சபைகளுக்கு ஆலோசனை
உவைட் அம்மையாரைப் பற்றிப் பிறர் அறிந்து கூறும் செய்திகள்
கடவுளின் ஊழியக்காரியாயிருந்த உவைட் அம்மையாரின் அசாதாரணமான அனுபவங்களை அறிந்த சிலர் அம்மையார் எப்படிப்பட்டவர்? நமக்கு இருப்பது போன்று வாழ்க்கைப் பிரச்சினைகள் அவருக்கு உண்டா? அவர் செல்வரோ, வறியவரோ? அவர் எப்போதேனும் புன்னகை கொண்டதுண்டோ? என்ற பல கேள்விகள் கேட்கின்றனர். CCh 36.3
அம்மையார் சிறந்த ஆலோசனையுடைய அன்னையார்; கவனம் மிக்க இல்லான்; நம் விசுவாசிகளை தம் வீட்டுக்கு அழைத்து உபசரிக்கும் இயல்புடையார்; அயலகத்தாருக்கு உதவு செய்யும் பண்புடையவர். கொள்கையில் திட நம்பிக்கையும்; ஒழுக்கத்தில் இணக்கமான தன்மையும், பேச்சில் இனிமையும் உடையவர். அவரது வாழ்க்கையில் துக்க முகமும், புன்முறுவலற்ற, மகிழ்ச்சியற்ற, சமயனெறியும் காணப்படவில்லை. அவர் சமுகத்தில் நின்ற எவரும் சகஜமாக நடந்துகொண்டனர். அவரை நன்குணர்ந்து கொள்வதற்கு முதன்மையான வழி 1859ல் அவர் தம் வீட்டில் தங்கியிருந்த போது எழுதிவைத்த நாட்குறிப்புகளைப் படித்துப் பார்ப்பதே. CCh 37.1
அவர் பாட்டில் கிரீக் (Battle Creek) நகர்ப்புற எல்லையில் ஒரு சிறு வீட்டில் வசித்தார். அவர் வீட்டை அடுத்து ஒரு சிறு தோட்டம். அதில் சில கனிமரங்களும், ஒரு பசுவும், சில கோழிகளும் வைத்திருந்தார். தம் பிள்ளைகளுக்கு விளையாடவும், வேலை செய்யவும் இடம் ஒதுக்கிவைத்தார். அப்பொழுது அவருக்கு வயது 31. அவர் கணவருக்கு 36. அவர்களுக்குப் பிள்ளைகள் மூவர், அவர்கள் வயது முறையே 12, 9, 4. CCh 37.2
அம்மையாருக்குப் பேசவும் எழுதவும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போகவும், வேலை இருந்தால் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை தம்முடன் குடும்பத்தில் உதவிக்கு வைத்துக் கொண்டார். ஆயினும் சமைத்தல், வீடுபெருக்குதல், துணி துவைத்தல், தைத்தல், முதலிய வேலைகளைச் சமயம் வாய்த்த போதெல்லாம் தாமே செய்துவந்தார். சில நாட்களில் நூற்பதிப்பகம் சென்று அமைதியான ஓர் இடத்தில் இருந்து எழுதுவார். மற்ற நாட்களில் தோட்டத்தில் பூஞ்செடிகள் நடுவதும், காய்கறிச் செடி கொடிகள் வைப்பதும் பார்க்கலாம். சில வேளை தம் தோட்டத்திலுள்ள பூஞ்செடிகளை அயலாருக்குக் கொடுத்து அங்கே இல்லாதவைகளை அவர்களிடம் வாங்கி நடுவார். வீடு எப்பொழுதும் இன்பமாகவும் பிள்ளைகள் எப்பொழுதும் விரும்பக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் என்பது அம்மையார் கருத்து. CCh 37.3
பொருட்களை விலைக்கு வாங்குவதில் அம்மையார் மிகுந்த கவனம் செலுத்துவார். அவைகளின் மதிப்பு அவருக்குத் தெரியும். அதனால் அண்டை வீட்டு அட்வெந்து சபைப் பெண்கள் கடையில் சாமான் வாங்க அவரை அழைத்துப் போக விரும்புவார்கள். உவைட் அம்மையாரின் தாயார் நல்ல அனுபவசாலி. ஆகையால் அவர் தம் பெண் மக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்படும் பாடங்களை கற்றுக்கொடுத்திருந்தார். குறைந்த விலை கொடுத்து மோசமான சாமான்களை வாங்குவதைவிட, நல்ல பொருட்களை தகுந்த விலை கொடுத்து வாங்குவது இலாபம் என்பது அம்மையார் தம் அனுபவத்தினால் கண்ட உண்மை. CCh 38.1
