கிறிஸ்தவச் சேவை

6/289

சாட்சிகள்

நாம் கிறிஸ்துவின் சாட்சிகள். உலகப்பிரகாரமான நலன்களும் திட்டங்களும் நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சிக் கொள்ள நாம் அனுமதிக்கக்கூடாது. 1 TamChS 26.1

‘எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்: நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன் உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள். நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக் கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன் படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.’ 2 TamChS 26.2

உலகத்திலுள்ளவர்கள் பொய்யான தேவர்களை வணங்குகிறார்கள். அவர்கள் வணங்குகிற சிலைகளை இழிவாகப் பேசி அல்ல; அதைவிட மேலான ஒன்றை நோக்கிப்பார்க்கச் செய்து, பொய்த் தொழுகையிலிருந்து அவர்களைத் திருப்பவேண்டும். தேவனுடைய நற்குணங்களை அவர்களுக்குச் சொல்லவேண்டும். “நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 TamChS 26.3

தேவனுடைய நகரத்திற்குள் பிரவேசிக்க விரும்புகிறவர்கள் பூமியில் வாழும்போது, தங்களுடைய செயல்பாடுகள் அனைத்தி லும் கிறிஸ்துவை முன்னிறுத்துகிறவர்களாக இருக்கவேண்டும். அவர்களை இதுதான் கிறிஸ்துவின் தூதவர்களாக, அவருடைய சாட்சிகளாக உருவாக்குகிறது. சகலவிதமான தீயபழக்கங்களுக்கும் எதிராகவும் அவர்கள் தெளிவாகவும் உறுதியாகவும் சாட்சிபகர வேண்டும்; உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை பாவிகளுக்குச் சுட்டிக்காட்டவேண்டும். 4 TamChS 26.4

தாங்கள் கண்டதையும் கேட்டதையும் குறித்து உலகத்திற்கு அறிவிக்கும்படி கிறிஸ்துவின் சாட்சிகளாக சீடர்கள் புறப்பட்டுச் செல்லவிருந்தார்கள். மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டபணிகளில் இதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. கிறிஸ்துவுக்கு முதலிடம்; அடுத்து இந்த ஊழியம்.மனிதர்களின் இரட்சிப்புக்காகதேவனோடு சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். 5 TamChS 26.5

தெய்வீக ஆசிரியர் சொல்கிறார்: “பாவத்தைக் குறித்துப் போதிக்கவும் உணர்த்தவும் என்னுடைய ஆவியால் மட்டுமே முடியும். மற்றவை தற்காலிகத் தாக்கத்தைத்தான் ஏற்படுத்த முடியும். மனிதனின் நேரம், பணம், அறிவுத்திறன் எல்லாம் எனக்கு உரியவை. இது முற்றிலும் உண்மை என்பதை வலியுறுத்தி, உலகம் முழுவதிலும் மனிதர்கள் எனக்குச் சாட்சிகளாக இருப்பார்கள்.” 1 TamChS 26.6

கிறிஸ்து உண்மையுள்ளவர் என்று நாம் அறிக்கையிடுவதுதான் அவரை உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு பரலோகம் தெரிந்து கொண்ட வழியாகும். முற்காலப் பரிசுத்தவான்கள் சொல்லியிருக்கிறபடியே தேவனுடைய கிருபையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்; ஆனாலும் நம்முடைய சொந்த அனுபவம்பற்றிய சாட்சி தான் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். நமக்குள்ளாக தெய்வீகவல்லமை செயல்படுவதை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் தேவனுக்குச் சாட்சிகளாக விளங்குகிறோம். ஒவ்வொரு நபருக்கும் மற்றவர்களைவிட தனித்தன்மையான ஒரு வாழ்க்கை இருக்கிறது. மற்றவர்களைவிட தனித்தன்மையான அனுபவங்கள் இருக்கின்றன. நம் தனிப்பட்ட அடையாளத்தோடு நம் துதிகள் அவரிடம் எழும்பிச்செல்வதை தேவன் விரும்புகிறார். அவருடைய கிருபை யின் மகிமையைக் குறித்து மெய்மனதோடு துதிப்பதும், அதோடு கூட கிறிஸ்துவைப் போன்று வாழ்வதும், தடுத்து நிறுத்தமுடியாத வல்லமையாக விளங்கும். ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவை கிரியை செய்யும். 2 TamChS 27.1

