சபைகளுக்கு ஆலோசனை
காலை மாலை தொழுதல்
தாய் தந்தையர்களே, காலை மாலை உங்கள் பிள்ளைகளை உங்களோடு இருத்தி, தேவ ஒத்தாசைக்காக உங்கள் இருதயங்களை உயர்த்தி வெகு தாழ்மையோடு விண்ணப்பஞ் செய்யுங்கள். உங்களுக்கு அருமையானவர்கள் சோதனைக்குட்படும் சூழ் நிலையில் இருக்கிறார்கள். தினசரி தொந்தரவுகள் குறுக்கிட்டு பெரியோர் சிறியோர் யாவரையும் வழி விலகச் செய்கின்றன. பொறுமையும், அன்பும், மகிழ்ச்சியுமாய் வாழ விரும்புகிறவர்கள் கண்டிப்பாய் ஜெபிக்க வேண்டும். கடவுளிடமிருந்து இடையறா உதவி பெறுவதினால் மட்டுமே நாம் நம்மேல் வெற்றியடையலாம். CCh 426.2
ஒவ்வொரு வீடும் ஜெப வீடாக இருக்க வேண்டிய ஒரு காலம் உண்டானால் அக்காலம் இதுவே. இல்லை வாதமும் ஜய வாதமும் தாண்டவமாடுகிறது. அக்கிரமம் பெருகிப் போயிற்று. ஆத்துமாவின் ஜீவிய ஓட்டம் கறை பட்டுவிட்டது; கடவுளுக்கு விரோதமான புரட்சி ஜீவியத்தில் கரை புரண்டு ஒடுகிறது. பாவத்தால் அடிமையாக்கப்பட்டு, சன்மார்க்க சக்திகள் சாத்தானுடைய கொடுங்கோலால் நசுக்கப்படுகின்றன. ஆத்துமா சாத்தானுடைய சோதனைக்கு இலக்காக் விட்டது; ஒரு பலத்த மரம் மீட்கும்படி நீட்டப் பட்டாலன்றி, மாபெரும் கலகக்காரன் எங்கு நடத்துவானோ அங்கே செல்கிறான் மனிதன். CCh 427.1
ஆயினும் இப்படிப்பட்ட பயங்கர ஆபத்து வேளையிலும் கிறிஸ்தவர்களாக தங்களைச் சீராட்டிக்கொள்ளும் சிலர் குடும்ப ஜெபம் செய்வதே இல்லை. அவர்கள் கடவுளை வீட்டில் கனம் பண்ணுவதில்லை; அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுளிடம் அன்பு கூர்ந்து அவருக்குப் பயந்து நடக்கும்படி கற்பிப்பதில்லை. அனேகர் அவரை விட்டு அவ்வளவு தூரம் விலகி விட்டபடியால், அவரிடம் வரக்கூடாத குற்றவாளிகளாக தங்களை எண்ணிக்கொள்ளுகிறார்கள். கிருபாசனத்தண்டை தைரியமாக சேரக் கூடமாலும், கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி அவரிடம் வரக்கூடாமலும் இருக்கிறார்கள். (எபி. 4:16; 1 தீமோத் 2:8) அவர்கள் கடவுளோடு உயிருள்ள தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. வல்லமையில்லா ஒரு வித கடவுள் பக்தியும் இருக்கிறது. CCh 427.2
ஜெபம் அவ்வளவு அவசியமில்லை யென்பது ஆத்துமாவை நாசஞ் செய்து சாத்தான் உபயோகிக்கும் மிக சித்திகரமான ஏதுவாகும், ஜெபம் ஞான ஊற்றுக்கும், பலம், சமாதானம், சந்தோஷம் ஆகியவற்றின் உற்பத்திக்கும் மூல காரணராகிய கடவுளோடு சம்பாஷிப்பதாகும். இயேசு பிதாவிடம் பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பஞ் செய்தார் இடை விடாமல் ஜெபியுங்கள் என்று பவுல் விசுவாசிகளுக்கு புத்தி சொல்லுகிறார். எல்லாவற்றிலும் ஜெபத்தோடும், விண்ணப்பத்தோடும், துதியோடும் தேவனுக்கு உங்கள் வேண்டுதல்களை ஏறெடுங்கள் என்கிறார். ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள் என்கிறார் யாக்கோபு, நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (1 தெச 5:17; யாக் 5:16). CCh 427.3
மிகவும் ஊக்கமும் கருத்துமுள்ள ஜெபத்தினால் பெற்றோர் தம் பிள்ளைகளைச் சுற்று அரண் போட வேண்டும். அவர்களோடு கடவுள் தங்குவாரென்ற முழு விசுவாசத் தோடும், தங்கள் பிள்ளைகளைத் தேவ தூதர்கள் சாத்தானுடைய கொடூரமான சக்திகளிலிருந்தும் காப்பார்களென்றும் விசுவாசித்து ஜெபிக்க வேண்டும். CCh 428.1