பிள்ளைகளுக்கு ஓய்வு நாள் மற்ற நாட்களைவிட மிகவும் இன்பமாக இருக்கும்படி செய்ய முயற்சி பண்ணினார்கள். அன்று யாவரும் கடவுளாஇ ஆராதிப்பதற்காக ஆலயத்திற்குப் போவார்கள். அம்மையார் அல்லது அவர் கணவர் ஆராதனையில் பேச வேண்டிய ஏற்பாடு இல்லாத நாட்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுடனே சேர்ந்து ஆலயத்தில் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார்கள். ஓய்வுநாள் மத்தியானம் மற்ற நாட்களில் இல்லாத சில சிறப்புள்ள உணவுப் பொருள் இருக்கும். அன்று மழை, குளிர் இல்லாத இன்பமுள்ள நாளாயிருந்தால் உணவுக்குப் பின் அம்மையார் தம் குழந்தைகளைக் காடு அல்லது ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வர். இயற்கை அழகையும் கடவுள் படைப்பின் மகிமையையும் கண்டு களிப்பு அடைவர். அதனால் அறிவும் பெருகும். மழை அல்லது குளிர் இருந்தார் வீட்டில் நெருப்பண்டையில் உட்கார்ந்து குழந்தைகளுக்குக் கதைகள் வாசித்துக் காட்டுவார். கதைகளில் பெரும்பாலும் அங்கும் இங்கும் போக்குவரத்தில் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகள் அடங்கியிருக்கும். அக்கதைகளைப் பிற்காலத்தில் ஒருங்கு சேர்த்து மற்றப் பிள்ளைகளுக்கும் பயன்படுமாறு புத்தக வடிவில் வெளியிட்டார்கள். CCh 38.2
அக்காலத்தில் அம்மையார் நல்ல உடல் நலம் பெற்றிருக்கவில்லை. பகல் வேலையில் அடிக்கடி மூர்ச்சை அடைவார். ஆயினும் அதனால் வீட்டு வேலையும் கடவுள் திருப்பணியும் தடைப்பட்டதில்லை. 1863-ல் அவருக்கு உடல் நலம் பேணுதல் பற்றியும், நோயாளிகளாஇப் பாதுகாத்தல் பற்றியும் தரிசனம் கிடைத்தது. CCh 39.1
ஆடவரும், மகளீரும் அணிவதற்குத் தகுதியான ஆடைகள் எவை என்றும், திடகாத்திரமான சரீரத்தை அடைய உணவும், உடற்பயிற்சியும், ஓய்வும் மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு கடவுள் நம்பிக்கையும் அவர்களுக்கு முக்கியமோ அவ்வளவு கடவுள் நம்பிக்கையும் அவர்களுக்கு முக்கியம் என்றும் தரிசனத்தில் அவருக்கு வெளியாயிற்று. CCh 39.2
மாம்ச உணவின் தீமையைப் பற்றி அவருக்குக் கிடைத்த வெளிச்சம், புலால் உண்பது உடல் நலத்திற்கேதுவானது என அவர் கொண்டிருத்திய எண்ணத்திற்கு எதிரிடையாக இருந்தது. பணிப் பெண்ணிடம் தவிடு முதலான சத்துப் பொருள் முழுவதும் அடங்கிய நல்ல தானிய உணவுகளும், கொட்டைகளும், விதைகளும், பயறுவகைகளும், பாலும், பாலாடையும், முட்டையும், பழம் முதலியவைகளும், வாங்கிப் பக்குவமான உணவு செய்யும்படி கட்டளையிட்டார். பழங்களை பெருவாரியாக உபயோகித்தார்கள். CCh 39.3
உணவு வேளையில் இறைச்சி தவிர மற்ற சத்தான உணவுகள் இருந்தாலும், பழைய பழக்கத்தினால் அம்மையாருக்கு இறைச்சி இல்லாமல் மற்ற உணவு பிடிக்கவில்லை. ஆகையால் வயிறார உண்ணாமல் பந்தியை விட்டு எழும்புவார். அடுத்த வேளையில் சரியாகிவிடும் என்று தம்மைத் தேற்றிக் கொள்வார். ஆனல் அடுத்த வேளையும் அதே நிலைமைதான். தரிசனத்தில் கண்டபடி உடல் நலத்திற்கும், பலத்திற்கும், வளர்ச்சிக்கும் தகுதியான உணவுப் பொருட்களே பந்திக்கு வரும். அவர் இறைச்சி சாப்பிட்டுப் பழகிப்போனதால் அது இல்லாமல் உண்பது அவருக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. அவர் தம் வயிற்றில் கைவைத்துக்கொண்டு வயிறே! நீ ரொட்டி தின்னப்பழகும் வரை காத்திருக்கவேண்டும் என்பார். CCh 39.4
நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக அவர் மரக் கறி உணவில் பழகிவிட்டார். உணவில் மாறுதல் ஏற்பட்டதும், உடலிலும் மாறுதல் உண்டாயிற்று. உடல் நலமும் வளர்ந்தது. அதற்குப் பின் தம் வாழ்நாள் முழுவதும் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருந்தார். நமக்கு இருக்கும் பிரச்சினை அம்மையாருக்கும் இருந்தது என்று இந்த அனுபவம் காட்டுகிறது. நமக்கு இருப்பது போல் உணவு வேட்கை அவருக்கும் இருந்தது. அவர் அந்த வேட்கையை வென்றதுபோல் நாமும் அதை வெல்லவேண்டும். உணவுச் சீர்திருத்தம் ஆயிரக்கணக்கான அட்வெந்து குடும்பங்களுக்கு நன்மை அளித்துள்ளது. CCh 40.1
உடல் நலச் சீர்த்திருத்தக் காட்சிக்குப் பின் உவைட் அம்மையார் குடும்பத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய எளிய முறைகளாஇக் கையாளத் தொடங்கினார். அயலகத்தாரும் தங்கள் குடும்பங்களில் நோய் வரும்போது அவரை அழைத்துச் சென்று சிகிச்சை செய்வித்தனர். கடவுள் அவர் முயற்சியை வாய்க்கச் செய்தார். சில வேளைகளில் நோயாளிகளை தம் வீட்டிற்கே கொண்டுவருவார். அவர்களை நன்றாகக் கவனித்துச் சிகிச்சை செய்து பூரண சுகமாக்கி அனுப்புவார். CCh 40.2
அம்மையர் குன்றுகளுக்கும் ஏரிகளுக்கும் கடலுக்கும் போய் தம் களைப்பை ஆற்றி, ஓய்ந்திருந்து, பொழுது போக்கி பயன் அடைவதுண்டு. தம் நடுப்பிராயத்தில் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் அச்சகத்தின் அண்மை யில் குடியிருந்தார். அவ்வச்சகத்தார் ஒரு நாள் ஓய்ந்திருந்து பொழுதுபோக்கவேண்டும் என்று தீர்மானித்து தங்களுடன் அம்மையாரும், அவர் குடும்பத்தினரும், அவர் காரியாலத்தில் வேலை செய்கிறவர்களும் சேர்ந்துகொள்ளவேண்டினார். அம்மையார் அதை ஒப்புக்கொண்டார். அவ்வேளை அவர் கணவர் மிஷன் அலுவலாக தம் நாட்டின் கீழ்ப் பகுதிக்குப் போயிருந்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் அன்றைய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். CCh 40.3
கடற்கரையில் உட்கார்ந்து நண்பகல் உணவு மகிழ்வுடன் உண்ட பின் யாவரும் ஒரு தோணியில் ஏறி சான்பிரான்சிஸ்கோ விரிகுடாவில் உல்லாசமாகப் போனார்கள். அத்தோணியின் மாலுமி ஏழாம் நாள் அட்வெந்து சபையைச் சேர்ந்தவர். பிற்பகல் மிகவும் இன்பமாய் இருந்ததால் சமுத்திரத்தில் சிறிது தூரம் போகுமாறு மாலுமியிடம் கேட்டார். மாலுமி அப்படியே செய்தார். அன்று கடலிற் சென்ற அனுபவத்தைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார். CCh 41.1
“அலைகள் உயர்ந்து எழும்பி எங்களை மேலும் கீழும் அசையச் செய்தது. என் உணர்ச்சி பொங்கி வழிந்தது. அதை விரித்துரைக்க என்னால் இயலாது. அது சொல்லில் அடங்காது. அவ்வளவு மேன்மையாக இருந்தது. நீர்த்திவலைகள் எங்கள் மேல் விழுந்தன. கோல்டன் கேட்டுக்கு (Golden Gate) வெளியே காற்றுக் கடுமையாக வீசியது. என் வாழ் நாளில் இதைப் போன்ற இயற்கை இன்பத்தை என்றும் நான் நுகர்ந்ததில்லை.” CCh 41.2
