சபைகளுக்கு ஆலோசனை
மக்கள் வாழ்க்கையை மாற்றிய தூதுகள்
மிச்சிகன் நாட்டிலுள்ள புஷ்னல் ஊரில், ஊழியர் ஒருவர் ஓரிடத்தில் தொடர்ச்சியாகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். அவற்றின் பயனாகப் பலர் ஞானஸ்நானம் பெற்றனர். அப்புறம் அவர்களைக் கவனிப்பார் எவரும் இல்லை. நாளடைவில் ஒவ்வொருவராகப் பின்வாங்கி தங்கள் பழைய தீய செயல்களில் ஈடுபட்டனர். பத்துப் பன்னிரண்டு பெயரே நிலைத்திருந்தனர். அவர்களும், ஒரு ஓய்வுநாளில் ஆராதனையை முடித்துவிட்டு, இனிமேல் இங்கு ஆராதானை அவசியமில்லை என்றும், இதுவே கடைசி ஓய்வுநாள் ஆராதனை என்றும் முடிவு கட்டுவிட்டு வெளியேறினார். அவ்வேளையில் தபால் மூலம் பல கடிதங்களும், ரிவ்யூ அண்ட் ஹெரால்டு (Review and Herald) என்ற பத்திரிகைப் பிரதிகளும், அவர்களுக்குக் கிடைத்தன. பத்திரிகையைப் பிரித்து படிக்கத்தொடங்கினர். அதில் 1867-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி உவைட் அம்மையார் அந்த ஊருக்கு வருவதாக, அவர்கள் பிரயாணக் குறிப்புப்பகுதியில் கண்டனர். அவர்கள் இச் செய்தியால் மகிழ்ந்தனர். வீடுகளுக்கு போய்க்கொண்டு இருந்தவர்களைத் திரும்பி வருமாறு அழைக்கும்படி சிறுவர்களை அனுப்பினர். அவர்கள் வந்தனர். அம்மையார் வரப்போகும் செய்தியைக் கேட்டு, அனைவரும் ஊக்கம் அடைந்தனர். தங்கள் அயலகத்தாரையும், பின் வாங்கிப்போன மற்றவர்களாஇயும் கூட்டத்துக்கு அழைத்துவரத் தீர்மானித்தார். கூட்டம் நடத்துவதற்கு வசதியாக ஒரு தோப்பில் இடம் பார்க்க ஒருவரை நியமித்தார்கள். CCh 45.1
1867, ஜூலை மாதம் 20-ம் தேதி வந்தது. ஓய்வுநாள் காலையில் உவைட் அம்மையாரும், அவர் கணவர் ஜேம்ஸ் உவைட் போதகரும் வந்து சேர்ந்தனர். தோப்பில் காலை ஆராதனை நடந்தது, ஏறக்குறைய அறுபது மக்கள் வந்திருந்தனர். ஆராதனை நடத்தியவர் போதகர் ஜேம்ஸ் உவைட். அன்று பிற்பகல் இன்னொரு கூட்டம் இருந்தது. அம்மையார் அக்கூட்டத்தில் பேச எழுந்தார். வாசிக்க வேண்டிய வேத வாக்கியங்கள் வாசித்து முடிந்ததும், அவர் சிறுதி கலவரம் அடைந்தவர்போல் தோன்றினார். வேதாகமத்தி மூடி வைத்துவிட்ட், வாசித்த வாக்கியங்களைப்பற்றி ஒன்றும் பேசாமல் தாம் நினைத்த போக்கிலே பின்வருமாறு பேசத் தொடங்கினார்:- CCh 45.2
“இன்று பிற்பகல் உங்கள் மத்தியில் பேச நிற்கும் அடியேன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், உங்களில் சிலருடைய முகங்களை என் தரிசனத்தில் கண்டேன். அவர்கள் முகங்களை நான் பார்க்கும்போது, அவர்கள் அனுபவங்களும் என் நினைவிற்கு வருகின்றன. எனவே, உங்களுக்குச்சொல்ல வேண்டிய தூதரை கடவுள் எனக்குத் தந்தருளியுள்ளார். CCh 46.1
அதோ! அந்தச் சிறு தேவதாரு மரத்தண்டையில் ஒரு சகோதரர் நிற்கிறார். அவருடைய பெயர் எனக்குத் தெரியாது. அவருடைய முகமும், அனுபவமும் என் கண் முன் தெளிவாக நிற்கின்றன. CCh 46.2
