சபைகளுக்கு ஆலோசனை

173/326

சாதாரணமும் சிலவு அதிகமில்லாத தட்டு முட்டுகள்

உங்கள் வீடுகளில் சாதாரணமும் டம்பமில்லாமல் சுத்தமாக வைக்கக் கூடியது, தூக்க எடுக்க செளகரியமானதும், எளிதாக, அதிகச் செலவின்றி மாற்றக்கூடியதுமான பணி முட்டுகளை உபயோகியுங்கள். அன்பும் மன திருப்தியும் இருக்குமாயின், ரசிக்கும் தன்மையோடு வீட்டை வெகு சாமானிய முறையில் வசீகரமாக்கலாம். CCh 422.3

வெறும் பகட்டில் மகிழ்ச்சி காணப்படுவதில்லை. எவ்வளவு எளிய முறையில் குடும்பம் ஒழுங்கு படுத்தப் படுகிறதோ அவ்வளவாய் அக் குடும்பம் மன மகிழ்ச்சியாகவிருக்கும். பிள்ளைகளை மகிழ்சிக்கவும் திருப்தி படுத்தவும் விலை உயர்ந்த சுற்றுப்பாடுகளும் தட்டு முட்டுகளும் அவசியமில்லை; ஆனால் அவர்களை அன்போடும் மிகப் பரிவோடும் கவனிப்பதே மிக அவசியம். ---- AH. 131-155. CCh 423.1

உன் வீட்டில் எப்போதும் ஏற்றா முன் மாதிரியாக இருக்க கடவுள் உன்னை எதிர் நோக்குகிறார். பரலோகத்தில் ஒழுங்கீனம் கிடையாதென்றும், உன் வீடு இங்கே ஒரு பரலோகமாக இருக்க வேண்டுமெனபதையும் நினைவிற் கொள். வீட்டில் செய்யப்பட வேண்டியதை தினம் தினம் நீ உண்மையும் உத்தமுமாய்ச் செய்யும் போது, கிறிஸ்தவக் குணத்தைப் பூரணமாக்குவதில் தேவனோடு உழைக்கிறாய் என்றும் தெரிந்து கொள். CCh 423.2

பெற்றோரே, நீங்களை உங்கள் பிள்ளைகளின் ரட்சிப்புக்காக உழைக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பழக்கங்கள் நியாயமாகவும், சுத்தம், ஒழுங்கு, நற்குணம், நீதி, ஆவி, ஆத்தும சரீர பரிசுத்தம் ஆகியவைகளை நீங்கள் வெளிப்படுத்தினால் நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள் என்று இரட்சகர் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றுகிறீர்கள். CCh 423.3

ஆடைகளைக் குறித்து கவனஞ்செலுத்த இளமையிலேயே அவர்களுக்கும் கற்பியுங்கள். தங்கள் பொருட்களைப் போடும் ஓரிடம் இருக்கட்டும், அவர்கள் தங்கள் ஆடைகளை மடித்து அதனதன் இடத்தில் நேர்த்தியாக வைக்கப் பழக்கட்டும், பீரோ வாங்க முடியாவிடில் ஓர் அலமாரிப் போல பெட்டியைச் செய்து அதை ஓர் அழகிய துணியால் மூடுங்கள். இப்படிச் சுத்தத்தை கற்பிக்கும் வேலைக்குத் தினமும் சிறிது நேரம் பிடிக்கலாம், ஆயினும் அது உங்கள் பிள்ளைகளின் பிற்கால வாழ்வில் மிகுந்த பயன் தரும், முடிவில் உங்கள் காலமும் கவலையும் அதிக மிச்சப்படும். CCh 423.4

தாங்கள் தொட உரிமையில்லாத சில வஸ்துக்களை விளையாட்டுப் பொருட்களாக உபயோகிக்கச் செய்து, அவற்றை நாசப்படுத்துவதற்கு சில பெற்றோர் பிள்ளைகளை விட்டுவடுகிறார்கள். பிறர் பொருட்களை உபயோகிக்கக்கூடாதென அவர்கள் கற்பிக்கப்பட வேண்டும். குடும்ப வசதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் பொருட்டு, அவர்கள் பிறர் உரிமை பற்றிய பிரமாணத்தை அனுஷ்டிக்க படிக்க வேண்டும். அவர்கள் இஷ்டம் போல் கண்டவைகளை யெல்லாம் உபயோகிக்கும்படி விடப்படலாகாது. பாதுகாக்கும்படிக் கற்பிக்கப்படாவிடில், அவர்கள் விரும்பப்படாத, நாசமாக்கும் சுபாவத்தில் வளருவார்கள். CCh 424.1

எளிதாக உடையும் விளையாட்டுப் பொருட்கால்லக் குழந்தைகள் கைகளில் கொடாதிருங்கள். இப்படிச் செய்வது நாசஞ் செய்யக் கற்பிப்பதாகும். அவர்களுக்குச் சில விளையாட்டுச் சாமான்களிருந்தால் போதும், அவை மிகப் பலமும் நீடித்து உழைப்பனவாகவும் இருப்பதாக. இப்படிப்பட்ட ஆலோசனைகள் மிக அற்பமாகத் தென்படினும் குழந்தைகளுக்கு நற் பண்புகளைக் கற்பிக்க மிகப் பயன் படுகின்றன. C.G. 110, 111; 101, 102. CCh 424.2