சபைகளுக்கு ஆலோசனை
சொல்ல முடியாமற்போன தரிசனம்
1890, நமம்பர் மாதம் நீயூயோர்க் நகரிலுள்ள சாலமான்கா என்ற இடத்தில் தொடர்ச்சியாகப் பிரசங்கக் கூட்டங்கள் நடந்தன. சில பொதுக்கூட்டங்களில் உவைட் அம்மையார் பேசினார். அவருக்கு ஜலதோஷம் உண்டாயிற்று. மிகுந்த பலவீனம் அடைந்தார். நோயால் அவதிப்பட்டதுடன் மனச் சோர்வும் உண்டானது. அவர் தம் அறைக்குச் சென்றார். தமக்குப் பலமும் நலமும் அளிக்குமாறு கடவுளிடம் மன்றாடுவதற்காக முழந்தாளில் நின்றார். அப்பொழுது நிகந்ததை அம்மையார் அடியிற்கண்ட வண்ணம் கூறுகிறார்:- CCh 51.2
“நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. அதற்குள் அறை முழுவதும் சிறு ஒளி பரவியது. என் ஏமாற்றமும் மனச் சோர்வும் பறந்து போயின. என் உள்ளத்தில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாயின. கிறிஸ்துவின் சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது.” CCh 51.3
அதற்குப் பின் அம்மையாருக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அத்தரிசனம் கண்ட பின்பு அவர் தூங்க விரும்பவில்லை. அவர் நல்ல உடல் நலம் பெற்று இளைப்பாறினார். CCh 51.4
அடுத்த நாள் காலை எல்டர் ஏ.டி.இராபின்சனும், அம்மையார் புதல்வர் உவில்லியம் உவைட்டும், அவரைப் பார்க்கவிரும்பி அவர் அறைக்கு வந்தனர். அம்மையார் பாட்டில் க்ரீக்கில் தம் இல்லத்திற்கு போகிறார்களோ அல்லது கூட்டத்திற்கு போகிறார்களோ என்று அறியவே அவர்கள் வந்தார்கள். அம்மையார் கூட்டத்திற்குப்போக உடை அணிந்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு வியப்பு அடைந்தனர். அம்மையார் தமக்கு நோய் நீங்கி விட்டதாகக் கூறினார். தாம் கண்ட தரிசனத்தையும் கூற விரும்பினார். சென்ற இரவில் எனக்கு அளித்த தரிசனத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும். நான் பாட்டில் க்ரீக்கில் இருப்பதாகக் கண்டேன். ஒரு தேவ தூதர் வந்து என் பின்னே வா என்று அழைத்தார் என்றார். அப்புறம் அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. இரு முறை முயன்றார். தரிசனம் நினைவில் வரவே இல்லை. சில நாட்களுக்குப் பின் அத் தரிசனத்தைப்பற்றி அடியிற்கண்ட வண்ணம் அம்மையார் எழுதினார். அது அமெரிக்க சென்றினல் என்னும் நமது மார்க்க சுதந்திரப் பத்திரிகைக்காக வகுத்த திட்டங்கள் பற்றியது. CCh 51.5
“இரவில் ஆலோசனைக் கூட்டங்களுக்குப் போனேன். நல்ல செல்வாக்குள்ள சிலர் ‘அமெரிக்கன் சென்றினல்’ பத்திரியைப்பற்றி பேசினார்கள். அந்தப் பத்திரிகையில் ஏழாம் நாள் அட்வென்றிஸ்தர் (Seventh-day Adventists) என்ற பெயரை நீக்க வேண்டும்; ஓய்வு நாளைப்பற்றி அதில் ஒன்றும் எழுதக்கூடாது. அப்பொழுது பெரிய மனிதரின் ஆதரவு அப் பத்திரிகைக்கு கிடைக்கும். பத்திரிகை எங்கும் மிகுதியாகப் பரவும் நல்ல பயனும் உண்டாகும் என்பது அவர்கள் கருத்து. இந்த ஆலோசனை கேட்பதற்கு பிரீதியாக இருந்தது. CCh 52.1
“அவர்கள் முகம் பிரகாசிப்பதைக் கண்டேன். சென்றினல் பத்திரிகையின் முன்னேற்றத்திற்காகப் பல வகை முயற்சிகள் செய்தார்கள். இருதயத்திலும் ஆத்துமாவிலும் சத்தியம் இன்னும் நிரம்பாத பெரும் மக்களே இந்த ஆலோசனைகளை வெளியிட்டனர்.” CCh 52.2