இதன் பின் அந்தச் சகோதரர் பின் வாங்கிய செயல்களைக் கூறிவிட்டு, அவர் மீண்டும் மற்றச் சகோதரர்களுடன் சேர்ந்து கடவுளை வழிபட வேண்டுமென்று ஆலோசனை சொல்லி அவருக்கு ஊக்கம் அளித்தார். பின்னால் பேசினார்:- CCh 46.3
“கிரீன்வில் சபையிலிருந்து இவ்விடம் வந்திருக்கும் மேனார்டு அம்மையார் பக்கத்தில் ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் பெயரும் எனக்குத் தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தரிசனத்தில் அவளைக் கண்டேன். அவள் அனுபவங்கள் எனக்குத் தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தரிசனத்தில் அவளைக் கண்டேன். அவள் அனுபவங்கள் எனக்குத் தெரியும்.” இங்ஙனம் கூறி, அந்தச் சகோதரிக்கும் நன் மதி புகட்டினார். அப்பால் பேசினார்:- CCh 46.4
“அங்கே அந்தக் கருவாலி மரத்தண்டையில் ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் பெயர் எனக்குத் தெரியாது; ஆனால் அவர் செய்திகள் எனக்குத் தெரியும்,” இவ்வாறு சொல்லியபின் அவர் அனுபவங்களாஇயும் உள்ளக் கருத்துக்களையும் உரைத்தார். CCh 46.5
இப்படி ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்திருந்த பலருடைய அனுபவங்களையும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாம் தரிசனத்தில் கண்டபடி, கூட்டத்தில் கூறினார். கடிந்துரைக்க வேண்டியவர்களைக் கடிந்துரைத்தும், ஊக்கம் அளிக்க வேண்டியவர்களுக்கு ஊக்கம் அளித்தும் பேசினார். அவர் பேசி முடிந்ததும் உட்கார்ந்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஒருவ எழுந்து அம்மையார் கூறியவை உண்மைதானோ என்று நான் அறிய விரும்புகிறேன். அவராவது, அவர் கணவராவது, இதற்கு முன் இங்கு வந்ததில்லை. நம்மோடு பழகினதும் கிடையாது. நம் பெயர் தானும் அவர் அறியார். நம் வாழ்க்கை முறைகளையும், உள்ளக் கருத்துக்களையும் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தரிசனத்தில் கண்டதாகச் சொல்லுகிறார். இவர் சொன்னவை யாவும் உண்மைதானோ? என்று கேட்டார். CCh 47.1
ஒருவர் பின் ஒருவராய் எழுந்து மறுமொழி கூறத்தொடங்கினார். தேவதாரு மரத்தண்டையில் நின்றவர், அம்மையார் என்னைப்பற்ரி கூறியவை உண்மை. நான் ஒருவர் சொல்லும் கேளாமல் தன் மூப்பாகத் திரிந்தேன். மீண்டும் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்து, அவரையே வழிபடுவேன் என்றார். மேனார்டு அம்மையார் பக்கத்திலிருந்து பெண் மகள் அம்மையார் சொன்னவை சரிதான் என்றாள். கருவாலி மரத்தண்டை இருந்தவரும் அவ்வாறே பகர்ந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும் தங்கள் குற்றங்களுக்காக மனஸ்தாபப்பட்டு வருந்தி, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, புது வாழ்வுக்காக கடவுளை நோக்கி வேண்டுதல் செய்து, தங்களை முற்றிலும் அவருக்குப் படைத்தார்கள். பரிசுத்த ஆவியின் செயல் வெளிப்பட்டது. அவர் அவர்கள் இருதயங்களில் பிரவேசித்தார். புஷ்நல் ஊரில் மறுமலர்ச்சி உண்டாயிற்று. CCh 47.2
