கிறிஸ்தவச் சேவை
ஆரோக்கியம்
நன்மை செய்வதே வியாதிக்கான மிகச் சிறந்த நிவாரணம். இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள் தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டும்; தாம் அவர்களுக்குப் பதிலளிப்பதாக தேவன் உறுதியளித்திருக்கிறார். வறட்சியான காலத்தில் அவர்களுடைய ஆத்துமாதிருப்தியாகும்; அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள். 3 TamChS 353.2
இவர்கள் தேவனோடும்கிறிஸ்துவோடும் பரிசுத்ததூதர்களோடும் ஐக்கியப்பட்டு, பரலோகச் சூழலால் சூழப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சூழலானது சரீரத்திற்கு ஆரோக்கியத்தையும், அறிவுத் திறனுக்கு ஆற்றலையும், ஆத்துமாவுக்குச் சந்தோஷத்தையும் கொண்டு வருகிறது. 4 TamChS 353.3
மற்றவர்களுக்கு நன்மை செய்வதால் கிடைக்கிற சந்தோஷமானது உணர்வுகளுக்குப் புதுத்தெம்பைக் கொடுக்கிறது; அது நரம்புகளூடே மின்சாரம் போலப் பாய்ந்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது; சரீர, மன நலனைத் தூண்டுகிறது. 5 TamChS 353.4