சபைகளுக்கு ஆலோசனை
சாட்சி ஆகமங்களூம் வாசகரும்
எலன் உவைட் அம்மையார், சுமார் எழுபது ஆண்டுகள் கடவுள் தமக்கு வெளிப்படுத்தியவைகளைப் பேச்சாலும் எழுத்தாலும் மக்களுக்கு அறிவித்தார். திருமறைச் சத்தியங்களை விட்டு விலகிப்போன மக்களைத் திருப்புவதற்காகவே, பெரும்பான்மையான தரிசனங்கள் அவருக்குக் கிடைத்தன. மக்கள் ஒழுங்வேண்டிய முறைகளைக் கடவுள் பலதடவை வெளிப்படுத்தினர். வீட்டிலும், சபையிலும் கடைப் பிடிக்கவேண்டிய வாழ்க்கையின் ஒழுக்க முறைகளைச் சாட்சியாகமம் பற் பல வேளைகளில் தெளிவாகக்கூறியுள்ளது. இந்தத் தூது மொழிகளைச் சபையார் எவ்வாறு ஏற்றுக்கொண்டனர்? CCh 58.1
அம்மையார் திருப்பணி ஆரம்பத்த காலத்திலிருந்தே அவருடைய தீர்க்கதரிசன வரத்தின் வெளிப்பாடு மெய்யானதானே என்று அறியும்படி பொறுப்புவாய்ந்த தலைவர் பலர் பலர் சோதித்து வந்தனர். பவுல் அப்போஸ்தலன் நம்மை எச்சரிக்கிறர்:---- தீர்க்கதரிசனங்களை அற்பமாக எண்ணதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளூங்கள் (1 தெச.5:20, 21.) திருமறையில் கூறப்பட்ட மெய்யான தீர்க்கதரிசியின் இலக்கணங்களைக்கொண்டு, அம்மையாரின் பணிகளைக் சோதித்தனர். அம்மையார் எழுதினர்:-------- CCh 58.2
“நான் செய்வது ஒன்று கடவுளூடைய வேலை, அல்லது சாத்தானுடைய வேலை. கடவுளுக்குச் சாத்தானோடு பங்கும் பாகமும் இல்லை. அவனோடு சேர்ந்து எந்த வேலையும் அவர் செய்வதில்லை. கடந்த் முப்பது ஆண்டுகளாகக் கடவுள் திருப்பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இப்பணியில் தெய்வ முத்திரை அல்லது பிசாசின் முத்திரை பதிந்திருக்கவேண்டும். இருவர் முத்திரைய்ம் ஒருங்கே அதில் பதிவாக முடியாது. அல்லது பாதி ஊழியம் தேவனுக்கும் பாதி சாத்தானுக்கும் உரியதாயிருக்க முடியாது.” ஒரு தீர்க்கதரிசியை சோதிக்க நான்கு முறைகள் உண்டு. அவை வேதாகமத்தில் கூறப்பெற்றவை அம்மையாரின் ஊழியம் அந்த நான்கு பரீட்சைகளுக்கும் நிலைநிற்கின்றது. CCh 58.3
1.மெய் தீர்க்கதரிசியின் துதூ நியாயப்பிரமாண விதிகளுக்கும், தீர்க்கதரிசனங்களுக்கும் இசைவாக இருக்கவேண்டும். ஏசா. 8:20. CCh 59.1
அம்மையாரின் துதூகள் நியாயப்பிரமாணத்தை உயர்த்திக்காட்டி, மக்களை திருமறைக்கு நேராக வழி நடத்துகிறது. நமது விசுவாசத்திற்கும், செயல் முறைகளூக்கும் அடிப்படை சத்தியவேதம் என அவர் வற்புறுத்தியுள்ளார். தாம் வரைந்தவை யாவும் சிறு வெளிச்சம் என்றும் அவைகளை வாசிக்கும் நண்பர்கள் பெரிய வெளிச்சத்துக்கு வழிநடத்தப்படுகிறர்கள் என்றும் கூறுகிறர். CCh 59.2
2. தீர்க்கதரிசி சொல்லும் தீர்க்கதரிசனம் நிறைவேற வேண்டும். எரே. 28:9. CCh 59.3
அம்மயார் மோசேயைப் போல் மக்களை வழி நடத்துகிறவராக இருந்தாலும், தீர்க்கதரிசன முறையில் பிற்காலத்தில் நிகழக் கூடிய பல காரியங்களை எழுதி வைத்திருக்கிறார். 1848-ல் பிரசுர வேலை ஆரம்பிக்கும்பொழுது, அது வெளிச்சத்தைப் போல உலக முழுவதும் பரவும் எனக் கூறினார். இன்று உலகம் எங்கும் ஏழாம் நாள் அட்வெந்து தூது இருநூறு மொழிகளில் வெளியாகியுள்ளது. வெளியீடுகளின் வருவாய் மதிப்பு ஆண்டு தோறும் பத்துக் கோடி ரூபாய்க்கு அதிகமாகும். CCh 59.4