இத் தரிசனத்தில் அம்மையார் பத்திரிகையின் நிர்வாக ஒழுங்கைப்பற்றி சிலர் விவாதித்தனர் என்று கண்டார். 1891, மார்ச்சு மாதம் ஜெனரல் கான்பரன்ஸ் (General Conference) நடந்தது. நாள்தோறும் காலை 5ண மணிக்கு ஊழியக்காரருக்கும் ஓய்வு நாள் பிற்பகல் அங்கு கூடிவரும் பொது மக்களுக்கும் உபதேசம் செய்யும்படி தலைவர்கள் அம்மையாரைக் கேட்டுக்கொண்டனர். ஓய்வுநாள் பிற்பகல் அம்மையார் பேசினார். அப்பொழுது சுமார் 4000 பேர் அங்கு கூடியிருந்தனர். மனிதர் உங்கள் நற் கிரியைகளைக் கண்டு, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது. என்ற வேத வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உபதேசம் பண்ணினார். அட்வென்றிஸ்தர் அனைவரும் தங்கள் நம்பிக்கையை உலகிற்குத் தெளிவாய்க் காண்பிக்க வேண்டும் என்பதே அவர் உபதேசத்தின் கருத்து. CCh 53.1
சாலமான்காவில்; கண்ட தரிசனத்தைக் கூறவிரும்பினார். மூன்று தடவை முயன்றும் பயன்படவில்லை. அவர் அதைக் கூறாதபடி கடவுள் தடை செய்தார். தரிசனத்தைச் சொல்லத் தொடங்கும்போது, அது மறந்துபோகும். ஆதலால் இதைப் பற்றி இன்னும் சொல்லவேண்டியதுண்டு. அதைப் பின்னே சொல்லுவேன். என்று கூறினார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசினார். யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் கண்ட தரிசனத்தைச் சொல்ல முடியவில்லை என்பதை அங்கு இருந்தோர் யாவரும் உணர்ந்தனர். CCh 53.2
ஜெனரல் கான்பரன்ஸ் கூட்டத்தின் தலைவர் அம்மையாரிடம் வந்து அடுத்த நாள் காலை ஆராதனை தாங்கள் நடத்த முடியுமா? என்று கேட்டார். அம்மையார் அவரிடம் என்னால் முடியாது. நான் மிகவும் களைத்துப்போனேன், நான் சொல்லவேண்டிய சாட்சியம் சொல்லி விட்டேன். வேறு ஒழுங்கு செய்துகொள்ளுங்கள். என்றார். CCh 53.3
அம்மையார் வீட்டுக்கு வந்தார். “நான் மிகவும் களைத்துப் போனேன். நாளைக் காலை ஆராதனைக்குப் போகமாட் டேன். நன்றாக தூங்கி இளைப்பாற வேண்டும் ஒருவரும் என்னை எழுப்ப வேண்டாம் என்று தம் வீட்டாருடன் கூறிவிட்டு நித்திரை செய்யச் சென்றார். CCh 53.4
அன்று ஜெனரல் கான்பரன்ஸ் கூட்டம் (General Conference) முடிந்த இன், ரிவ்யூ அன் ஹெரால்ட் (Review and Herald) காரியாலத்தில் சிலர் கூடினர். அவர்கள் அமெரிக்கன் சென்றினல் பத்திரிகையின் பிரதிநிதிகளும், மத சுதந்திரச் சங்கப்பிரதி நிதிகளும் ஆவர். அவர்களை அலட்டிக் கொண்டிருந்த அதே பிரச்சினையை - ஓய்வு நாளைப்பற்றி ஒன்றும் சொல்லக்கூடாது; செவன்த் - டே - அட்வென்றிஸ்ட் (Seventh-day Adventist) என்ற வார்த்தைகளை எடுத்துவிட வேண்டும் - என்பதை விவாதித்தனர். விவாதம் தொடங்குமுன் அறையின் கதவைப் பூட்டிவிட்டார்கள் - இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணுமுன் கதவு திறப்பதில்லை என்று தீர்மானமும் செய்தனர். CCh 54.1