ஒவ்வொரு குடும்பத்திலும் காலை மாலை ஜெபத்திற்கென குறிப்பிடப்பட்ட சமயமிருக்க வேண்டும். காலை போஜனம் அருந்து முன் பெற்றோர் தம் பிள்ளைகளை தம்மண்டை அழைத்து இரவில் பரம பிதா அருளிய பாதுகாப்புக்காக அவருக்குத் துதி செலுத்தி, பகலில் அவர் தங்களைக் காத்து வழி நடத்தும்படி மன்றாடுவது எவ்வளவு சிறந்தது! அப்படியே இரவிலும் கடந்த பகலில் அவர் அருளிய ஆசீர்வாதங்களுக்காக துதி செலுத்துவது எவ்வளவு பொருத்தமுமாயிருக்கிறது! CCh 428.2
காலை தோறும் அன்றைய நடத்துதலுக்காக உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கடவுளிடம் படையுங்கள். மாதங்கள் வருஷங்களுக்காக கணக்குப் பார்க்காதீர்கள்; அவைகள் உங்களுடையவைகள் அல்ல. ஒரு குறுகிய நாள் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பூமியில் அதுவே கடைசியென எண்ணி, எஜமானுக்காக அந்த நாழிகையில் உழையுங்கள். செய்யப்படவோ அல்லது அவரால் நிராகரிக்கப்படவோ ஏதானாலும் சிலர் சித்தப்படி செய்ய உங்கள் திட்டங்கள் யாவையும் அவரண்டை ஒப்புவியுங்கள். நீங்கள் பெரி தும் விரும்பி பேணிய திட்டங்களை விட்டு விடுவதாயினும் அவர் த்ிட்டங்களையே ஒப்புக்கொள்ளுங்கள். இவ்விதமாக நம் ஜீவியம் தெய்வீக மாதிரியின்படியே உருவாக்கப்படும்; அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். பிலி. 4ள்7. CCh 428.3
தகப்பனால் அல்லது அவரில்லா சமயத்தில் தாயார் இனிதும் எளிதுமாய் விளங்கக் கூடிய வேதாகமப் பாகங்களைத் தெரிந்து கொண்டு குடும்ப ஜெபத்தை நடத்த வேண்டும். அந்தத் தொழுகை நேரம் சுருக்கமாயிருக்க வேண்டும். அந்தத் தொழுகை நேரம் சுருக்க மாயிருக்க வேண்டும். பெரிய அதிகாரத்தை வாசித்து நீண்ட ஜெபம் செய்வதினால் களைப்புத் தட்டும்; முடிவில் ஒரு பாரம் நீங்கியது போலிருக்கும். பிள்ளைகள் வெறுக்கும்படி இனிமையின்றி களைப்புத் தட்டும் வகையில் குடும்ப ஜெபம் நடத்தப்படுவதினால் கடவுள் கனவீனப்படுத்தப்படுகிறார். CCh 429.1
தந்தை தாய் மார்களே, குடும்ப ஜெப வேளை மிகவும் விரும்பப்படத் தக்கதாயிருப்பதாக. ஒரு நாளில் மிகவும் மகிழ்ச்சிகரமான வேளையாக ஏன் ஜெப வேளை இருக்கக் கூடாது. சற்று முன் ஆலோசனை செய்து நடத்தினால் அவ்வேளை பெரிதும் பயன் தந்து விரும்பப்படத்தக்கதாயிருக்கும். அந்த குடும்ப ஆராதனையை சமயா சமயம் சற்று மாற்றியமைத்து நடத்தலாம். வாசிக்கப்பட்ட வேதாகம பாகத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்டு, ஊக்கமான சமயத்திற்கேற்ற சில கருத்துக்களை சொல்லலாம். ஒரு துதி கீதம் பாடி கருத்தும் ஊக்கமுமுள்ள சுருக்க ஜெபம் ஏறெடுக்கப்படலாம். ஜெபிக்கிறவர் கடவுள் நடத்துதலுக்காக துதி செலுத்தி, அவருடைய உதவிக்காக எளிய முறையில் ஊக்கமான விண்ணப்பம் செய்வாராக. சமய வாய்ப்புக் கேற்றபடி வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் பிள்ளைகள் பங்கெடுப்பார்களாக. CCh 429.2
இந்த ஜெப வேளை அருளிய நன்மைகளை நித்தியம் மட்டுமே வெளிப்படுத்தக்கூடும். --- 7T. 42-44. CCh 429.3