கிறிஸ்தவச் சேவை

5/289

கிறிஸ்தவக் கூட்டுப்படைகள்

விசுவாச சகோதர, சகோதரிகளே, நான் என் சகோதரனுக்குக் காவலாளியா?’ என்கிற கேள்வி உங்களுடைய உள்ளத்தில் எழு கிறதா? நான் தேவனுடைய பிள்ளை என்று சொல்வீர்களானால், நீங்கள் உங்கள் சகோதரனுக்குக் காவலாளிதான். எந்தெந்த ஆத்து மாக்களுக்கு இரட்சிப்பிற்கான வழிவகையாக திருச்சபை திழ்ந்திருக்க முடியுமோ, அந்த ஆத்துமாக்கள்குறித்து திருச்சபையிடம் தான் தேவன் கணக்கு கேட்பார். 5 TamChS 23.4

உபத்திரவத்திலும் துக்கத்திலும் சோதனையிலும் இருக்கிறவர்களுக்கு ஊழியம் செய்யத் தகுதியான சபையை ஸ்தாபிக்கும்படி விலைமதிப்பற்ற தம் ஜீவனையே இரட்சகர் கொடுத்தார். விசுவாசக் கூட்டத்தார் ஏழைகளாக, படிக்காதவர்களாக, பிரபலமாகாதவர் களாக இருக்கலாம்; ஆனால், வீட்டிலும் சமுதாயத்திலும் தூரமான இடங்களிலும் அவர்கள் ஊழியம் செய்யலாம். நித்திய காலம் வரைக்குமான நீண்ட தாக்கத்தை அவர்கள் உண்டாக்க முடியும். 1 TamChS 24.1

கிறிஸ்துவின் சபையானது பெலவீனமும் குறைகளும் உள்ளதாக இருக்கலாம்; ஆனால், பூமியில் அதன்மேல்தான் அளவற்ற தம் அக்கறையை அவர் பொழிகிறார். சபைதான் அவருடைய கிருபையின் காட்சியரங்கம்; இருதயங்களை மாற்றத்தக்க தம்முடைய வல்லமையை அங்கு வெளிப்படுத்துவதில் அவர் மகிழ் கிறார். 2 TamChS 24.2

கிறிஸ்துவின் ஊழியப்பணியை யாராவது நிறைவேற்றியாக வேண்டும்; பூமியில் அவர் ஆரம்பித்த பணியை யாராவது முன் னெடுத்துச் செல்லவேண்டும்; இந்தச் சிலாக்கியம் திருச்சபைக்கு அருளப்பட்டுள்ளது. இதற்காகவே திருச்சபை ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. அப்படியிருந்தும், சபை அங்கத்தினர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? 3 TamChS 24.3

திருச்சபையானது தனக்கு நியமிக்கப்பட்ட கடமையைச் செய்யவேண்டும்; திருச்சபை அமைந்திருக்கும் பகுதியில் மெய் யான சீர்திருத்தத்தை நிலைத்திருக்கச் செய்வது சபையின் வேலை; பயிற்சிபெற்றவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களுமான ஊழியர் களை புதிய களங்களுக்கு அனுப்பி விடவேண்டும். 4 TamChS 24.4

தெசலோனிக்கேய விசுவாசிகள் உண்மையுள்ள ஊழியப்பணியாளர்களாக இருந்தார்கள். சொல்லப்பட்ட சத்தியங்கள் புதியவர்களின் இருதயங்களை மாற்றின; அந்த ஆத்துமாக்கள் விசுவாசி களுடன் சேர்க்கப்பட்டார்கள். 5 TamChS 24.5

பன்னிருவர் நியமிக்கப்பட்டதுதான் திருச்சபை ஒழுங்கமைப் பட்டதின் முதல் படி; கிறிஸ்து சென்றபிறகு அவருடைய பணியை திருச்சபை இந்தப் பூமியில் செய்யவேண்டியிருந்தது. 6 TamChS 24.6

தேவனுடைய சபை என்பது பரிசுத்த ஆவியானவரைப்பெற்று, பல்வேறு வரங்கள் நிரம்பிய, பரிசுத்த வாழ்க்கையின் காட்சியரங்க மாகும். அங்கத்தினர்கள் யாருக்கு உதவுகிறார்களோ அவர்கள் சந்தோஷத்தில் அங்கத்தினர்கள் தங்கள் சந்தோஷத்தைக் காண வேண்டும். தேவ நாமம் மகிமைப்படும்படி சபையின்மூலம் அவர் நிறைவேற்ற திட்டமிடுகிற பணி மேன்மையானது. 1 TamChS 24.7

நம்முடைய வேலை என்னவென்பது வேதவசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவரோடும், திருச்சபைகள் திருச்சபையோடும் இணைந்திருக்கவேண்டும். மனித கருவிகள் தேவனோடு ஒத்துழைக்கவேண்டும். ஒவ்வொரு ஏதுகரமும் பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலும் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். தேவகிருபைபற்றிய நற்செய்திகளை உலகிற்கு அறிவிப்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். 2 TamChS 25.1

‘காலப்போக்கில் அறுவடைசெய்யலாம்’ என்கிற நம்பிக்கையுடன் ஆன்மிகப் பண்படுத்தல் பணியைச் செய்வதில் நம் சபைகள் ஒத்துழைக்கவேண்டும். நிலம் கடினமாயிருக்கிறதா? தரிசு நிலத்தை உழுது, நீதியின் விதைகளை விதைக்கவேண்டும். தேவனுக்குப் பிரியமான ஆசிரியர்களே, இந்த வேலையைச் செய்தால் பலன் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டு, வேலைசெய்யத் தயங்கவேண்டாம். வேலை செய்யச்செய்ய வளர்ச்சி இருக்கும். 3 TamChS 25.2

மனிதர்களின் இரட்சிப்பிற்காக தேவன் நியமித்திருக்கும் அமைப்புதான் திருச்சபை. சேவைக்காக அது ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. உலகத்திற்கு நற்செய்தியைக் கொண்டு செல்வதே அதன் ஊழியப்பணி. தேவன் பூரணமானவர், போதுமானவர் என் பது அவருடைய திருச்சபையின்மூலமாக உலகிற்குப் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் ஆதிமுதலே தேவ திட்டமாக இருக்கிறது. அந்தகாரத்திலிருந்து தமது ஆச்சரியமான ஒளிக்குள் வரும்படி தேவன் அழைத்துள்ள விசுவாசிகள் யாராக இருந்தாலும், அவர்கள் அவருடைய மகிமையை வெளிப்படுத்திக் காட்டவேண்டும். 4 TamChS 25.3

இக்காலத்திற்குரிய மகத்தான பணியைச் செய்வதாலோ, நம் முடைய செல்வாக்காலோ அப்படி ஒன்றும் பயனில்லை என்று திருச்சபையார் எவரும் எண்ணக்கூடாது. சகோதரரே,பணிசெய்யப் புறப்படுங்கள். முகாம்கள், எழுப்புதல் கூட்டங்கள், நிர்வாகக் கூட்டங்கள் ஆகியவற்றின்மேல் மட்டும் தேவன் விசேஷித்த தயவைக் காட்டுவதில்லை; சுயநலமற்ற அன்பினால் செய்யும் மிகச் சிறிய பணிகூட அவருடைய ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்பட்டு, அதன் மகத்தான பலனைப் பெறும். உங்களால் முடிந்ததைச் செய் யுங்கள்; தேவன் உங்களுடைய திறனை அதிகரிப்பார். 5 TamChS 25.4