ஞாயிறு விடியற் காலை மணி மூன்று அடிக்கப்போகிறது. பிரச்ச்சினை தீரவில்லை. முட்டுக்கட்டை ஏற்பட்டது. மத சுதந்திர சங்க பிரதிநிதிகள் தங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஓய்வு நாள் செவன்த் டே அட்வென்றிஸ்ட் என்ற சொற்றொடர்களை சென்றினல் பத்திரிகையிலிருந்து எடுத்து விட பஸிபிக் அச்சகத்தார் உடன்படாவிடின், அதைத் தங்கள் சங்கப் பத்திரிகையாகத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர். இது பத்திரிகையைக் கொலை செய்கிறதற்கு ஒப்பாகும். அவர்கள் கதவு திறந்து தம் தம் அறைக்குப் போய் நித்திரை செய்தனர். CCh 54.2
அவர்கள் தூங்கினாலும் கடவுள் தூங்குகிறவர் அல்லவே! மூன்று மணிக்கு அவர் தம் தூதனை உவைட் அம்மையரிடம் அனுப்பினார். தூதன் வந்து அம்மையாரை எழுப்பி காலை ஐந்தரை மணிக்கு நடக்கும் ஊழியர் கூட்டத்துக்குப் போய், சாலமான்காவில் கண்ட தரிசனத்தைக் கூறச் சொன்னார். அம்மையார் எழுந்து, அந்த தரிசனக் குறிப்பை எடுத்தார். தாம் கண்ட காட்சி முழுவதும் அவர் நினைவிற்கு வந்தது. அத்துடன் இன்னும் எழுத வேண்டியவைகளையும் சேர்த்துக் கொண்டார். CCh 54.3
காலை ஆராதனை ஆரம்பமாயிற்று ஆரம்ப ஜெபம் முடிந்தவுடன் அம்மையார் கூடாரத்தினுள் நுழைந்தார். அக்கூட்டத்தில் பேசவேண்டியவர் ஜெனரல் கான்பரன்ச் தலைவர். அவர் அம்மையாரைக் கண்டவுடனே, பெரு மகிழ்ச்சிகொண்டு உங்களைக் காண்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தருகின்றது. எங்களுக்குச் செய்தி எதுவும் உளதோ? என்று கேட்டார். அம்மையார் கையில் அவ்வேளை சில கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. CCh 55.1
அம்மைாயர் அவரை நோக்கி ஆம், உங்களுக்கு ஒரு செய்தி உண்டு என்று கூறிக்கொண்டே பிரசங்க பீடத்தண்டை வந்தார். முந்தின நாள் அவர் பேசி முடித்த பகுதியிலிருந்து தொடங்கிப் பேசலானார். தேவதூதன் தம்மை மூன்று மனிக்குத் தூக்கத்தை விட்டு எழுப்பியதும், ஐந்தரை மணிக்குக் கூட்டத்திற்குப் போய் சாலமான்காவில் கண்ட தரிசனத்தைச் சொல்லும்படி தமக்குக் கட்டளையிட்டதையும் கூறினார். அது வருமாறு:- CCh 55.2
“தரிசனத்தில் நான் ‘பாட்டில் க்ரீக்கில் ‘இருப்பதாகக் கண்டேன். தேவதூதன் என்னிடம் வந்து, என் பின்னே வா, என்றான். நான் அவன் பின்னே ரிவ்யூ அன்ட் ஹெரால்ட் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்குச் சிலர் கூடி விவாதம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுள் மிக்க வைராக்கியம் காணப்பட்டது. ஆனால் அது அறிவுக்கு ஏற்ற வைராக்கியம் அல்ல, என்று கூறிவிட்டு பின்பு அவர் சென்றில் பத்திரிகை ஆசிரியரை எவ்வாறு குறை கூறினர் என்பதை வெளியிட்டார். CCh 55.3
“அக்கூட்டத்தில் இருந்தவர் ஒருவர் ‘சென்றினல்’ பத்திரிகையின் பிரதிகளில் ஒன்றை எடுத்து, தம் தலைக்குமேல் உயர்த்தீக் காட்டி, “ஓய்வுநாளைப்பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றியும் வரைந்துள்ள கட்டுரைகளை இதை விட்டு அகற்றிவிடாவிட்டால், இதை நாங்கள் மத சுதந்திர சங்கப் பத்திரிகை என்று ஒப்புக் கொள்ளமாட்டோம் என்று சொன்னார், என்று எடுத்துரைத்து, அப்பால் தாம் அத்திர்சனம் பெற்றுப் பல மாதங்கள் ஆயின என்றும், பத்திரிகை நடத்தும் செயலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறி, ஒரு மணி நேரம் பேசினார். CCh 55.4
