்டனர். அதை ஊக்கமாய் தேடினவர்களுக்கு அவன் ஒரு விசேஷ மந்திரம் செய்கிறதாகத் தோன்றினான். LST 77.1

இப்பூலோக கிரீடத்தை தேடினவர்களில் அனேகர் க்ரிச்தவர்கலென்று சொல்லிக் கொண்டார்கள். அவர்களில் சிலருக்கு கொஞ்சம் வெளிச்சம் கிடைப்பதைத் தோன்றியது.அவர்கள் பரம கிரீடத்தை ஆசையுடன் நோக்கி பார்த்து அதன் அழகினால் அடிக்கடி மயக்கம் அடைந்து காணப்பட்டாலும் அவார்களுக்கு அதன் அருமையும் மகிமையும் பற்றிய மெய்யறிவு கிடையாது. அவர்கள் ஒரு கையினால் பரம க்ரீடாதை சோர்வாய்த் தொட்டுக் கொண்டு மற்ற கையினால் ஊக்கமாய் பூலோக கிரீடத்தை பிடிஹ்டுக் கொண்டு அதையே பெற்றுக் கொள்ளவேண்டுமென்னும் தீர்மானம் உள்ளவர்களாக இருந்தார்கள். பூலோக க்ரீடதிர்காக அவர்கள் ஊக்கமாய் முயன்றதில் பரம கிரீடத்தை தவற விட்டு விட்டார்கள். அவர்கள் அந்தகாரத்தில் விடப்பட்டிருந்தாலும் பூலோகக் கிரீடத்தைப் பெறுவதற்கு அவர்கள் ஆத்திரத்துடன் தடவித் திரிந்தனர். LST 78.1