சபைகளுக்கு ஆலோசனை

174/326

அத்தியாயம் 35

குடும்பத்தில் ஆவிக்க்குரிய செல்வாக்கு

இரட்சிப்பை குடும்பத்தில் நாம் பெறலாம். ஆனால் நாம் அதை நம்பி, அதற்காக ஜீவித்து, தொடர்ந்து நிலயான விசுவாசம், நம்பிக்கை, கடவுள் வைக்க வேண்டும். நம் நலத்துக்காகவே தேவ வசனம் கட்டுப்பாடு செய்கிறது. நம் குடும்ப மகிழ்ச்சியையும், நம்மைச் சூழ்ந்தவர்களின் மகிழ்ச்சியையும் அது பெருகச் செய்கிறது. நம் சுவைகாஇ சீர்படுத்தி, நம் தீர்ப்புகளைப் பரிசுத்தப்படுத்தி, மன நிம்மதியருளி, கடைசியாக நித்திய ஜீவனை அருளுகிறது. ஊழியஞ் செய்யும் தூதர்கள் நம் வாசஸ்தலங்களில் தரித்திருந்து, நம் தெய்வீக ஜீவிய தேர்ச்சி பற்றி பரலோகத்துக்கு நற் செய்தி சந்தோஷமாய்க் கொண்ட் செல்வர். பதிவு செய்யும் தூதன் மகிழ்ச்சிகரமான அறிகை எழுதுகிறான். CCh 425.1

குடும்ப வாழ்க்கையில் கிறிஸ்தவ ஆவியின் செல்வாக்கு தாபரிக்கும். அன்பு, சத்தியம் ஆகியவைகளின் பரம செல்வாக்கு ஆண் பெண் இரு பாலரும் தங்கள் இருதயங்களைத் திறந்தால் இந்த இலட்சியங்கள் வனாந்தரத்தில் நீருற்று புறப்பட்டு பாழும் வெறுமையுமான வைகளைச் செழிப்பிப்பது போல பூரிக்கச் செய்யும். --- C.G. 484. CCh 425.2

குடும்ப மார்க்க பக்தியை அலட்சியஞ்செய்து, பிள்ளைகளைப் பயிற்றுவிக்கத் தவறுவதைக் கடவுள் விரும்புவதில்லை. உங்கள் பிள்ளைகளில் ஒன்று ஆற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தால் என்ன பரபரப்பு உண்டாகும். அந்த உயிரைக் காக்கும்படி என்னென்ன முயற்சிகள், எத்தனை ஜெபங்கள், எவ்வளவு ஊக்கம் பயன்படுத்தப்படும்! இங்கே உங்கள் பிள்ளைகள் கிறிஸ்துவின்றி ஆத்தும ரட்சிப்பின்ரி தத்தளிக்கிறார்கள் அல்லவா? ஒரு வேளை அவர்கள் அட்வெந்திஸ்த நாமத்துக்கே நிந்தை உண்டாகும்படி முரட்டுத்தனமாகவும் மரியாதையற்ற முறையிலும் நடக்கலாம். கடவுளும் நம்பிக்கையுமற்றவர்களாய் உலகில் அவர்கள் நாசமாகிறார்கள், நீங்களோ அவர்களைக் குறித்து அக்கரையின்று கவலையீனராக இருக்கிறீர்கள். CCh 425.3

கடவுளை விட்டு பிரிக்க சாத்தான் தன்னாலான சகல பிரயத்தனங்களையும் கையாடுகிறான். தொழில் கவலைகளில் ஆழ்ந்திருப்பதினால் ஆவிக்குரிய ஜீவியம் குன்றி, வேதம் வாசிக்கவோ, தனியாக ஜெபிக்கவோ காலை மாலை பீடத்தண்டை நெருங்கு துதியின் காணிக்கைகளைப் படைக்கவோ காலம் எடுக்காமலிருக்கச் செய்வதன் மூலம் சாத்தான் வெற்றியடைகின்றான். பெரிய எத்தனுடைய அக்கினி யாஸ்தரங்களை வெகு சொற்பப் பேரே உணர்க்கிறார்கள்1 அவனுடைய சூழ்ச்சிகளை எத்தனை பேர் அறியாதிருக்கிறார்கள்! 5T. 424. CCh 426.1