1890-ல் இனிமேல் போர் உண்டாவதே இல்லை. ஆயிரம் ஆண்டு அரசாட்சி ஆரம்பமாகப்போகிறது என்று உலகம் பறைசாற்றியது. அப்பொழுது அம்மையார் சூறைக் காற்று வருகிறது. நாம் அதன் சீற்றத்துக்கு ஆயத்தமாயிருக்கவேண்டும். உலகின் நானா பக்கங்களிலும் விபத்துக்கள் உண்டாகும். ஆயிரக் கணக்கான மரக்கலங்கள் ஆழியின் அடியில் முழுகிப்போகும். கடற்படைகள் அழியும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியாகும் என்று கூறினார். முதலாம் இரண்டாம் உலகப் போரும் அவர் கூறியவைகளூக்கு உண்மைச் சான்றாக விளங்குகின்றன. CCh 59.5
3. மெய்யான தீர்க்கதரிசி மாம்சத்தில் வந்த இயேசுக் கிறிஸ்துவை கடவுளூடைய அவதாரம் என அறிக்கை பண்ணுவார். (1 யோவா. 4:2). CCh 60.1
உவைட் அம்மையார் இயேசு கடவுள் புதல்வன் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். யுகங்களின் வாஞ்சை (Desire of Ages) என்னும் நூலில் அம்மையார் எழுதியுள்ள சில வரிகளைப் பாருங்கள்--------- CCh 60.2
“இயேசு பரம பிதாவின் அருகில் பரலோக மகிமையும், தூதர்களின் வணக்கமும் ஏற்றுக்கொண்டு, ஆனந்தமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் இருளில் இருப்பவர்களூக்கு ஒளியும், அழிந்துபோகும் ஆத்துமாக்களூக்கு உயிரும் அளிக்கத்திருவுளம் கொண்டார். தம் செங்கோலைத் தந்தையிடம் ஓப்புவித்தார். பரலோக சிம்மாசனத்தைத் துறந்தார். பாரில் மானிடனாய் வந்து பிறந்தார். CCh 60.3
“ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளூக்கு முன் பரலோக ஆசனத்திலிருந்து, “இதோ நான் வருகிறேன் “என்ற ஓர் சத்தம் உண்டாயிற்று. அது பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர். தேவனே! உமது சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன். புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று விளம்பியது (எபி. 10:5,7). நீண்டகாலம் மறைவாக இருந்த தெய்வ நோக்கத்தின் நிறைவேறுதல் இந்த வார்த்தைகளால் வெளியாகியது. கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து உலகைச்சந்திக்கும் காலம் நெருங்கியது... மக்கள் விரும்பக் கூடிய அழகு அவருக்கு இருந்ததில்லை. எனினும் அவர் மனித அவதாரம் எடுத்த கடவுள். அவர் வானத்தையும் பூமியையும் பிரகாசிப்பிக்கும் ஒளி. அவரு டைய மகிமை மறைந்திருந்தது. சோதிக்கப்பட்டு மருள விழுந்த--------பாவமும் பாடும் நிறைந்த----------மக்களிடம் நெருங்கி வாழ்வதற்காக, தம் மேன்மையையும் மகத்துவத்தையும் மறைத்துக்கொண்டார். CCh 60.4
4. மெய்யான தீர்க்கதரிசியை திட்டமாக பரிசோதிப்பது, அவரது வாழ்க்கை, தொண்டு, உபதேசம், செல்வாக்கு இவைகளைக் கொண்டதாகும். இயேசுவும் அவர்களூடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள் என்று கூறினார். மத். 7:15,16. CCh 61.1
உவைட் அம்மையார் வாழ்க்கை எவரும் புகழக்கூடிய கிறிஸ்தவ வாழ்க்கையாகவே இருந்தது. அவர் சாதனை அவரது போதனைக்கு இசைந்து விளங்கியது. அவரது தீர்க்கதரிசன ஆவியின் ஆலோசனைகளுக்கு இணங்கி நடந்தவர்களின் வாழ்க்கைக் கனியும் நன்றாகவே இருந்தது. அவர் சாட்சியங்கள் நல்ல பலன் அளித்தன. சபை ஊழியத்தின் பற்பல துறைகளிலும் அம்மையார் ஆலோசனையால் நடத்தப்பட்டடிருக்கிறேம் என்பதைக் காணும்போது அம்மையாரின் ஊழியம் இப்பரிசோதனைக்கு நிற்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அவர்கள் எழுபது ஆண்டுகளாக எழுதினவைகளில் காணப்படும் உபதேச கருத்து ஒற்றுமை அவருக்குக் கடவுள் அளித்த மெய்யான தீர்க்கதரிசன வரத்தை வெளிப்படுத்துகின்றன. CCh 61.2