மாலுமியின் கவனமுள்ள கண்களையும் அவர் கட்டளைப்படி செயல்புரிய ஆயத்தமாயிருந்த சிப்பந்திகளையும் கண்டு அம்மையர் பின்வருமாறு சிந்திக்கலானார். CCh 41.3
“கடவுள் காற்றைத் தமது கையில் வைத்திருக்கிறார். தண்ணீரை அடக்கி வைத்திருப்பவரும் அவரே. இந்த விசாலப் பஸிபிக் நெடுங்கடலில் நாங்கள் சிறு நீர்த்துளிகள்போல் இருக்கிறோம். இச்சிறிய தோணி அலைகளோடு மல்லுக்கட் டுகிறது. இதைக் காக்கும்படி கடவுள் தம் பரம தூதர்களை உன்னதத்திலிருந்து அனுப்பி இருக்கிறார். கடவுள் கிரியைகள் எவ்வளவு ஆச்சரியம்! அவை நம் அறிவுக்கு எட்டாதவை. அவர் ஒரே நோக்கில் உயர இருக்கும் வானங்களையும், கீழே இருக்கும் சமுத்திரத்தின் நடுமையத்தையும் காண்கிறார். CCh 41.4
உவைட் அம்மையார் ஆரம்ப முதலே எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கக் கற்றுக்கொண்டார். நான் எப்பொழுதேனும் மன வருத்தத்துடன் சோர்வுற்று முணுமுணுத்துக் கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் செய்யாமல் இருந்ததற்கு இறைவன் மேல் எனக்குள்ள நம்பிக்கையே காரணம். கிறிஸ்துவப் பண்புகளும், கிறிஸ்துவுக்கு தொண்டுசெய்தலும், வருத்தமும், சோர்வும், கவலையும் தரக் கூடியவை என்று எண்ணுவது தவறு. மனப்பூர்வமாகக் கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எப்பொழுதும் இன்பம் தரக்கூடியயே. அவரை அண்டி வாழ்வோர் மன வருத்தம் அடையார் என்று அவர் கூறியுள்ளார். CCh 42.1
இன்னொரு தடவை அவர் எழுதினார். மன மகிழ்ச்சிக்கும் கிறிஸ்துவப் பண்புகளுக்கும் தொடர்பு இல்லை என்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறு. பரலோகம் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்த இடம். நாம் பிறரைக் கண்டு புன்னகை புரிந்தால், அவர்களும் புன்னகை செய்வர்: நாம் அவர்களிடம் பட்சமாகப் பேசினால் அவர்களும் பட்சமாகப் பேசுவார்கள். இது அவர்கள் கண்ட உண்மை. CCh 42.2
அம்மையார் மன அருத்தம் அடைந்த வேளைகளும் உண்டு. அவர் ஆஸ்திரேலயாவுக்குச் சென்ற சில நாட்களுக்குப் பின் வியாதிப்பட்டு படுக்கையில் இருந்தார். ஓர் ஆண்டு வரை இவ்வாறு அவதிப்பட்டார். இரவு தூக்கமும் குறைவு. நம் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். CCh 42.3
“நான் எவ்வகை உதவியும் இல்லாமல் இருந்தேன். ஆழ்ந்த பெருங்கடல் தாண்டி ஏன் தான் இங்கு வந்தேன் என்று நினைத்து, முகுந்த துக்கம் அடைந்தேன். நான் ஏன் அமெரிக்காவில் இருந்திருக்கக்கூடாது? இங்கு வந்துசேர எவ்வளவு பணம் செலவழிந்தது! இங்ஙனம் பெருஞ் செலவு செய்துகொண்டு நான் இவ்விடம் ஏன் இருக்க வேண்டும்! பல தடவை இவ்வித எண்ணங்களால் வாடினேன். படுக்கையில் குப்புறக்கிடந்தது, தலையணையில் முகத்தை மறைத்து கொண்டு அழ நினைப்பேன் ஆனால் நான் அழுகைக்கு இடம் கொடுக்கவில்லை. ஒரு நாள் எனக்குள்ளேயே உரையாடினேன்:- CCh 42.4
