கிறிஸ்தவச் சேவை
சத்தியத்தின் வெற்றி
தேவபிரமாணத்தை அவநம்பிக்கை கேலிசெய்யலாம்; பரிகசிக்கலாம்; புறக்கணிக்கலாம். உலகப்பற்றின் ஆவி அநேகரைக் களங்கப்படுத்தி, சிலரைக் கட்டுப்படுத்தலாம்; கடும்பிரயாசத்தாலும், தொடர்ச்சியான தியாகத்தாலும்மாத்திரமே தேவநோக்கம் நிலைகொள்ள முடியும். ஆனாலும், இறுதியில் சத்தியமே மகத்தான வெற்றிபெறும். 3 TamChS 216.2
தேவ பணிபூமியில் இறுதிக்கட்டத்தை அடையும்போது, அவருடைய பிரமாணம் எனும் கொடி மீண்டும் உயர்த்தப்படும். பொய் மார்க்கம் மேலோங்கலாம்; அக்கிரமம் பெருகலாம்; அநேகரின் அன்பு தணியலாம்; கல்வாரிச் சிலுவை மறக்கப்படலாம்; மரணத்தின் கசப்பைப்போல, அந்தகாரம் இவ்வுலகெங்கும் பரவலாம்; பொது மக்களின் எண்ணங்கள் சத்தியத்திற்கு எதிராக முழு வீச்சில் திரும்பலாம்; தேவ மக்களைக் கவிழ்த்துப்போட சதிமேல் சதி தீட்டப்படலாம். ஆனாலும், மிகவும் இக்கட்டான காலத்தில், மனித கருவிகளை எழச்செய்து, எவராலும் எதிர்பேசமுடியாத செய்தியை எலியாவின் தேவன் அறிவிப்பார். மனித சஞ்சாரமிகுந்த நகரங்களிலும், உன்னதமானவருக்கு விரோதமாகப் பேசுமளவிற்கு மனிதர்கள் செல்கிற இடங்களிலும் கண்டிப்பின் சத்தம்கேட்கும். உலகத்தோடு கூட்டுச்சேரும் சபையைக் கண்டிப்பார்கள்; தேவன் நியமித்த மனிதர்கள் அதைச் செய்வார்கள். மனிதன் ஏற்படுத்தின ஒன்றை விட்டுவிட்டு, மெய்யான ஓய்வு நாளைக்கைக்கொள்ளுமாறு ஆண்களையும் பெண்களையும் ஊக்கத்தோடு அவர்கள் அழைப் பார்கள். 1 TamChS 216.3