கிறிஸ்தவச் சேவை

160/289

பின்பற்றவேண்டிய ஞானமான வழி

ஞாயிறு சட்டங்களை எதிர்க்கும்போது, அவற்றை கட்டாயமாக்க முயல்கிற மதவெறியர்கள் தருகிற உபத்திரவம் இன்னும் அதிகரிக்கும். சட்டத்தை மீறுகிறவர்கள் என்று அவர்கள் உங்களை அழைக்க வாய்ப்பே கொடுக்காதீர்கள். மனிதர்களுக்கோ தேவனுக்கோ பயப்படாதவர்களைக் கட்டுப்படுத்தும்போது, அதனால் எந்தப்பயனுமில்லை என்பதைக் காண்பார்கள்; ஞாயிறு ஆசரிப்பை அவர்களிடம் கட்டாயப்படுத்துவதில் பிரயோஜனமே இருக்காது. கரங்களில் வேதாகமத்தை ஏந்தி, நற்செய்தி ஊழியத்தை சிறப்பாகச் செய்யுங்கள்; தன் நோக்கத்தை தானே கெடுத்துவிட்டதை எதிரி காண்பான். பாவத்திற்கு ஏதுவான ஒரு வேலையைச் செய்யாமல் இருப்பதாலும், அதேசமயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேலையைச் செய்வதாலும் சமாதானத்தைக் காத்துக்கொள்ளலாம் என்பது ஞானம்; இதை உணர்ந்திருப்பதால் ஒருவர் மிருகத்தின் முத்திரையைப் பெறுவதில்லை. 4 TamChS 215.3

ஞாயிறு முழுவதையும் நற்செய்தி ஊழியம் செய்ய ஒதுக்கினால், செவந்த் டே அட்வென்டிஸ்டுகளை நிந்திப்பதில் மகிழ்கிற சர்வாதிகார மதவாதிகளின் கரங்களிலிருந்து சாட்டை பிடுங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திப்பதிலும் அவர்களுக்கு வேதாகமத்தை விளக்குவதிலும் நாம் ஈடுபடுவதை அவர்கள் காணும்போது, ஞாயிறு சட்டங்களை இயற்றி, நம் பணியைத் தடைசெய்வது தங்களுக்கு பிரயோஜனமாயிராது என்பதை அறிந்துகொள்வார்கள். 5 TamChS 215.4

பல்வேறு ஊழியப்பணிகளைச் செய்வதற்கு ஞாயிற்றுக் கிழமையை ஒதுக்கலாம்; அதனால் ஆண்டவருக்காக அதிகம் சாதிக்க முடியும். அந்நாளில் திறந்தவெளிக் கூட்டங்களும் வீட்டுக்கூட்டங்களும் நடத்தலாம்; வீடு சந்திப்பு ஊழியம் செய்யலாம்; எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதுவதற்கு அந்நாளை ஒதுக்கலாம். முடிந்த வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆவிக்குரிய கூட்டங்கள் நடத்தப்படுவதாக. அதிக ஆர்வத்தைத் தூண்டுபவையாக அக்கூட்டங்களை ஏற்படுத்துங்கள். மெய்யான எழுப்புதலை உண்டாக்கும் பாடல்களைப் பாடுங்கள்; இரட்சகரின் அன்பைப்பற்றி வல்லமையோடும் நிச்சயத்தோடும் பேசுங்கள். இச்சையடக்கம் பற்றியும் மெய்யான ஆவிக்குரிய அனுபவம்பற்றியும் பேசுங்கள். 1 TamChS 215.5

நம் பள்ளி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமையை நற்செய்தி ஊழியங்களுக்கென ஒதுக்கட்டும். அதன்மூலம் எதிரியின் நோக்கங்களைத் தோற்கடிக்கிற திறனை அவர்கள் பெற முடியுமென எனக்கு அறிவுறுத்தப்பட்டது. சத்தியத்தை அறியாதோருக்காக கூட்டங்கள் நடத்துவதற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தங்களோடு அழைத்துச்செல்லட்டும். மற்ற எந்த விதத்திலும் சாதிக்க முடியாததை அவ்விதத்தில் அவர்கள் சாதிக்கலாம். 2 TamChS 216.1