கிறிஸ்தவச் சேவை

281/289

ஆசீர்வாதம்

கிறிஸ்துவுக்காக ஏறெடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் நமக்குத்தானே ஆசீர்வாதமாக முடியும். 5 TamChS 352.4

செய்யப்பட்ட ஒவ்வொரு கடமையும், இயேசுவின் நாமத்தினால் ஏறெடுக்கப்பட்ட ஒவ்வொரு தியாகமும் எண்ணிமுடியாத பிரதிபலன்களைக் கொண்டு வருகிறது. கடமையைச் செய்யும்போது, தேவன் பேசுகிறார்; தம் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். 6 TamChS 352.5

இரட்சகருக்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்கு நாம் இந்த உலகத்தில் வாழவேண்டும். நாம் மற்றவர்களைப் புண்படுத்தினால், நம்மை நாமே புண்படுத்துகிறோம். நாம் மற்றவர்களை ஆசீர்வதித்தால், நம்மையும் நாம் ஆசீர்வதிக்கிறோம்; நன்மையான ஒவ்வொரு கிரியையும் நம் இருதயங்களில் தானே பிரதிபலிக்கிறது. 7 TamChS 352.6

மற்றவர்கள்மேல் வீசப்பட்ட ஒவ்வொரு ஒளிக்கதிரும் நம் சொந்த இருதயங்களிலும் பிரதிபலிக்கும். துக்கத்தில் இருப்போரிடம் பேசப்பட்ட பரிவும் அன்புமான ஒவ்வொரு வார்த்தையும், ஒடுக்கப்பட்டோரை விடுவிப்பதற்கான ஒவ்வொரு செயலும், நம் சகமனிதர்களுடைய தேவைகளைச் சந்திப்பதற்குச் செலவிட்ட ஒவ்வோர் ஈவும் அவற்றைச் செய்த மனிதருக்கே ஆசீர்வாதமாக முடியும். இவ்வாறு ஊழியம் செய்கிறவர்கள் பரலோகத்தின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள்; இவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவார்கள். 1 TamChS 352.7

கிறிஸ்துவின் வருகையில் இறுதி மகா பிரதிபலன் கொடுக்கப்படும் என்றாலும், மெய்மனதோடே தேவனுக்குச் செய்கிற சேவை இவ்வாழ்க்கையில்தானே பிரதிபலனைப் பெறுகிறது. தடைகளையும் எதிர்ப்பையும் கசப்பையும் மனதை உடைக்கிற ஏமாற்றங்களையும் ஊழியர் சந்தித்தாகவேண்டும். தன் கடின உழைப்பின் பலனை அவர் காணாமல் இருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றின் மத்தியிலும், தன் பிரயாசத்திற்கேற்ற ஆசீர்வாதமான பிரதிபலன் கிடைப்பதைக் கண்டு கொள்வார். மனித இனத்திற்கான சுயநலமற்ற சேவையில் தேவனிடம் தங்களை அர்ப்பணிக்கிற அனைவரும் மகிமையின் ஆண்டவரோடே ஒத்துழைக்கிறார்கள். இதை நினைத்தாலே சகல கடின பிரயாசங்களும் இனி மையாகின்றன; சித்தம் உறுதிப்படுகிறது; என்ன நேரிடுவதாக இருந்தாலும் ஆவியைத் திடப்படுத்துகிறது. 2 TamChS 353.1