கிறிஸ்தவச் சேவை
ஆரம்ப வருடங்களில்
சிறுவர்களை ஊழியர்கள் இரக்கத்தோடும் பணிவன்போடும் நடத்தவேண்டும். வருங்காலத்தில் பெரிய ஆண்களாக, பெண் களாகவரப்போகிற குட்டிப்பிள்ளைகள், ஆண்டவருடைய குடும்பத்தின் இளம் அங்கத்தினர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். எஜமானுக்கு மிகவும் பிரியமானவர்களாக அவர்கள் இருப்பதால், அவர்களுக்கு சரியான வழியைக் காட்டி, ஒழுங்குபடுத்தினால், தங்கள் இளம்பிராயத்திலேயே அவருக்காக சேவைசெய்வார்கள். 1 TamChS 45.3
வாலிபர்களைப் புறக்கணிக்கக்கூடாது; ஊழியப்பணியிலும் பொறுப்பிலும் அவர்கள் பங்கெடுக்கவேண்டும். பிறருக்கு உதவுவதிலும், ஆசீர்வாதமாக இருப்பதிலும் அவர்களுக்குப் பங்கிருப்பதை அவர்கள் உணரவேண்டும். சிறுவர்களும்கூட தங்களைவிட வசதிகுறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு சிறு சிறு அன்பின் செயல்களை இரக்கத்தின் செயல்களைச் செய்யவேண்டும்; அதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். 2 TamChS 46.1
நேரத்தின் மதிப்பையும் அதை சரியாகப் பயன்படுத்துகிற விதத்தையும் பெற்றோர் தங்கள்பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தேவனுக்கு கனத்தையும் மனிதர்களுக்கு ஆசீர்வாதத்தையும் கொண்டுவரும்படி ஏதாவது செய்வதே சிறந்தது என்பதை அவர்களுக்குப் போதிக்கவேண்டும். சிறு வயதிலேயே அவர்கள் தேவனுடைய ஊழியப் பணியாளர்களாக விளங்கமுடியும். 3 TamChS 46.2