“எலன்! இது என்ன? ஜெனரல் கான்பரன்ஸ் (General Conference) போகச் சொல்லும் இடத்திற்குப் போவது உன் கடமை என்று எண்ணித்தானே ஆஸ்த்ரேலியாவிற்கு வந்தாய்? CCh 43.1
“ஆம்” CCh 43.2
“இதற்கு முன் உன்னைக் கேட்டபொழுது, நீ இப்படிச் செய்யவில்லையா?” CCh 43.3
“அப்படியானால், உன்னைக் கைவிட்டுவிட்டார்கள் என நினைத்து ஏன் மனச் சோர்வு அடைய வேண்ட்சும்? இது சத்துருவின் செயல் அல்லவா?” CCh 43.4
“ஆம், இது அவனுடைய செயல்தான்.” CCh 43.5
“உடனே எழுந்து என் கண்ணீரைத் துடைத்தேன். இது போதும். இனிமேல் ஒருபோதும் வாழ்க்கையின் இருண்ட பகுதியை நோக்கேன். நான் இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி. என் ஆத்துமாவைக் காக்கும் பொறுப்பு எனக்காக உயிர்விட்ட என் இரட்சகருடையது என்று சொல்லிக்கொண்டேன்.” CCh 43.6
“பின்னும் அவர் என் ஆண்டவர் என்னை நல்வழியில் நடத்துவார் என்று நம்பினேன். அதற்குப் பின்னும் எட்டு மாதங்கள் எவ்வகை உதவியும் இல்லாதிருந்தும் நான் மனம் தளரவும் சந்தேகம் கொள்ளவும் இல்லை. இது என் நன்மைக்காகவும், இந்நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இறைவன் வகுத்துள்ள திட்டத்தில் ஒரு பகுதி என்று எண்ணுகிறேன். அது எப்படி என்றும், ஏன் என்றும், விரித்துரைக்க என்னால் இயலாது. ஆனால் அதை நான் நம்புகிறேன். என் துன்பத்திலும் இன்பம் அடைகிறேன். என் பரம தந்தையை நம்புகிறேன். அவர் அன்பில் எள்ளளவும் ஐயம்கொள்ளேன். CCh 43.7
அம்மையார் தம் வாழ்க்கையின் இறுதிப் பதினைந்து ஆண்டுகளும் காலிபோர்னியாவிலுள்ள தம் இல்லத்தில் தங்கினார். முதுமை எய்தியபோதும், தம் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்தார். தம்முடைய வேலையில் தமக்கு உதவி செய்த குடும்பங்களின் நலன்களை நாடினார். நாள்தோறும் நேரத்தோடு படுக்கப்போவார். பாதி இரவு சென்றதும் எழுந்து, எழுதவேண்டியவைகளை எழுதுவார். மழை குளிர் இன்றி இன்பமுள்ள நாளாக இருந்தால் - வேறு வேலைகள் இல்லாவிடில் நாட்டுப்புறங்களுக்குச் சென்று, தோட்டத்தில் அல்லது வீட்டுவாசலில் நிற்கும் தாய்மாருடன் உரையாடுவார். அங்ஙனம் உரையாடும்பொழுது உணவோ உடையோ குறைவுபட்ட குடும்பங்களைக் கண்டால், உடனே தம் வீட்டிற்கு வந்து அங்கிருப்பவைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குக் கொடுப்பார். அம்மையார் இறந்து நெடுநாள் சென்ற பின்னும், அப்பிர தேசங்களில் உள்ளவர்கள், அவரை, எப்பொழுதும் இயேசுவின் அன்பைக் கூறும் இனிய மூதாட்டியார் எனப் பெருமையாகப் பேசுவார்கள். CCh 44.1
அவர் இறுதி காலத்தில் அவர் வாழ்க்கைக்கு ஆதாரமாகச் சிற்சில வசதிகள் இருந்ததே அன்றி, வேறு எதுவும் இல்லை, தமக்காக அவர் ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. பிறர் தம்மை முன்மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை. மற்றவர்களைப்போல் அவரும் ஒரு ஏழாம் நாள் அட்வென்றிஸ்தராகவே இருந்தார். உயிர்த்தெழுந்த இரட்சகரின் புண்ணியங்களில் நம்பிக்கை கொண்டு மகிழ்ந்தார் - - - - - - - ஆண்டவரின் பணியைச் செய்தார். முரண்படாத கிறிஸ் தவ பண்புடனும், இருதய நம்பிக்கையுடனும் தன் ஜீவிய ஓட்டத்தை முடித்தார். CCh 44.2