பூமி முழுவதும் அவருக்குச் சாட்சிகள் இருக்கவேண்டும். இல்லையெனில்,அவர் தமது சித்தம் குறித்த அறிவையும் தம் கிருபையின் மகத்துவங்களையும் அவிசுவாச உலகத்தாருக்கு வெளிப் படுத்தமுடியாது. இயேசு கிறிஸ்துவின்மூலம் மகத்தான இரட்சிப்பில் பங்குபெறுகிறவர்கள் அவருக்கு ஊழியப்பணியாளர்களாக இருக்கவேண்டும்; உலகம் முழுவதிலும் விளக்குகளாக இருக்க வேண்டும்; மக்களுக்கு அடையாளங்களாக இருக்கவேண்டும்; மக்களால் அறியப்பட்டு வாசிக்கப்படுகிற ஜீவனுள்ள நிருபங்களாக இருக்கவேண்டும்; இரட்சகரின் வருகையை சமீபமென்று தங்கள்விசுவாசத்தாலும் கிரியைகளாலும் சாட்சி சொல்ல வேண்டும்; தேவனுடைய கிருபையை தாங்கள் விருதாவாகப் பெற்றிருக்கவில்லை என்று வெளிப்படுத்தவேண்டும்; இதுவே அவருடைய திட்டம். வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாகும்படி மக்களை எச்சரித்தாகவேண்டும். 3 TamChS 27.2

அவருடைய பரிசுத்தமும் தூய்மையுமான வாழ்க்கையை சீடர்கள் தியானித்தபோது, கிறிஸ்துவுடைய குணத்தின் பெருமைக்கு தங்களுடைய வாழ்க்கை சாட்சியாக விளங்க முடிந்தால் எந்தத் தியாகமும் பெரிதாக இருக்காதென்றும், எந்த வேலையும் கடினமாக இருக்காதென்றும் உணர்ந்தார்கள். “ஓ, கடந்துபோன மூன்று வருடங்களும் மீண்டும் வாழக்கிடைத்தால், எவ்வளவு வித்தியாசமாகச் செயல்படலாம்” என்று நினைத்தார்கள்! மீண்டும் ஆண்டவரைப் பார்க்கமுடிந்தால், அவரை தாங்கள் அதிகமாக நேசிப்பதைக் காட்டுவதற்கும், தங்கள் அவிசுவாசமான வார்த்தை அல்லது செய்கையால் அவரைத் துக்கப்படுத்தியதற்காகதாங்கள் உண்மையிலேயே வருந்துவதைக் காட்டுவதற்கும் மும்முரமாக முயலலாம்! ஆனால், தாங்கள் மன்னிக்கப்பட்டதை உணர்ந்தபோது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உலகத்தாருக்கு முன்பாக அவரை தைரியத்தோடு அறிக்கையிட்டு, தங்களால் முடிந்தமட்டும் தங்கள் அவிசுவாசத்திற்குபிராயச்சித்தம் தேட அவர்கள் தீர்மானித் தார்கள். 1 TamChS 27.3

பிசாசுபிடித்து, குணமாக்கப்பட்ட அந்த இருவர்தாம் முதல் ஊழியப்பணியாளர்கள். தெக்கப்போலி பகுதியில் நற்செய்தி சொல்ல கிறிஸ்து அவர்களை அனுப்பினார். கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்கும் சிலாக்கியம் ஒரு சில கணமே பெற்றிருந்தார்கள். அவர் செய்த ஒரு பிரசங்கத்தைக்கூட அவர்கள் கேட்டதில்லை. தினமும் கிறிஸ்துவுடனே இருந்த சீடர்கள் மற்றவர்களுக்குப் போதிக்க முடிகிற அளவுக்கு அவர்களால் போதிக்க முடியாது. ஆனால், இயேசுதான் மேசியா என்பதற்கு அவர்களுடைய சொந்த வாழ்க்கைதானே சாட்சியாக இருந்தது. தங்களுக்குத் தெரிந்ததையும், தாங்கள் பார்த்ததையும், கேட்டதையும், அனுபவித்த கிறிஸ்துவின் வல்லமையையும் அவர்கள் சொல்லமுடிந்தது. எவருடைய இருதயங்கள் தேவ கிருபையினால் தொடப்பட்டிருக்கின்றனவோ அவர்கள் ஒவ்வொருவரும் இதைத்தான் செய்வார்கள். பிரியமான சீடனாகிய யோவான் இப்படி எழுதுகிறார்: ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப் பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். கிறிஸ்துவின் சாட்சிகள் தாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் உணர்ந்தவற்றையும் அறிவிக்கவேண்டும். நாம் ஒவ்வொரு அடியிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களானால், அவர் நம்மை நடத்தினவிதம் குறித்து நம்மால் மிகச் சரியாகச் சொல்லமுடியும். அவருடைய வாக்குறுதிகள் மெய்யானவைதாமா என்று நாம் சோதித்து, உண்மைதாம் என்று அறிந்ததைச் சொல்ல முடியும். இப்படிப்பட்ட சாட்சியைப் பகிரவே நம் ஆண்டவர் அழைக்கிறார். இத்தகைய சாட்சி இல்லாமல்தான் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது. 1 TamChS 28.1