அடித்த ஓய்வுநாள், அம்மையாரும் அவர் கணவரும் ஆராதனைக்கு வந்தனர். ஞானஸ்நான ஆராதனை நடந்தது. பலர் ஞானஸ்நானம் பெற்றனர். சபை புத்தியுர் பெற்று உறுதி அடைந்தது. CCh 48.1
கடவுள் தம் உதவியை எதிர்பார்ப்பவர்களை நேசிக்கிறார். புஷ்நல் ஊர் மக்களையும் நேசித்தார். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கின்றேன். ஆகையால், நீ விழிப்பாக இருந்து மனந்திரும்பு என்று அறிவிக்கின்றார். (வெளி 3:19) இந்த எண்ணம் அன்று அங்கு வந்தவர்களுடைய உள்ளத்தில் தோன்றி இருக்கவேண்டும். கடவுள் அவர்கள் உள்ளங்களை ஆராய்ந்தது போல் அவர்களும் தங்களை ஆராய்ந்தனர். வாழ்க்கையில் மாறுதல் அவசியம் என இவ்வாறு இருதயச் சீர்திருத்தம் மக்களில் உண்டாக வேண்டுமென்றே கடவுள் உவைட் அம்மையாருக்கு தரிசனங்கள் அளித்தார். ஜேம்ஸ் போதகர் மரணமடைந்த பின், அம்மையார் ஹில்ட்ஸ்பர்க் கல்லூரியை அடுத்த ஒரு வீட்டில் வசித்தனர். வீட்டில் கல்லூரியில் படித்த மாணவியர் பலர் தங்கினர். பெண்கள் தம் தலை மயிர் படிந்து அமைந்து இருப்பதற்காகச் சிறு வலை அணிவது வழக்கம் அல்லவா? ஒரு மாணவி அம்மையார் அறையைக் கடந்து செல்லும்பொழுது, அழகாகப் பின்னப்பெற்ற கூந்தல் வலை ஒன்று அங்கே இருப்பது கண்டு, அதை எடுத்துத் தன் பெட்டியில் வைத்துக்கொண்டான். அம்மையார் பிறகு அதைத் தேடிப் பார்த்தார்; கிடைக்கவில்லை. மாலையில் யாவரும் கூடி இருக்கும்பொழுது, தம் கூந்தல் வலை காணாமற்போயிற்று என்று சொன்னார். அதைக் கண்டதாகவோ, எடுத்ததாகவோ, ஒருவரும் சொல்லவில்லை. CCh 48.2
இரண்டொரு நாட்களுக்குப் பின் அம்மையார், மாணவர் அறை வழியே கடந்து போகையில் அந்தப் பெட்டியைத் திற என்று யாரோ சொல்லுவது போல் கேட்டது. பிறர் பெட்டியைத் திறக்க அம்மையாருக்கு மனம் வரவில்லை. இரண்டாந்தரம் அதே சத்தம் கேட்கவே, அது தரிசனங்களில் தன்னோடு பேசும் தூதனுடைய குரல் என்று அறிந்து, அவர் அப்பெட்டியைத் திறந்தார். தம் கூந்தல் வலை அதில் இருப்பதைக் கண்டார். பெட்டியை அப்படியே மூடிவிட்டுப் போனார். அன்று மாலையிலும் எல்லாரும் கூடி இருக்கும் வேளையில், தம் கூந்தல் வலையைப்பற்றி பேசினார். அது தானாய் மறைந்து விடாது. யாராவது ஒருவர் எடுத்துத் தான் இருக்கவேண்டும் என்றார். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. அந்தக் காரியத்தை அப்படியே விட்டுவிட்டார். CCh 48.3
நாட்கள் சில சென்றன. எழுதிக்கொண்டிருந்த அம்மையார் சிறிது இளைப்பாறும்படி படுத்தார். அப்பொழுது ஒரு சிறு தரிசனம் உண்டானது. அதில் ஒரு சிறு பெண்ணின் கை தோன்றியது. அதில் அவர் கூந்தல் வலை இருந்தது. அப்பெண் அதை மண் எண்ணெய் விளக்கில் இட்டாள் அது எரிந்து போயிற்று, தரிசனமும் முடிந்தது. CCh 49.1
மீண்டும் யாவரும் கூடி இருந்த வேளையில், அம்மையார் தம் கூந்தல் வலை காணமற்போனதைக் குறிப்பிட்டார். எவரும் பதில் கூறவில்லை. சிறிது நேரத்துக்குப்பின், அவர் தசிரனத்தில் கண்ட அந்த வாலிபப் பெண்ணைத் தனியாக அழைத்து, அவரிடம் தாம் கேட்ட ஒலியையும் கண்ட காட்சியையும் கூறினார். அப்பொழுது அப்பெண் கூந்தல் வலையைத் தான் எடுத்ததும், பிறர் அறியாமல் இருப்பதற்காக எரித்ததும் உண்மை என ஒப்புக்கொண்டாள். அவள் செய்தது பாவம் என்று அம்மையார் சுட்டிக்காட்ட அவள் அம்மையாரிடமும் ஆண்டவரிடமும் மன்னிப்புக் கேட்டாள். CCh 49.2