ஜெனரல் கான்பரன்ஸ் தலைவர் இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்த செய்தி அறியார். எனவே, அவர் என்ன சொல்வது என்று அறியாமல் திகைத்தார். அங்குக் கூடாரத்தின் பின் வரிசையில் ஒருவர் எழுந்து நேற்று இரவு நடந்த அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் நானும் ஒருவன் என்றார். CCh 56.1
அம்மையார் வியப்புடன் என்ன! நேற்று இரவா? இது பல மாதங்களுக்கு முன் எனக்கு தரிசனம் கிடைத்த சமயம் நடந்தது என்றல்லவா நினைத்தேன் என்றார். CCh 56.2
இன்னொருவர் எழுந்து நேற்று இரவு நடந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். பத்திரிகையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்து, அதில் கண்ட விஷயங்களைக் குறை கூறியவன் நானே. அங்ஙனம் செய்ததற்காகத் துக்கப்படுகிறேன். இனிமேல் இப்படிக் குறை கூறமாட்டேன் என்று கூறிவிட்டு உட்கார்ந்தார். CCh 56.3
இன்னொருவர் எழுந்திருந்தார். அவர் மத சுதந்திரச் சங்கத்தின் தலைவர். அவர் சொன்னார் “ஜெனரல் கான்பரன்ஸ் கூட்டம் முடிந்த பின்பு, நேற்று இரவு, நானும் வேறு சிலரும் இப்பொழுது இங்கு கூறப்பட்ட விஷயங்களை விவாதிக்கும்படி எனது காரியாலய அறைக்குச் சென்றோம். கதவைப் பூட்டிக்கொண்டு விடியற்காலை மூன்று மணி வரை விவாதித்தோம். அங்கு நடந்தைவைகளை அம்மையார் கூரியதைவிடத் தெளிவாகக் கூற என்னால் இயலாது. நான் கொண்ட மனப் பான்மை சரியல்ல என்று உணருகிறேன். இந்த விஷயத்தில் நான் செய்தது தவறே.” CCh 56.4
இரவுக் கூட்டத்தில் இருந்தவர் ஒவ்வொருவரும் தங்கள் சாட்சிகளைக் கூறினர். ஞாயிறு காலை நடந்த ஆராதனை முடியுமுன், மத சுதந்தர சங்கத்தார் மீண்டும் கூடி, ஐந்து மணி நேரத்திற்குமுன் செய்த தீர்மானத்தை மாற்றிவிட்டார்கள். CCh 57.1
அந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்னே அம்மையார் அந்தச் செய்தியைச் சொல்லியிருந்தால், தெய்வ நோக்கத்திற்கு இடையூறாக இருந்திருக்கலாம். ஆலோசனைக் கூட்டம் அதுவரை நடக்கவில்லை. ஆதலால் அந்தத் தரிசனத்தை அதற்கு முன் சொல்லாதபடி கடவுள் அவரைத் தடுத்துவிட்டார். CCh 57.2
ஓய்வுநாள் பிற்பகல் நடந்த கூட்டத்தில் அம்மையார் கூறியவைகளைச் சிலர் ஒப்புக் கொள்ளவில்லை. அம்மையாரை விடத் தங்களுக்கு அதிகம் தெரியும் என்பது அவர்கள் கருத்து. இன்று அநேகர் அம்மையாருக்கு காரியம் விளங்கியிராது. இன்றைய சூழ்நிலை வேறுபாடுடையது. இன்றைய நிலைமைக்கு இந்த ஆலோசனை சரியல்ல என்று நினைப்பது போலவே, அன்று அவர்களும் நினைத்திருக்கலாம். இன்று சாத்தான் நமது இருதயங்களில் தூண்டிவிடும் அந்த எண்ணங்களை 1891-ல் இருந்த மக்கள் இருதயங்களிலும் தூண்டி விட்டான், கடவுள் தமது திருவுள்ளத்தின்படியே தகுந்த காலத்தில் தமது அலுவலைச் செய்கிறார். அவர் மக்கள் வழி நடத்துகிறார். அவர்களை காக்கிறார். அவர் கை காலச் சக்கரத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கின்றது. தமது குறுக்கீடுகளாஇ நாம் கவனிக்கும்படி பல சிக்கலான பிரச்சினைகளை அடிக்கடி வரவிடுகிறார். இஸ்ரவேலின் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை மக்கள் உணருவதர்காகவே இங்ஙனம் நடைபெறுகின்றது. CCh 57.3