கிறிஸ்தவச் சேவை
இஸ்ரவேலில் முதலாவது ஆசாரியர்கள் இணங்கினார்கள்
நெகேமியாவினுடைய வைராக்கியத்தின் ஆவியையும் ஊக்கத்தின் ஆவியையும் முதலாவது பெற்றவர்கள் இஸ்ரவேலின் ஆசாரியர்கள் தாம். செல்வாக்குமிக்க பதவியில் அவர்கள் இருந்ததால், அந்தப்பணியை ஊக்குவிக்கவோ தடுக்கவோ அதிகம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். துவக்கத்திலேயே அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தது, அந்தப் பணியின் வெற்றியில் அதிகப் பங்காற்றியது. பரிசுத்தமான ஒவ்வொரு முயற்சியிலும் இவ்வாறே செய்யப்படவேண்டும். திருச்சபையில் பொறுப்பும் செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்கள் தேவபணியில் முன்னணியில் நிற்கவேண்டும். அவர்கள் தயக்கத்தோடு செயல்பட்டால், மற்றவர்கள் கொஞ்சங்கூட செயல்படமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய ‘உற்சாகம் அநேகரை எழுப்பி விடும்.’ அவர்களுடைய விளக்கு பிரகாசமாக எரியும்போது,அந்தத் தீபம் ஓராயிரம் விளக்கு களை எரியவைக்கும். 2 TamChS 230.1