“இது ஒரு சிறு காரியம் தானே. அந்த வலை எவ்வளவு அற்பமானது என்று நாம் நினைக்கலாம். வலையைப் பார்த்தால் அது சிறு காரியம் தான். களவு என்பது பெரிய பாவம் அல்லவா? அவள் இளம் பெண். ஏழாம்நாள் அட்வெந்திஸ்தர் சபையைச் சேர்ந்தவள். தன்னில் ஒரு குறையும் CCh 49.3
இல்லை என்பது அவள் எண்ணம். தன் குறைவை அவள் உணரவில்லை. அவள் சுயநலக்காரி, அதனால், தான் திருடவும், ஏமாற்றவும் துணிந்தாள். இந்தச் சிறு செய்கையைக் கூட மிகுந்த அலுவலுள்ள தமது ஊழியக்காரிக்கு கடவுள் வெளிப்படுத்தினார் என்று உணர்ச்சி, அவர் பாவத்தை எவ்வளவு அருவருக்கிறார் என்று அவளுக்குத் தெளிவாக்கியது. இந்த நிகழ்ச்சியினால் அவள் வாழ்க்கை திருந்தியது. CCh 50.1
அதற்காகவே அம்மையாருக்கு அத்தரிசனம் அளிக்கப்பட்டது. அவர் சாட்சி மொழிகள் குறிப்பிட்ட சில மக்களுக்கு, குறிப்பிட்ட சில காரியங்களுக்காக எழுதப்பெற்றவை எனினும், அவற்றின் போத்னைகள் இன்று எல்லா நாடுகளிலுமுள்ள சபை மக்களுக்கும் பொருந்தக்கூடியவை. சாட்சி மொழிகளின் நோக்கத்தையும், இடத்தையும் குறித்து பின் வருமாறு அம்மையார் எழுதியுள்ளார்:- CCh 50.2
“மக்களுக்கு புது ஒளியைக் கொடுப்பதற்காக இந்தச் சாட்சியுரைகள் எழுதப்படவில்லை. முன்னே போதித்த சத்தியங்களை மக்கள் இருதயங்களில் அழுத்தமாகப் பதியச் செய்வதற்காகவே எழுதப்பட்டன. மனுமக்கள் கடவுளுக்கும், தம் அயலாருக்கும் செய்ய வேண்டிய கடமைகள், வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன. உங்களில் சிலரே கொடுக்கப்பட்ட வெளிச்சத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறீர்கள், சாட்சியுரைகள் கூடுதலான சத்தியங்களை கொண்டுவரவில்லை. அவை முன் கொடுக்கப்பட்ட சத்தியங்களை மிகவும் எளிதாக விளக்கிக் காட்டுகின்றன... சாட்சியுரைகள் வேத வசனங்களை அற்பமாக்காமல், அவற்றைப் பெருமைப்படுத்துகின்றன. வேத சத்தியங்களை மக்கள் அனைவர் உள்ளங்களிலும் பதியச் செய்யும்படி, அவைகள் எளிமையும் அழகும் கவர்ச்சியும் உள்ளனவாய் எழுதப்பெற்றுள்ளன.” CCh 50.3
உவைட் அம்மையார் தம் வாழ்நாள் முழுவதும் தேவ வசனங்களை யாவருக்கும் முன்பாக உயர்த்திக் காட்டினார். அவர் எழுதிய முதல் நூலின் இறுதியில் பின் வருமாறு வரைந்துள்ளார்:- CCh 50.4
“இதை வாசிக்கும் நண்பர்களே! கடவுள் வசனமே உங்கள் விசுவாசத்திற்கும், செயல்களுக்கும், பிரமாணமாக இருக்கட்டும். அவர் வார்த்தைகளே உம்மை நியாயந்தீர்க்கும், கடைசி நாட்களில் தரிசனம் அருளப்படும் என்பது கடவுள் வாக்கும். அத் தரிசனம் புது விசுவாசப்பிரமாணங்களை நிலைநாட்டுகிறதற்காக அல்ல, மக்களை தேற்றவும் வேதோபதேசங்களைவிட்டு விலகிப்போனவர்களைச் சீர்திருத்தவும் அருளப்பட்டிருக்கிறது. CCh 51.1